Author: Pradeepa

மத்திய காவல் துறையில் காலியாக  உள்ள  25 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப  https://ssc.nic.in என்ற இணையத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021ஆகும். மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கு இந்தியா முழுவதும் பணியிடமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பியுங்கள். வேலை மத்திய அரசு வேலை பணியிடம் இந்தியா முழுவதும் பணியின் பெயர் Constables (GD) கல்வித் தகுதி 10th pass விண்ணப்பிக்கும் முறை Online தேர்வு செய்யப்படும் முறை Computer Based Examination, Physical Standard Test, Physical Efficiency Test வயது வரம்பு 18-23 years as on 01.08.2021 சம்பள விவரம் Pay Level-3 Rs.21700-69100/- விண்ணப்ப கட்டணம் Rs. 100/-  SC/ST/PWD/Women – No Fee விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021 அதிகாரபூர்வ வலைத்தளம் https://ssc.nic.in/ மொத்த காலிப்பணியிடங்கள் 25271 மேலும் முழு விவரங்களை :…

Read More

கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையே 32வது ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை கோலாகலமாக அரங்கேறவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஓராண்டிற்கு பிறகு இப்போது நடத்தப்படுகிறது. அதுவும்கொரோனா பரவல் அச்சத்தால் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுகிறது. ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதல்முறை டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க விழாவை ஜப்பான் மன்னர் நருகிடோ உட்பட உலக நாடுகளை சார்த்த முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மிக முக்கியமான பிரமுகர்கள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டிக்காக பல்வேறு மாகாணங்கள் வழியாக கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் ஜோதி டோக்கியோ வந்தடைந்தது. இதையொட்டி நடைபெற்ற பாரம்பரிய நிகழ்ச்சியில் கொட்டவாத் மேயர் ஜோதியை ஏற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கொரோனா காரணமாக மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் 8…

Read More

ஆந்திராவில் பொதுமக்களிடம் 10,000 போலி கோழி முட்டைகளை விற்பனை செய்து விட்டு தப்பி ஓடிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வாரிகுண்டபாடு மண்டலத்தில் மினி லாரி ஒன்று நேற்று காலை ஊர் ஊராக முட்டை விற்பனை செய்துள்ளது. குறைந்த விலைக்கு தருவதாக கூறியாதல் ஏராளமான மக்கள் முட்டைகளை வாங்கி சென்றுள்ளனர். 30 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டி 130 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதனால் ஒரு மணி நேரத்தில் அனைத்து முட்டைகளும் விற்பனையானது. வாங்கிய முட்டைகளை பயன்படுத்திய பின்னரே அது போலி முட்டை என்பது தெரியவந்துள்ளது. பல மணி நேரமாகியும் முட்டைகள் வேகாமல் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முட்டை உடைக்கும் முயன்றபோதும் அது உடையவில்லை. அதனால் மொத்தமாக அனைவரும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் இது குறித்து வாரிகுண்டபாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலி கோழி முட்டையை விற்பனை செய்துவிட்டு தப்பி ஓடிய…

Read More

பாடல் – அலை அலையாக இயக்குனர் – கெளதம் வாசுதேவ் மேனன் டிஓபி – பி.சி. ஸ்ரீராம் ஆசிரியர் – அந்தோணி தயாரிப்பு வடிவமைப்பாளர் – ராஜீவன் ஆடை வடிவமைப்பாளர் – உத்தாரா மேனன் கார்த்திக் இசையமைத்தார், தயாரித்தார் மற்றும் ஏற்பாடு செய்தார் பாடல் – கார்க்கி குரல்கள் – கார்த்திக் அஸ்வின் ஜார்ஜ் ஜான் ஆஃபீட் மியூசிக் வென்ச்சர்ஸ் பதிவு செய்தார் ஆஃபீட் இசை முயற்சிகளில் கார்த்திக் & அஸ்வின் ஜார்ஜ் ஜான் கலந்து. ரிசவுண்ட் இந்தியாவில் சாய் ஷ்ரவனம் எழுதிய ஸ்டெம் மிக்ஸ்

Read More

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மீண்டும் வரும் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் புத்தக விநியோகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து நிர்வாக பணிகளும் தோய்வு இன்றி நடைபெறலாம். ஆசிரியர்களும் பள்ளிக்கு சென்று நிர்வாக பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடத்தயாரிப்பு பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடலாம். 50 சதவீத மாணவர்களுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து, ITI உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. புதுசேரி நீங்கலாகநீங்கலாக மற்ற மாநிலங்களுக்கான போக்குவரத்திற்கு தடை தொடர்கிறது. தியேட்டர்கள், பார்கள், திறக்கவும் பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், கலாச்சார நிகழ்வுகள், பூங்காக்கள் உள்ளிட்டவைகளுக்கான தடை நீட்டிக்கிறது. திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளில் 50 சதவீதம் பேரும், இறுதி சடங்கில் 20 சதவீத பேரும் பங்கேற்க்கலாம். இதை தவிர ஏற்கனவே அனுதிக்கப்பட்ட செயல்பாடுகள்…

Read More

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் மூன்றாவது அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா நிலவரம் தொடர்பாக டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 80 சதவிகிதம் பாதிப்பு பதிவானதாக குறிப்பிட்டார். மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கொரோனா இரண்டாவது அலையில் பெரும் பாதிப்பை சந்தித்ததாக மோடி கூறினார். எனவே மூன்றாவது அலையை தடுப்பது 6 மாநில அரசுகளின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கொரோனா பரிசோதனை சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசி செலுத்துவதில் மாநிலங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர்…

Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா பரவல் காரணமாக பதக்கம் வழங்கும் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 339 போட்டிகள் நடைபெற உள்ளது. வழக்கமாக போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மேடையில் ஒருவர் கழுத்திலும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என தனித்தனியாக பதக்கங்கள் வழங்கப்படும். தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக வீரர்களுக்கு அணிவிக்க வேண்டிய பதக்கங்கள் ஒரு தட்டில் வைத்து முன்னால் நீட்டப்படும் அதனை வீரர், வீராங்கனைகள் தாங்களே எடுத்த கழுத்தில் அணிந்துகொள்ள வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை வீரர் வீராங்கனைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. பதக்கம் பெரும் வீரர், வீராங்கனைகள் பதக்க மேடையில் தனிநபர் இடைவெளியை பின்பற்றுமாறு சர்வதேச ஒலிம்பிக் சங்கம்…

Read More

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கொரோனவை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி இயக்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் முதலமைச்சர்களிடம் கேட்டு அறிகிறார். கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றத் தவறினால் மூன்றாவது அலை தாக்கம் ஏற்படக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ள சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் கடந்த செவ்வாய் அன்று பிரதமர் காணொலி…

Read More

இந்தியாவில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்திற்கு வரும் 22ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மாஸ்டர் கார்டு ஆசியா பசுபிக் நிறுவனம் தரவு சேமிப்பு குறித்த விதிகளை பின்பற்றாத காரணத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை குறித்த தரவுகளை சேமிப்பது தொடர்பான விதிமுறைகளை பின்பற்றுவதற்கு போதுமான கால அவகாசமும் வாய்ப்புகளும் கொடுத்த போதும் மாஸ்டர் கார்டு நிறுவனம் அதன் படி நடக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த தடையால் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று RBI தெரிவித்துள்ளது.

Read More

திரைப்படம் – வாழ் பாடல் – புது வித அனுபவம் குரல்கள் – பிரதீப் குமார், கல்யாணி நாயர் பாடல் – முத்தமில் மற்றும் அருண் பிரபு புருஷோத்தமன் கித்தார் – பிரதீப், எம்.எஸ். க்ர்ஸ்னா, சுஷா, கவுரிஷங்கர் சின்சினாட்டி இசைக்குழு தப்லா குழு – கணபதி, வெங்கட், கிரண், ஸ்ருதி இந்தியன் புல்லாங்குழல் & சோலோ – நிகில்ராம் டி பி ஒலி கலவை: ஆனந்த் ராமச்சந்திரன்

Read More

நடிப்பு: ஆர்யா, கலையரசன், பசுபதி, துஷாரா, ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஷபீர் கல்லரக்கல், ஜான் விஜய், காளி வெங்கட், முத்துகுமார் மற்றும் பலர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர்: முரளி.ஜி இசை இயக்குனர்: சந்தோஷ் நாராயணன் ஆசிரியர்: செல்வா ஆர்.கே. கலை இயக்குனர்: தா. ராமலிங்கம் ஒலி வடிவமைப்பாளர்: அந்தோணி பி ஜெயருபன் இணை எழுத்தாளர்: தமிழ் பிரபா ஸ்டண்ட்: அன்பரிவ் பாடலாசிரியர்கள்: கபிலன், அறிவு, மெட்ராஸ் மீரன் நடன இயக்குனர்: சாண்டி ஆடை வடிவமைப்பாளர்கள்: ஏகன், எம். முகமது சுபியர் ஸ்டில்ஸ்: ஆர்.எஸ்.ராஜா வி.எஃப்.எக்ஸ்: ஹரிஹாரா சுதன் (லோர்வன் ஸ்டுடியோஸ்) வண்ணமயமானவர்: பிரசாத் சோமசேகர் டிஐ லைன் தயாரிப்பாளர்: கிருஷ்ணா ராவ் புரோ: ஆர்.குமரேசன், குணா மேக் அப்: டி.தசரதன் விளம்பர வடிவமைப்பு: கபிலன் தயாரிப்பு நிர்வாகி: எஸ்.சிவகுமார் தயாரிப்பு மேலாளர்: எஸ்.பாரத், ஜி.காமராஜ், டி.ஹரிஹாரா சுதன், ரூபேஷ் சண்முகம் தக்ஷன்ராஜ் தயாரிக்கிறார்

Read More

சென்னை தேனாம்பேட்டை மக்கள் நல்வாழ்வு துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை எடுத்துள்ளது. ஜிகா வைரஸ் தொற்றை கண்டறிய வழக்கமான எலிசா பரிசோதனையை தொடர்ந்து ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மூலமும் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறிவதற்க்கான நடக்வடிக்கைகளை நல்வாழ்வு துறை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மக்கள் நல்வாழ்வு துறை ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் கண்டறிவதற்க்கான சோதனை மையம் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது. இதுவரை கேரளா எல்லையை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளில் 65 இடங்களில் ADS கொசுக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றனர். பரிசோதனை செய்யப்பட்ட எந்த மாதிரியிலும் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Read More

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டிவீட்டர் பக்கத்தில் நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் இந்த தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக அதற்க்கான தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 12 ஆம் தேதி MBBS மற்றும் BDS தேர்வுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்யும் குழுவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும்…

Read More