இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்றால் பிரபலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 65. திரைப்பட பூஜைக்கு பிறகு முதல் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஜார்ஜியா சென்றனர். ஜார்ஜியாவில் 30 சதவீத காட்சிகள் மற்றும் வீடியோ பாடல் படப்பிடிப்பு முடித்த பிறகு நேற்று படக்குழுவினர் சென்னை வந்தனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்COVID-19டமிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு 3 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

சென்னை வந்த நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அப்போது  பாசிட்டிவ் வந்துள்ளது. நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வீட்டிலே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். என்னை அண்மையில் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். நான் குணமாகி வருகிறேன். தயவு செய்து அனைவரும் வீட்டில் பத்திரமாக இருங்கள் என்று கூறினார்.

தளபதி 65 படத்தை முடித்த பிறகு பூஜா ஹெக்டே சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. முகமூடி திரைப்படத்தில் அறிமுகமான இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து உள்ளார். பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

See also  எரிபொருள் விலை தொடர்பாக அரசு தர்மசங்கடத்தில் உள்ளது என்கிறார் நிர்மலா சீதாராமன்