- Advertisement -
SHOP
Home Blog Page 135

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அடுத்த படமான ‘சபாபதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். நகைச்சுவை நடிகராக இருந்த சந்தனம் நடிகராக நடித்து வருவதை அவரது பிறந்தநாளான ஜனவரி 21, 2021 ஐ கொண்டாடவுள்ளார். மேலும் அவரது ரசிகர்களின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாடு முழுவதிலும் இருந்து ஊற்றிக்கொண்டிருக்கையில், அவரது அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள் கூடுதல் சிறப்புடையதாக மாற்ற முடிவு செய்தனர். எனவே வரவிருக்கும் சபாபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வர்த்தக ஆய்வாளரும் திரைப்பட விமர்சகருமான தரண் ஆதர்ஷ் இந்த உற்சாகமான செய்தியை சந்தனத்தின் பிறந்த நாளில் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் பகிர்ந்துள்ளார். 2021 ஏப்ரல் மாத வெளியீட்டிற்காக படத்தை விரைவில் முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதால் சபாபதி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இப்படத்தை சீனிவாச ராவ் இயக்குகிறார் மற்றும் இப்படத்தில் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும்,  இப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைச் சுற்றி வருகிறது. இப்படத்தில் சந்தனத்தின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் மற்ற சபாபதி நடிகரின் உறவும் படத்தின் முக்கிய நங்கூரம் என்று கூறப்படுகிறது.

 

கெத்துக்காட்டும் ஆந்திர முதல்வர்

ஆந்திர மாநில முதல்வர் அவர்கள் ஜெகன் மோகன் ரெடி இன்று வீடுவீடாக சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார். இவர் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அறிவித்திருந்த
நவரத்தின திட்டங்களில் ஒன்றானது தான் ரேஷன் பொருட்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் திட்டம்.
இந்த திட்டத்திற்காக சுமார் ரூ .830 கோடி செலவில் வாங்கப்பட்ட 9,260 வாகனத்தில் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யப்படும் இத்திட்டத்தினை விஜயவாடாவில் தொடங்கிவைத்தார். எனேவே இத்திட்டத்தினை பயன்படுத்த 50 குடும்பங்களுக்கு 1 நபர் சுய உதவி குழு பணியாளராக நியமிக்கப்பட்டு. பின் அந்நபர் மூலம் இத்திட்டம் பயன்படுத்த உள்ளது

பாரிஸ் ஜெயராஜ் – புலி மங்கா புலிப் வீடியோ பாடல்

0

புலி மங்கா புலிப் வீடியோ பாடல் | பாரிஸ் ஜெயராஜ் | சந்தனம் | சந்தோஷ் நாராயணன் | ஜான்சன் கே

அமெரிக்க அதிபர் பதவியேற்ற முதல் நாளில் 15 ஆணைகளில் கையெழுத்து

ஜெட் வேகத்தில் அமெரிக்க அதிபர் – பதவியேற்ற முதல் நாளிலே 15 ஆணைகளில் கையெழுத்து இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு அமெரிக்க பதவியேற்ற பைடன் முதல் நாளிலே 15 ஆணைகளில் கையெழுத்திட்டார். இதற்குமுன் பதவியேற்ற அதிபர்களில் டிரம்ப் முதல் நாளில் 8 உத்தரவுகளிலும் ஒபாமா 9 உத்தரவுகளிலும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும் கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டனர்.

முதல் முறையாக 15 ஆணைகளில் கையெழுத்திட்ட அதிபர் ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேருவதற்கான நடைமுறையை தொடங்க ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். புதிய அமெரிக்க நிர்வாகத்தில் முன்னுரிமைகளில் பருவநிலை மாற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்க மக்களிடையே கொரோனா பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க புதிய அலுவலகம் அமைக்க உத்தரவிட்டுள்ளார். சில முஸ்லீம் நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணத்தடைகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மெக்சிகோ – அமெரிக்கா இடையே தடுப்பு சுவர் காட்டும் பணிக்கு நிதி அளிக்கும் வகையில் டிரம்ப் பிறப்பித்த அவசரகால உத்தரவை பைடன் திரும்ப பெற்றார். பாலின சமத்துவம், இனப்பாகுபாடு தொடர்பான சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்ற ட்ரம்பின் நடைமுறைகள் நிறுத்திவைக்கப்படும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனை ஐ.நா. தலைமைச் செயலாளர் வரவேற்றுள்ளார். மேலும் இது போன்ற பல்வேறு ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.

747 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Senior Draughtsman, Programmer, office Superintendent, UDC, Registrar General மற்றும் Census Commissioner ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. எனவே இந்திய குடிமக்களிடம் இருந்து 747 பணியிடங்களுக்ககாண. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பங்கள் 22.01.2021 வரை தபால் மூலம் வரவேற்க்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2021-ன் வேலைவாய்ப்பு செய்திகள்:

நிறுவனம் : இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census)
பணியின் பெயர் : Draughtsman, Programmer, office Superintendent, UDC, Registrar General & Census
-Commissioner
பணியிடங்கள் : 747
கடைசி தேதி : 22.01.2021
விண்ணப்பிக்கும் முறை : Offline

Census காலிப்பணியிடங்கள் :

இந்திய மக்கள் தொகையின் கணக்கெடுப்பு அமைப்பில் Senior Draughtsman, Programmer, office Superintendent, UDC, Registrar General மற்றும் Census Commissioner போன்ற பதவிக்கு மொத்தம் 747 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Census கல்வித்தகுதி :

1.விண்ணப்பதாரர்கள் மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
2.விண்ணப்பதாரர்கள் மருத்துவ ரீதியாக தகுதி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணியில் அதிக அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Census ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு கடைசியாக பெறப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது சம்பளம் வழங்கப்படும்.

Census தேர்வு செயல்முறை :

Interview மற்றும் Merit List ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை 22.01.2021 அன்று வரை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Application form and Official Notification for Census India Recruitment 2021

Official site

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிபில் இந்திய அணி முதலிடம்

ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் காபா, மெல்போர்ன்  மைதானத்தில் நடைபெற்ற 2- வெற்றி பெற்றும், 1 டிரா, 1 தோல்வி என்ற இந்திய அணியானது.  ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 430 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளன.  அதே நேரத்தில் ஆஸ்திரெலியா அணியானது மூன்றாம் நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

வளர்ந்துவரும் இளம் வீரர்களான சிராஜ், வாஷிங்டன் சுந்தர், தாகூர், கில், பண்ட், விஹாரி என இவர்கள் கொடுத்த பங்களிப்பினால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ள.  இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி.

RUPAY credit card மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவருக்கு ரயில் டிக்கெட் கட்டணத்திலிருந்து 50% வரை தள்ளுபடி பெற IRCTC மற்றும் SBI யையும் ஒரு RUPAY கிரெடிட் கார்டு-யை அறிமுகம் செய்திருக்கிறது .இந்த கிரெடிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இதனுடன் வெகுமதி புள்ளியாக cashback கிடைக்கும் .

ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு செய்யும் போது 10% cashback பெறுவோம் .
அதிகாரபூர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC -ன் வளையதளம் irctc.co.in என்று வெளிட்டுயுள்ளது. இந்த வளையத்தளம் மூலம் முன்பதிவு செய்தால் AC -1,AC -2,AC -3 மற்றும் AC – cc ஆகியவற்றின் வெகுமதி புள்ளி 10% வரை மதிப்பு கூடும். இந்த புள்ளிகளை IRCTC இணையதளத்தில் இலவசமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள பயன்படுத்தலாம் .

இதேபோல் ரூ. 500 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை பெட்ரோல் போன்ற எரிபொருள்கள் நிரப்பும்போது ஒரு சதவிகிதம் கட்டணம் தள்ளுபடி செய்துகொள்ளலாம் .இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு கட்டணம் ரூ .499 -ஆக நிர்நிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் இந்த ஆண்டு மார்ச் 31 வரை தள்ளுபடி செய்திருக்கிறார்கள் .மேலும் இந்த ஆண்டு ரூ. 300 புதுப்பிக்கும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறார்கள்.

அரிசி சாதத்தால் சர்க்கரை நோய் வருமா?

சர்க்கரை நோய் அரிசி சாதம் சாப்பிட்டால் வரும் என்ற கருத்து தவறானது.  நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தன முக்கியம்.  சாப்பிடும் உணவுக்கேற்ற உடல் உழைப்பு இருக்க வேண்டும்.  அவ்வாறு உடல் உழைப்பு இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.  அதனால் முடிந்தவரை குக்கரில் சாதம்  வைக்காமல் கஞ்சியை வடித்து சாப்பிடுவது நல்லது.

சாதம் வடித்த கஞ்சியை ஆற வைத்து குடித்தால் வாயு தொல்லை ஏற்படும்.  அதனால் இந்த கஞ்சியை கொஞ்சம் சூடாக இருக்கும்போதே  சிறிது உப்புபோட்டு குடித்தால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை குணமாகும்.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் சாப்பிடுவதால்  உடலுக்கு குளிர்ச்சியும் வலிமையும் தரும். மற்றும் வயிற்று கோளாறு, மூட்டுவலி, அல்சர் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கும். பழைய சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது  மோர் ஊற்றி சாப்பிடலாம்.

சாதம் வெதுவெதுப்பாக இருக்கும்போது பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர் தாகம், பித்தம் உண்டாகுவதை தவிர்க்கலாம்.  பச்சரிசி சாதத்தில் பல் சேர்த்து சாப்பிட்டால் வாதம், பித்தம் நீங்கும்.

வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.

ஏலியனுடன் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் அயலான் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு  முடியும் நிலையில் உள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.  ஏ. ஆர். ரகுமான் இசையில் படம் பெரும் வெற்றியை தரும் என்று தயாரிப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும் ஏலியன் காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ்  செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு

இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.  கடந்த ஒருவாரமாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 1 சவரன் ரூ.37,208 க்கும், 1 கிராம் ரூ. 4,651 க்கும் விற்கப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 1 சவரன் ரூ.40,280 க்கும், 1 கிராம் ரூ. 5,035 க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 60 காசு உயர்ந்து ரூ.71.30க்கு இன்று விற்கப்படுகிறது

வெள்ளைமாளிகையில் அதிபர் ஜோ பைடனுக்கு தொடக்க உரை  எழுதிய – இந்திய வம்சாவளியை சேர்ந்த வினய் ரெட்டி

வெள்ளை மாளிகையில்  அதிபர் உரை எழுத்தாளர் பணி ஒரு தனித்துறையாகும்.  இத்துறையின் வேலை உரையை ஆராய்ச்சி செய்வதும், உரையை எழுதுவதுமாகும்.

இன்று இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு பதவி ஏற்க இருக்கும் அமெரிக்காவின் 46வது அதிபர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸ்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிபராகும் ஜோ பைடனின் ஆவலாக காத்திருக்கும் நேரத்தில் அந்த உரையை எழுதியவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

இந்த உரை 20 – 30 நிமிடங்கள் நீடிக்கும் அந்த உரை அமெரிக்காவின் எதிர்காலத்திக்காக ஜோ பைடன் வைத்திருக்கும் திட்டங்கள் என கூறப்படுகிறது.

ஜோ பைடன் துணை அதிபர்  பதவியில் இருந்தபோது  அவருக்கு உரை எழுத்தாளராக வினய் ரெட்டி இருந்ததது குறிப்பிடத்தக்கது. வினய் ரெட்டி ஓஹியோ மாகாணத்தில் டெய்டன் நகரில் வளர்ந்தவர்.

அமெரிக்க அதிபருக்கு உரை எழுத்தராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நியமிப்பது இதுவே முதல் முறையாகும்.  மேலும் துணை அதிபராக பொறுப்பேற்கும் கமலா ஹாரிஸ், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்காயத்தின் அற்புதமான நன்மைகள்

வெங்காயம் அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.  வெங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அதில் சிலவற்றை பார்ப்போம்.

வெங்காயத்தில் வைட்டமின் சி, பி 12, எ, கே மற்றும் தையமின் உள்ளது.  இதை தவிர காப்பர், பாஸ்பரஸ், மக்னிசீயம், பொட்டாசியம், குரோமியம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன.

பச்சை வெங்காயத்தில் வைட்டமின் சி மிகவும் அதிகமாக இருக்கும்.  பச்சை வெங்காயத்தில் உள்ள கந்தக சத்து ஒரு சிலருக்கு ஒத்துவராது. அவர்கள் இதை வேகவைத்து சாப்பிடலாம். இதனால் ரத்தம் சுத்தமாகுவதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும்.

சின்ன வெங்காயம் சாப்பிட்டுவந்தால் மாரடைப்பு நோயாளிகளுக்கும்  மற்றும் ரத்த நாள கொழுப்பு உள்ளவர்களுக்கும்  நல்ல தீர்வு  கிடைக்கும்.

வெங்காயத்தை துண்டுத்துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி  சாப்பிட்டால் மலசிக்கல் குணமாகும்.  நெய் இட்டு வதக்கி சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இரும்பல் குணமாகும்.

வெங்காயத்தை தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி,மூளை பலமும் பெரும். வெங்காயசாறு  மோருடன் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு நீங்கி இருமல் குணமாகும்.

மேலும் வெங்காயச்சாற்றை முகப்பரு, கட்டிகள் மீது தடவி வர விரைவில் நிவாரணம் தரும்.  இந்த சாற்றை தேள் போன்ற விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில்  தடவினால் வலிகுறையும்.

வெங்காயத்தில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட் பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பை குறைக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம்  அறிவிப்பு

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் ஜனவரி 1, 2021ன் படி 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் நேரிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.தற்போது தமிழகத்தில் தேர்தல் நாட்கள் நெருங்கி கொண்டு இருப்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும். இணையதள முகவரி www.elections.tn.gov.in

₹35,990 விலையில் அசத்தலான Oppo ரெனோ ப்ரோ 5G ஸ்மார்ட்போன்

இந்திய சந்தையில் இன்று இறுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 5 புரோ 5ஜி  ஒப்போ ரெனோ 5 புரோ 5ஜி 8ஜிபி ரேம் 128 ஜிபி ரோம்,குவாட் ரியர் கேமரா அமைப்பும், மீடியா டெக் டைமன்சிட்டி 1000+SoC மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. ஓப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி உடன் கூடுதலாக, இந்நிறுவனம் ஓப்போ என்கோ X TWS வயர்லெஸ் இயர்பட்ஸையும் ரூ.9999 விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ஓப்போ ரெனோ 5 புரோ 5ஜி: விலை ரூ .35,990 கொண்ட ஓப்போ ரெனோ 5 புரோ 5ஜி 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ்இதில் மேலும் அஸ்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்டாரி பிளாக் கலர் விருப்பங்களில் வருகிறது. ஜனவரி 22 முதல் ஆன்லைன் பிளி ஃகார்ட் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் ஓப்போ ரெனோ 5 புரோ 5ஜி தொலைபேசியை வாங்க இன்று முதல் முன்பதிவுச் செய்யலாம்.

ஓப்போ ரெனோ 5 புரோ 5 ஜி விவரக்குறிப்புகள்

  • ஓப்போ ரெனோ 5 புரோ 5 ஜி ஆண்ட்ராய்டு 11 ஐ கலர் OS 11.1 உடன் இயக்குகிறது
    2400 × 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன்,
  • 90 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 120 Hz தொடு மாதிரி வீதத்துடன்
    6.55 அங்குல முழு HD+ வளைந்த OLED பேனலைக் கொண்டுள்ளது.
  • இந்த தொலைபேசி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ SoC உடன் இயக்கப்படுகிறது,
    119 டிகிரி FoV மற்றும் 2.2 துளை கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்,
    தொலைபேசி 65W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,300 mAh பேட்டரியைப் பேக் செய்கிறது
    64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸின் கலவையுடன் குவாட் ரியர் கேமரா அமைப்பையும்
    கொண்டுள்ளது
    அதோடு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை
    சென்சாரும் இதில் உள்ளது.
  • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோ போர்ட்ரெய்ட் லென்ஸ்
    ஆகியவற்றை பின்பக்கத்தில் கொண்டுள்ளது.
  • ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் முன்பக்கத்தில் உள்ளது
  • ஓப்போ ரெனோ 5 புரோ 5 ஜி 5 ஜி ஆதரவு, இரட்டை 4ஜி VoLTE,
    வைஃபை 802.11 ac (2.4 GHZ + 5 GHZ),
    புளூடூத் 5, GPS/GLONASS/Beidou, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-C போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன்
    ஜேக் உள்ளிட்ட இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது.