• பொன்ராம் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதையடுத்து நேற்று விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படம் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு ஓன்றும் வெளியாகியுள்ளது.

    தற்போது சன்பிக்சர்ஸ் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை தயாரித்து கொண்டுயிருக்கிறது. அடுத்ததாக இந்நிறுவனம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன்பிக்ஸர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது .இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ளார்.

  • தமிழ் திரையுலகில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது ஒரே நேரத்தில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா போன்ற பிரபல நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்ற செய்தி அனைவரும் தெரிந்ததே. தற்போது இந்த லிஸ்டில் விஜய்செதுபதியின் திரைப்படமும் இணைந்துள்ளது.
  • தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவரின் நடிப்பில் யாதும் ஊரே யாவரு கேளீர் , மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் ‘லாபம்’ , மாமனிதன், லாபம் , துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது . இதற்கிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். தற்போது விஜய்சேதுபதி இயக்குனர் பொன்ராமுடன் முதன்முறையாக இணைய போகிறார்.
  • இயக்குனர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன்,சீமாராஜா உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இதைதொடர்ந்து தற்போது தனது நான்காவது படத்தின் மூலம் விஜய்சேதுபதியுடன் இணையபோகிறார்.
  • மேலும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள அறிவிப்பிறகு டி.இமான், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இயக்குனர் பொன்ராம் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
  • மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் ‘சேதுபதி’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.