Author: Pradeepa

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை கிருஷ்ணகிரியில் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் OLA நிறுவன அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கிருஷ்ணகிரிக்கு 100 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் தொடங்கப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் OLA நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் OLA நிறுவன தலைமை செயல் அதிகாரி Bhavish Aggarwal முதலமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில் துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம், OLA நிறுவனத்தின் துணை தலைவர் பி.சி.தத்தா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Read More

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக டிஎன்பிஎல் ஐந்தாவது தொடர் இந்தாண்டு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த தொடரை நடத்த அனுமதி அளிக்குமாறு மாநில அரசுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கடிதம் அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் தொடரை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மொத்தம் மூன்று கட்டங்களாக போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஜூலை 19 முதல் 29 வரை முதற்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற விருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட மைதானங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இறுதி போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதிக்கப்படாது. போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் மற்றும் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்…

Read More

முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான ஜெ.ஜெயலலிதா அவர்கள் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவருடைய வாழ்கை வரலாற்றை படமாக எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்தில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்து உள்ளார். தலைவி திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத் தலைவி திரைப்படத்தின் கதையை எழுதி உள்ளார். விஜய் இயக்கும் இந்த திரைபடத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியயோர் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். தலைவி திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் அதன் வெளியீடு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திரைப்பட துறையினர் இந்த திரைப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. திரையரங்குகள் திறந்த பிறகு தலைவி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவி திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள்…

Read More

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தொற்று அதிகம் பதிவான கோவை, ஈரோடு, சேலம், தஞ்சை, நாகை, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைவான அளவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 11 மாவட்டங்களில் தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு கூடுதல் தலைப்புகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் முக்கிய துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று ஆலோசனை நடத்துகிறார். தற்போது 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக்கு பிறகு தோற்று அதிகமான மாவட்டங்களிலும் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் வாகனம் ஓட்ட பயிற்சி பெற்றவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறைகளில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்து உள்ளது. புதிய விதிகளின் படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 2 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை கொண்டு இருக்க வேண்டும். பயிற்சியாளர்களிடம் பயிற்சி வாகன வடிவமைப்புடன் கூடிய வசதிகள் இருக்க வேண்டும். பயிற்சியாளர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். போக்குவரத்து குறியீடுகள் போக்குவரத்து விதிமுறைகள் வாகன கட்டமைப்பு பொது தொடர்பு முதலுதவி உள்ளிட்டவை குறித்த வகுப்புகளை நடத்த வேண்டும். வாகனங்களை மலை, கிராமம், நகரம், மேடு, பள்ளம் போன்ற பல்வேறு அமைப்புகளில் கற்பிக்க வேண்டும். இது…

Read More

மூன்று மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று 610 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு விலை அடுத்தடுத்த உயர்த்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து மார்ச் 16 ஆம் தேதி வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலையை 10 ரூபாய் குறைத்து 825 ரூபாய்க்கு விற்கப்படும் என எண்ணை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டனர். இதனை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக சமையல் எரிவாயு விலை உயர்ந்த படாமலேயே இருந்தது. இந்த நிலையில் தற்போது வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்…

Read More

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முந்தைய நாளை ஒப்பிடுகையில் வெறும் ஆறு என்ற எண்ணிக்கையில் குறைந்து உள்ளது. 17 மாவட்டங்களில் தொற்று சிறிது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 506 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 194 பேர் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 79 ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்து 537 பேர் ஒரே நாளில் தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குறைந்து வந்த உயிரிழப்பு இரண்டாவது நாளாக 100 ஐ கடந்துள்ளது. 24 மணி நேரத்தில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். 38 ஆயிரத்து 191 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டங்களைப் பொருத்தவரை கோவையில் 514 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 420 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், திருப்பூரில் 270 பேருக்கும், சென்னையில் 257…

Read More

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான பிதான் சந்திர ராய் நினைவை போற்றும் வகையில் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கொரோனா பேரிடர் காலத்தில் வெள்ளை உடுப்பு அணிந்து ராணுவம் போல் மருத்துவர்கள் அல்லும் பகலும் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவர்களுக்கு இந்த நன்னாளில் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மேலும் வலிமை பெற அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மருத்துவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களை காக்கும் மகத்தான பணியை நீங்கள் தொடருங்கள் இந்த அரசு உங்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை…

Read More

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் நியாய விலை கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கைரேகை பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்பட்டது. இந்த நிவாரண தொகை இரண்டு தவணைகளாக ரூ.2000 மே மற்றும் ஜூன் மாதம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் நாளை முதல் கைவிரல் ரேகை பதிவு முறையை மீண்டும் அமல்படுத்த படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் விநியோகத்தை முன்னிட்டு ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு முறை நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலை உள்ளதால் கைவிரல் ரேகை பதிவு முறை மீண்டும் நாளை முதல் அமலுக்கு…

Read More

யூரோ கால்பந்து தொடரில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வெற்றி கொண்டதைக் அடுத்து அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் ஜெர்மனி ரசிகர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் வீதிகள் அனைத்தும் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர் காரணம் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் கிடைத்த வெற்றிதான் கால்பந்து உலகில் இங்கிலாந்தும் ஜெர்மனியும் பரம எதிரிகளாக கருதப்படும். இரு நாட்களும் மோதினாலே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். 1966ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தும் ஜெர்மனியும் மோதி ஆட்டத்திற்கு பின்னர் தான் இரு நாடுகளுக்கு இடையில் போட்டி உச்சம் பெற்றது. விளைவு ஒவ்வொரு போட்டிக்கும் பின்னரும் ஒரு நாட்டில் கொண்டாட்டமும் மற்றொரு நாட்டில் சோகமும் இடம் பிடித்துவிடும். தற்போது இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் இந்த நிலைதான். தற்போது நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் விளையாடிய இங்கிலாந்து அணி 2-0 கணக்கில் வெல்ல உச்சகட்ட மகிழ்ச்சியில்…

Read More

ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒருகோடியாவது காரை விற்பனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். பேட்டரி கார் மூலம் ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார். ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒருகோடியாவது காரில் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு கையெழுத்திட்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஹூண்டாய் நிறுவனம் அதிக உற்பத்தி செய்து உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தியை கலைஞ்சர் கருணாநிதி துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்காசியாவிலேயே உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்க்காக தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டும் என்றும் கூறினார்.

Read More

முன் எப்போதும் இல்லாத வகையில் சீன எல்லைப் பகுதியில் இந்தியா கூடுதலாக 50 ஆயிரம் வீரர்களை குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுதந்திரம் பெற்றதில் இருந்தே காஷ்மீர் தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நடிப்பதால் மேற்கு எல்லையில் மட்டுமே படைகள் குவிக்கப் பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக லடாக் பகுதியில் இந்திய எல்லை அருகே குடியிருப்பு பகுதிகள் அமைப்பதாக கூறி சீனா படைகளை குவித்தது. தல வடங்களை கொண்டுவர எதுவாக சாலைகளையும் அமைத்தது. உச்ச கட்டமாக கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் கள்வான் பள்ளத்தாக்கு அருகே இந்தியாவுக்குள் சீன படைகள் ஊடுருவ தொடங்கின. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்திய போது ஏற்பட்ட மோதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதற்றம் அதிகரித்ததை அடுத்து சீன எல்லையில் இந்தியா படைகளை குவிக்க தொடங்கியது. ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில்…

Read More

Xiaomi தனது ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்ப்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது என்று அதன் ட்வீட்டர் அக்கவுண்ட் வழியாக டீஸர் செய்துள்ளது.வெளியான ட்வீட் ஆனது “#10on10” என்ற ஹேஷ்டேக்குடன் “ரெட்மி புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர். ரெட்மி நோட் தொடரில் ஏற்கனவே 10 மோனிகர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், சியோமி தனது ரெட்மி வரிசையில் கொண்டு வர முயற்சிக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்த சீரிஸ் இந்தியாவில் ரெட்மி 9 தொடரின் வாரிசாக கருதப்படும். ரெட்மி 9 சீரிஸ் மொத்தம் ஐந்து மாடல்கள் உள்ளன. இதில் ரெட்மி 9, ரெட்மி 9 ஏ, ரெட்மி 9 ஐ, ரெட்மி 9 பிரைம் மற்றும் ரெட்மி 9 பவர் ஆகியவை அடங்கும். ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் எந்த மாதிரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் விலையை எளிதில் யூகித்துவிடலாம். ரெட்மி நோட் தொடர் ரூ.10,000 முதல் 20,000…

Read More

நடிகர்கள்: சாண்டி, கெளதம் வாசுதேவ் மேனன், சரவணன், ராமா, ரேஷ்மா பசுபுலேதி, மைம் கோபி, ஸ்ருதி செல்வம் எழுதி இயக்கியவர்: நம்பிக்கை சந்துரு தயாரிப்பாளர்: டி.ஜீவிதா கிஷோர் இசை இயக்குனர்: ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ஒளிப்பதிவாளர்: சதீஷ் மனோகரன் ஆசிரியர்: தீபக் எஸ் துவாரக்நாத் ஸ்டண்ட்: ஸ்டன்னர் சாம் கலவை: ராம்ஜி சோமா எஸ்.எஃப்.எக்ஸ்: ஏ.சதீஷ்குமார் விளம்பர வடிவமைப்பு: சபா வடிவமைப்புகள் பி.ஆர்.ஓ: சதீஷ் (ஏ.ஐ.எம்) ஆடை வடிவமைப்பாளர்: M.I ஆஷிக் அஹ்மத் & அபி நந்தினி நிர்வாக தயாரிப்பாளர்: ஆர்.பி. விஜயகவுதம் தயாரிப்பு மேலாளர்: டி.பாஸ்கரன் பாடல்: அசல் கோலாரு, தர்மசீலான் பேனர்: Bamboo Trees Productions இயக்கம் குழு: ரஞ்சித் வேலுசாமி, ஏ.விஜய் பிரபாகர், டி.ஜீவிதா கிஷோர், தர்மசீலன் உதயப்பன், ராகுல் பாலாஜி, எச்.விஷால், பிரணேஷ், உரியாடி சந்திரு

Read More