தபால் வாக்கு செலுத்த தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்து 45ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தேர்தல் ஆணையம் இதற்க்கான விண்ணப்பங்களை கடந்த 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை பெறப்பட்டது. தபால் வாக்கு செலுத்த அனுமதி கேட்டு 2 லட்சத்து 44 ஆயிரத்து 922 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அதில் 2770 பேர் காவலர்களும், 33189 பேர் தேர்தல் பணியாளர்களும் உள்ளனர். 49114 பேர் மாற்றுத்திறனாளிகளும், 80 வயதுக்கு மேற்பட்ட முத்த குடிமக்கள் 1 லட்சத்து 59 ஆயிரத்து 849 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம்
அறிந்துள்ளது. தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

See also  தனுஷ் போயஸ் கார்டனில் புதிய வீடு பூஜையில் ரஜினிகாந்த்