ஹைலைட்ஸ்:

  • கல்லூரி மாணவா்களுக்கான மறுதேர்வுகள் மே 17ஆம் தேதிலிருந்து தொடங்கும்.
  • தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக கல்லூரி மாணவர்களால் பருவ தேர்வு எழுத முடியாமல் போனது.
  • பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மாா்ச் 4ஆம் வரை இணையவழித் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவா்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு அட்டவணை பொருந்தும்.

அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவா்களுக்கான மறுதேர்வுகள் மே 17ஆம் தேதிலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தவிர, பள்ளி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பா்- டிசம்பர் மாதங்களில் நடத்த வேண்டிய பருவத்தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி- மாா்ச் மாதங்களில் நடைப்பெற்றது.

கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல பிரச்சனைகள் ஏற்ப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக வளாகக் கல்லூரி மாணவர்களால் பருவ தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் அவர்களுக்கு மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்து இருந்தது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால், மறுதேர்வை ஒத்திவைத்தது அண்ணா பல்கலைக்கழகம்.

தற்போது கடந்த ஆண்டு நவம்பா்- டிசம்பர் மாதங்களின் அரியா் தேர்வு மற்றும் இந்த ஆண்டு அரியா் தேர்வு ஆகிய இரண்டும் மே 17ஆம் தேதிலிருந்து தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இருப்பினும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மாா்ச் 4ஆம் வரை இணையவழித் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவா்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு அட்டவணை பொருந்தும் என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. பிற மாணவா்களுக்கான தேர்வு அட்டவணை பின்னா் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை: https://acoe.annauniv.edu/download_forms/TIME%20TABLE%20N20/RETEST/UG_ALL_CAMPUSES.pdf

முதுகலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை: https://acoe.annauniv.edu/download_forms/TIME%20TABLE%20N20/RETEST/PG_ALL_CAMPUSES.pdf

பிஎச்.டி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை: https://acoe.annauniv.edu/download_forms/TIME%20TABLE%20N20/RETEST/PHD_ALL_CAMPUSES.pdf

See also  ரயில் சேவை குறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட முக்கியத் தகவல்