பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைக்கவேண்டும் என அமைச்சர்களுக்கும் உயர் அலுவலர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையுடன் வேளாண் நிதி நிலை அறிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளது.

விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் உடன் கலந்து ஆலோசித்து வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். விவசாயம் செழிக்க விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பயன்களை பெரும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கியதாக வேளாண் நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள் அனைத்து தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், வர்த்தக மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியவர்களுடன் ஆலோசித்து பொது நிதிநிலை அறிக்கையை தயாரிக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையிலும் சிறந்த நிதிநிலை அறிக்கையை தயாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

See also  புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க மாஸ்டர்கார்டு நிறுவனத்திற்கு தடை - RBI