இன்று (ஆகஸ்ட் 25) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 எனவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 93.52 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 93.52 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

See also  வருமான வரி தொடர்பான 5 முக்கிய விதிகள் மாற்றப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்