கொரோனா தடுப்பூசி முதல் டோஸாக கோவிஷீல்டும், இரண்டாவது டோஸாக கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் கவலைப்பட தேவையில்லை என்கிறார் இந்திய அரசின் தலைமை கோவிட் 19 ஆலோசகர் டாக்டர் வி.கே.பால்.

இது குறித்து இந்தியாவின் கோவிட் -19 ஆலோசகர் டாக்டர் வி.கே.பால் பேசியாதாவது, மக்கள் முதல் டோஸாக எந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்களோ அதே தடுப்பூசியைத்தான் இரண்டாவது டோஸாகவும் செலுத்திக்கொள்ள வேண்டும். தவறுதலாக மக்கள் வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டு இருந்தாலும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் சித்தார்த்நகர் மாவட்டத்திலுள்ள பத்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 கிராமவாசிகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பிறகு , அவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது டோஸாக செலுத்தப்பட்டுள்ளது.

இது பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும் என்று மக்கள் அச்சம் அடைந்தர்கள். இந்நிலையில் ‘கலவையான’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட மக்கள் பாதுகாப்பாகவே உள்ளார்கள். சோதனை அடிப்படையில் தடுப்பூசிகளை கலந்து செலுத்த நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்று சுகாதார நிலைய மருத்துவர் கூறியிருக்கிறார்.

சித்தார்த்நகர் மருத்துவ தலைமை அதிகாரி சந்தீப் சவுத்ரி இது பற்றி பேசுகையில், இந்திய அரசிடமிருந்து தடுப்பூசிகளை ‘கலவையாக‘ செலுத்துவது குறித்து வழிகாட்டுதல்கள் எதுவும் வரவில்லை. கலவையாக தடுப்பூசி செலுத்தியது அலட்சியம் காரணமாக நடந்துள்ளது.

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், அதே டோஸ் தடுப்பூசியை இரண்டாவது முறை செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி டோஸ்கள் மாற்றி போடப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி டோஸ்கள் மாற்றி போட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

See also  சர்வதேச புலிகள் தினம்