Tuesday, 20 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » சினிமா » ‘நெற்றிக்கண்’ படத்தின் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!
சினிமா

‘நெற்றிக்கண்’ படத்தின் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!

எழுத்து:
பகிர்க:
nayanthara vignesh
Summarize this blog post with:

நெற்றிக்கண் படத்திலிருந்து பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அப்டேட் கொடுத்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு எப்பொழுதும் தனி மவுசு தான்.

2011 ஆண்டு கொரிய மொழியில் வெளியான ‘ப்ளைண்ட்’ எனும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். இதை ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தை மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்கியுள்ளார்.

கண் பார்வை இல்லாத ஒரு பெண், தன்னுடைய மற்ற திறமைகளை வைத்து தொடர்ந்து கொலையில் ஈடுபடும் குற்றவாளி ஒருவரை கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் கதையாம்.

இந்நிலையில், நெற்றிக்கண் படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக இப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த பாடலை பிரபல பிண்ணனி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

மேலும் நெற்றிக்கண்ணை தொடர்ந்து, அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

📖

மேலும் வாசிக்க (Also Read)

📢

இந்த பயனுள்ள செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!

WhatsApp Telegram Facebook 𝕏 / Twitter

gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

thalaivar thambi thalaimaiyil
சினிமா

ஜீவா நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ பிப்ரவரி 12 முதல் Netflix-ல்

திரையரங்கில் மெதுவாக பேசுபேசு வழியாக வெற்றி கண்ட ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’(thalaivar thambi thalaimaiyil) படம், இப்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. பிப்ரவரி 12 முதல் படம் Netflix-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.​Contentsமுக்கிய…

📅 12 Feb 2026 ⏱️ 1 நிமிட வாசிப்பு
Kuberaa Official Trailer
சினிமா

குபேரா (Kuberaa) அதிகாரபூர்வ ட்ரைலர் – Kuberaa Official Trailer

🎬 குபேரா அதிகாரபூர்வ ட்ரைலர் (தமிழ்) – தனுஷின் அதிரடி அவதாரம் தனுஷ் தனது கேரியரில் முதன்முறையாக மிகச் சிக்கலான, இருண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரியும் வகையில் குபேரா ட்ரைலர் வெளியாகி…

📅 16 Jun 2025 ⏱️ 2 நிமிட வாசிப்பு