ஹைலைட்ஸ்:

  • மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்
  • ஏப்ரல்,மே, ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும்
  • தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது கொரோனா இரண்டாம் அலைப் பரவலின்போது மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தற்பொழுது அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூடப் பணியாளர்கள், சி.டி.ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு-ஊக்கத்தொகை

இதன்படி, ஏப்ரல்,மே, ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இதரப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சையின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

See also  Certified emergency medical technician was killed.