• 45 வயதுக்கு மேலுள்ள அனைவருக்கும் 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் கூறியுள்ளார்.
  • நேற்று தமிழகம் முழுவதும் கொரேனா தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டது. இதையடுத்து நாளை முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • இந்நிலையில் வரும் 25ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு
  • “தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.
  • நேற்று தொடங்கியுள்ள தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேல் அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.
  • இதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு தடுப்பூசிகளை கையிருப்பு வைக்க அறிவுறுத்தி இருக்கிறோம். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை மேற்பார்வையிட்டு செயல்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • இதுவரையுலும் சுமார் 10 சதவீதம் பேர் மட்டுமே தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் தாங்களாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர் தற்போது பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பலர்தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
  • எண்ணிக்கையை அதிகப்படுத்த வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். வருகிற 25 ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும்
  • என்பதை அந்தந்த பகுதியைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் உறுதி எடுத்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
  • சுகாதாரத்துறை வாகனங்களில் அனைத்து இடங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை 100 % செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அத்துடன், பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி அச்சத்தை போக்குவதற்காக கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொள்ள இருக்றோம்” என்று கூறினார்.

 

See also  The secret to moving this ancient sphinx screening the time to buy an indoor train.