நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பரவலானது யாரையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றது. சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த வைரசுக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.

உலகத்தின் பல நாடுகளிருந்து பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றானது தமிழகத்தில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவருவதால், தமிழ் நாடு கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது திடீர் முடிவை எடுத்துள்ளார்.

IPL 2021 தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த அஸ்வின் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ட்விட்டரில் தனது முடிவை பதிவிட்டுள்ள அவர், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த ஆபத்தான நிலையில், அவர்களுக்கு உதவ விரும்புவதாகவும், துணையாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பெங்களூரு அணியை சேர்ந்த ஆடம் சாம்பா IPL போட்டிகளில் இருந்து விளங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் குறைந்த பிறகு மீண்டும் விளையாட வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். அஸ்வினின் முடிவுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளது. இனி வரும் IPL 2021 போட்டிகளில் இந்த வீரர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்ற செய்தி ரசிகர்களை மிகவும் சோகத்துக்குள்ளாகியுள்ளது .

See also  வாட்ஸ்-ஆப்-குழுக்களில்பகிரப்படும்உள்ளடக்கத்திற்கு அந்தகுழுவின் அட்மின் பொறுப்பாகமுடியாது