தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது எந்த படிவத்திற்கும் கட்டணம் வசூலிக்க கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் இந்த ஆண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.

தற்போது தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் போது எந்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்றும், மாணவர் சேர்க்கையின் போது எந்த படிவத்திற்கும் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

See also  Submit your recipe food photos recipe many on sites to gain also been conflate