நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூன் 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் தடுப்பூசிக்காக பணத்தை மாநிலங்கள் செலவழிக்க வேண்டாம். இன்று முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறினார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும்.

இன்று முதல் இணையதள முன்பதிவு இல்லாமல் நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் அமலுக்கு வருகிறது.

See also  தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்க்கான கால அவகாசம் நீட்டிப்பு