அஞ்சல் துறையில் பல திட்டங்கள் இருந்தாலும் நம் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் மாத வருமானம் பெற முடியும் என்ற திட்டம் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

நம் நாட்டின் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இந்த திட்டம் மெகா சிறந்த ஒன்றாகும். ஒன்று அல்லது கூட்டு கணக்குகள் என இவ்விரண்டையும் திறந்துபயன் பெற முடியும். தபால் நிலைய இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக ரூ.1000 உங்கள் வங்கி கணக்கில் முதலில் செலுத்த வேண்டும். பின்னர் அதிகபட்சமாக 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

கூட்டு கணக்கு உள்ளவர்கள் அதிக முதலீடான 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். பின்னர் மாத முதலீடு திட்டத்தில் 4.5 லட்சம் இருப்பின் வட்டி விகிதம் 6.6 சதவீதமாகும். எனவே செலுத்தும் அந்நபருக்கு மாத வருமானமாக ரூபாய் 2475 கிடைக்கும். எனவே கூட்டு கணக்கு கொண்டு திட்டத்தினை பயன்படுத்துபவர்கள் வருகின்ற மதா வருமானத்தை சமமாக பகிர்ந்துகொள்ளலாம். இத்திட்டத்தில் பங்கு கொண்டு மாத வருமானம் பெற அருகில் உள்ள தபால் நிலையத்தினை அணுகவும்.