Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

கோடைக் காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

  • கோடைக் காலத்தில் வெயில்,வியர்வை சுரப்பதன் காரணமாக பலரும் சருமப் பிரச்னையால் அவதிப்படுவர். உடலில் டீஹைடிரேஷன் அதாவது நீர்ச்சத்து குறையும்போது சருமத்திற்குத் தேவையான நீர் கிடைக்காதபோது சருமம் வறண்டு காணப்படும்.
  • மேலும் வெயிலில் செல்வதால் அலர்ஜி, உடலில் தடிப்புகள், பருக்கள்,வியர்க்குரு போன்றவை ஏற்படும்.
  • இயற்கையாக இதனை சரிசெய்ய பல பொருள்கள்,வழிகள் இருக்கின்றன. இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடியில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பை பெரும்.
  • ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். ஒரு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவவும்.
  • தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. இதனைச் செய்யும்போது உங்கள் வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும்.
  • மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.
  • இந்த கலவையை கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • வெயில் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் அதிக நீரை பருகுவது மிகவும் முக்கியமானது ஒன்றாகும்.
Previous Post
food

2 மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகிக்க தடை

Next Post
modi 2

ஏப்ரல் 14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Advertisement