உதவி பொது மேலாளர், துணை பொறியியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கம்பனி பெயர் : HMT Machine Tools Limited
பணியின் விவரம் : Assistant General Manager/Manager (Finance) – 01
சம்பளம்: மாதம் ரூ.14,500-18,700

பணி விவரம்: Dy. Engineer (Corporate Planning) – 01
சம்பளம்: மாதம் ரூ.8,600-14,600

வயது வரம்பு: 01.03.2021 தேதியின் படி, 40 வயது முதல் 44 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Graduate, Post Graduate, MBA, CA அல்லது ICWA, CMA முடித்தவர்கள்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் தகுதி பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.750, மற்ற பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.500, மேலும் எஸ்டி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 . கட்டணத்தை டிடி எடுத்து பெங்களூருவில் மாற்றத்தக்க வகையில் HMT Machine Tools Limited என்ற பெயருக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hmtmachinetools.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ் உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy General Manager (CP&HR)
HMT Machine Tools Limited,
HMT Bhavan, No.59, Bellary Road,
BANGALORE – 560 032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15.04.2021

மேலும் முழுவிவரங்கள் அறிய

http://www.hmtmachinetools.com/2020/Requirements_of_professionals_in_various_areas.pdf என்ற லிங்கில் மூலம் முழு விவரங்ககளை அறிந்து கொள்ளலாம்.

See also  8th,10th படித்தவர்களுக்கு தமிழக மின்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!