கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தமிழக அரசு அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை விசத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலருக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இப்போது அனைத்து வகையான கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகளை தமிழக அரசு தடை செய்துள்ளது மேலும் வாரத்தில் 6 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
Author: gpkumar
தமிழக சட்டமன்றத்தேர்தல் திட்டமிட்டப்படி வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறும். மேலும் கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதிக்க படுவார்கள் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியுள்ளார். இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியதாவது: ” தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 4, 512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுயுள்ளது. மீதமுள்ள 2,743 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 6,29,43,512 வாக்களர்கள் உள்ளார்கள். இதில் 3.09 கோடி ஆண் வாக்களர்களும், 3.19 கோடி பெண் வாக்காளர்களும் மற்றும் 7,192 திருநங்கைகளும் உள்ளார்கள். இதுவரை 83.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1.70 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 0.57 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 231.63…
உலக தண்ணீர் தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை காணொலிக் காட்சி முலமாக தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது நதிகள் இணைப்பிற்கான தேசிய கண்ணோட்ட திட்டத்தின் முதல் திட்டமான கென் பெத்வா இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சரும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களின் முதல்வர்களும் பிரதமர் முன்னிலையில் கையெழுத்திடுவார்கள். ‘‘மழை நீர் சேகரிப்பு , மழை எங்கு பொழிந்தாலும், எப்போது பொழிந்தாலும்” என்ற கருப்பொருளோடு நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் இந்தப் பிரச்சாரம் செயல் படும். பருவமழை காலத்திலும், பருவமழைக்கு முந்தைய காலத்திலும் அதாவது இந்த வருடம் மார்ச் 22-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். மக்களின் பங்களிப்போடு தண்ணீரின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்தப் பிரச்சாரம் நடைபடுத்தப்படும். இந்த பிரச்சாரத்தின் நோக்கம், மழைநீர் முறையாக சேமிக்கப் படுவதை…
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு 2020 -ல் ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து வந்தது. அதே சமயம் கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த ஆண்டு மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டையும்,ஆதார் கார்டையும் இணைக்காவிட்டால், அவரின் பான் எண்ணை வருமான வரித்துறை செயலிழக்கச் செய்துவிடும். எப்போது அவர்கள் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கிறார்களோ அப்போதுதான் அவரிகளின் பான் எண் செயல்படக்கூடும். இதனால் உங்கள் ஆதார் எண்ணுடன் பான் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடுவானது வரும் மார்ச் 31ம் தேதியோடு முடிவடையயுள்ளது. இதற்கு முன்பே வருமானது வரித்துறையானது பலமுறை அவகாசம் கெடுத்துள்ளது உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல்…
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளார்கள். தற்போது தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, அந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று கொண்டு வருகிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்கள். சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறயுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி,குளித்தலை,கிருஷ்ணராயபுரம் (தனி)ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்து மக்கள் கட்சி ஆகிய பல்வேறு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள். முன்னதாக ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் நேற்று வரை அரவக்குறிச்சி தொகுதியில் 47 வேட்பு மனுக்களும், 46 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். மேலும் குளித்தலை…
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் மார்ச் 22-ந் தேதி முதல் 9,10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கபடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களுக்கிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் தமிழக அரசு உடனடியாக பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் 22-ந் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயத்தில் மாணவர்களின் விடுதிகளும் மூடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இணைய தளம் மூலம் கற்பிக்கும் முறை தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
அனைத்து அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கும் 4000 ரூபாய் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றாகும். தற்போது அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பதை பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும் மக்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளது. நீட் தேர்வு ரத்து, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என பல திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு தமிழக அரசிடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழக அரசு கொரோனா…
இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 34 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வருகிறது இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது. ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது . ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.1 உயர்ந்து ரூ.4240-க்கு விற்கப்படுகிறது. மேலும் இன்று 8…
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணிகள் இருப்பதால் ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரை பள்ளிகளை திறந்திருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பெற்றோர்களிடம் கருத்து கேட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு, 9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக…
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாட உள்ளது.இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பெயர்களை அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் ஷர்மா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இத்தொடரில் கோலி, ரோகித் ஷர்மா, தவான், சுப்மண் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பண்ட் (விக்கெட் கீப்பர்), கே. எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், குர்னால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், முகமது சிராஜ்,புவனேஸ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். இந்த ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளும் பூனேவில் நடைபெற உள்ளது. தற்போது டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் அணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணியாக இந்த ஒருநாள் தொடரை இந்தியா விளையாட உள்ளது.
விஜய் சேதுபதியின் புதிய படத்தில் சிம்பு கைகோர்த்துள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் அடுத்ததாக யாதும் ஊரே யாவரும் கேளிர்,லாபம், மாமனிதன் ஆகிய திரைப் படங்கள் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் விவேக், மோகன்ராஜா, மகிழ்திருமேனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். தற்போது ‘முருகா’ என்ற பாடல் இத்திரைப்படத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முருகா என்ற பாடலை நடிகர் சிம்புதான் பாடியுள்ளார். இதன் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் சிம்பு இணைந்துள்ளார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதியும் , சிம்புயும் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்கள் இணைந்து நடித்து…
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது மூன்று பெண்கள் வந்த காரில் ரூ.6.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட இந்த ரூ.6.50 லட்சம் பணத்தை பூந்தமல்லி அருகே உள்ள காக்களூர் பால்பண்ணை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துயுள்ளார்கள். தமிழகத்தில்சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் வெளியாகி இருக்கிறது. இதனால் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளார்கள். குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதியிலும் வாகன சோதனைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பால்பண்ணை அருகே வாகன சோதனை நடைபெற்றது.…
அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்புரத்தே இனி கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக புதிய கல்விக் கொள்கையில் புதிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. இது கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை அதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள் . மருத்துவப் படிப்பு ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் உயிர் விலங்கியல், நுண்ணறிவியல்,உயிர் வேதியியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர்…
இன்று தங்கம் விலை மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள் . பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது. ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது. இதனால் கடந்த சில வாரங்களாகத் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது . இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.21 உயர்ந்து ரூ.4258-க்கு விற்பனை…
