தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி 16 ஆம் வரை நடைபெற்றது. தமிழக தேர்தலில் போட்டியிடுவதற்காக 6,319 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வேட்பு மனுக்களில் ஆண்கள் 5,363 பேரும், 953 பேர் பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் திருநங்கைகள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் 450 பேர் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் மீதான பரீசிலனை இன்று நடைபெறுகிறது. இதில் தகுதி உள்ள மனுக்கள் தேர்தடுக்கப்பட்டு மாலையில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்ற விவரம் வெளியிடப்படும்.

வரும் 22ஆம் தேதி மாலைக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கடைசியாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

See also  இன்று தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; பள்ளிக்கு முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்கள்