தனிமனித அடையாள அட்டையான ஆதார் கார்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த ஆதார் கார்டு வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது முதல் அனைத்து தேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக மாறி வருகிறது. ஆதார் கார்டு வழங்கப்பட்டு பத்து வருடங்கள் ஆகி விட்டதால் ஆதார் அட்டையில் உள்ள பழைய புகைப்படங்கள் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஆதார் அட்டையில் உள்ள பழைய புகைப்படத்தை எளிதான முறையில் மாற்றிக்கொள்ள முடியும்.

ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற

  • https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் GET Aadhaar பிரிவுக்கு செல்ல வேண்டும்.

  • பிறகு ஆதார் பதிவு அல்லது புதுப்பித்தல் படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • பூர்த்தி செய்த படிவத்தை ஆதார் மையத்துக்கு எடுத்து செல்லவும்.
  • ஆதார் மையத்தில் விழித்திரை, கைரேகைகள் ஆகியவை மீண்டுமாக ஸ்கேன் செய்யப்படும்.
  • இந்த சேவைக்கு 50 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
  • புகைப்படத்தை புதுப்பிக்கும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் URN எண் வழங்கப்படும்.
  • இந்த எண்ணை வைத்து ஆதார் விண்ணப்பத்தை ஆன்லைனில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • 90 நாட்களுக்கு பிறகு ஆதார் அட்டை உங்கள் கைகளில் கிடைக்கும்.
See also  சுற்றுசூழல் பாதுகாப்பு கட்டுரை-Sutru Sulal Pathukappu Katturai In Tamil