Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி(Kalvi Television) மூலம் வகுப்பு வாரியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வருகிறார்கள். அவ்வாறு அரசுப்பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையை மறுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வித் தொலைக்காட்சியை பார்க்கிறார்களா…

Read More

தினமும் காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். காலை உணவு அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் கழிக்க உதவும். காலை உணவு எடுத்து கொள்வதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு சில உணவு பதார்த்தங்களை சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படும். காலையில் வெறும் வயிற்றில் எந்த உணவு சாப்பிடக்கூடாது, எந்த உணவு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். சாப்பிடக்கூடாத உணவுகள்: தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. தக்காளியில் இருக்கும் டேனிக் அமிலம், இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து கரைய முடியாத ஜெல்லை உருவாக்குகிறது. இதனால் வயிற்றில் கற்கள் கூட உருவாகும். மேலும் இதனால் அல்சர் போன்ற பிரச்சினைகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ், தக்காளி சாஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிலிருக்கும் மக்னீசியம்…

Read More

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு பிப்ரவரி முதல் அமலுக்கு வரும் என்று நேற்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்தில் MBC (V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் விநியோகம் நேற்று தொடங்கியது. இந்நிலையில் மாணவர்கள் நேற்று முதல் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்து வருகின்றனர். இச்சூழலில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் இன்று MBC(V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர நேற்று பதிவு செய்த மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று பதிவு செய்த மாணவர்கள் NAME OF THE COMMUNUTY என்ற காலத்தில் திருத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். MBC-ஐ மூன்றாக…

Read More

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதற்கான காரணங்களையும் தற்போது கூறியுள்ளார். கடந்த வாரம் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா சந்தித்தார். அப்போது இருந்து எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அது போலவே இன்று முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகி உள்ளார். இன்று பிற்பகல் கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அம்மாநில ஆளுநர் அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.எஸ். எடியூரப்பா கூறியதாவது, முதலமைச்சராக பதவி வகிக்க வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஆகியோருக்கு நன்றி என்றார். முதலமைச்சர் பதவியை 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன் என்று கூறியிருந்தபடி, இப்போது நான்…

Read More

அதிமுகவை சேர்ந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதால், அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான முக்கிய ஆவணங்கள், சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, கரூரில் உள்ள அவருடைய வீடு, அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 25.50 லட்சம் ரூபாய் ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விஜயபாஸ்கர் அவரது மனைவி விஜயலட்சுமியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருப்பதாக…

Read More

ஆடி மாதம் அந்த காலத்திலிருந்தே மிக முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆடியில் விதை விதைத்து, கார்த்திகை மற்றும் தை மாதங்களில் அறுவடை செய்வார்கள். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், பயிரிடுதல், குடிசைத் தொழில் செய்தல், துணி நெய்தல் போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்த கூடிய முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆடியில் மாதத்தில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் கார்த்திகை மற்றும் தை மாதங்களில் பயிர் அறுவடை செய்ய முடியும். பயிர் அறுவடை செய்யும் போது கைக்கு பணம் வர வாய்ப்பு இருக்கும். இந்த சமயத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணப் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். ஆடி மாதத்தில் விவசாயத்திற்கு செலவு செய்ய வேண்டி இருப்பதால், கல்யாணம், விருந்து போன்ற விசேஷங்களுக்கு செலவு செய்யப் பணம் இருக்காது. அதனால்…

Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தலுக்கும் இடையே 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 205 நாடுகள் கலந்து கொண்டுள்ளது. மேலும் இதில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு 84 மற்றும் 87 கிலோ எடையை முதலில் தூக்கினார். பிறகு 89 கிலோ எடையை தூக்க அவர் முயற்சித்தார். அதை அவரால் தூக்க முடியவில்லை. இதைத்…

Read More

கொரோனா காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கும், பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்டு மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்யும் போது, கட்டாயம் தங்களுக்குரிய அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் குறிப்பிட்ட ஓரிரு பாடத் தேர்வுகளை மட்டும் எழுத விண்ணப்பிக்க முடியாது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் தேர்வர்கள் எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2021 பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தற்போது மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இன்று முதல் 27.07.2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள்,…

Read More

கொரோனா காலத்தில் நாம் சத்து நிறைந்த நவதானிய உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். நவதானியங்களை தோசையாக செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நவதானிய தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு – 1/4 டம்ளர் துவரம்பருப்பு – 1/4 டம்ளர் கொள்ளு – 1/4 டம்ளர் கருப்பு உளுத்தம் பருப்பு – 1/4 டம்ளர் கொண்டைக் கடலை – 1/4 டம்ளர் பச்சரிசி – 1/4 டம்ளர் சோயா – 1/4 டம்ளர் வெள்ளை சோளம் – 1/4 டம்ளர் எள்ளு – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 காய்ந்த மிளகாய் – 6 இஞ்சி – சிறு துண்டு பொடியாக நறுக்கவும் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி…

Read More

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த உயரிய விருதுகளுக்கான பரிந்துரைகளை அதன் அதிகாரப்பூர்வ https://padmaawards.gov.in இணையதளத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை அளிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பத்மவிருதுகளானது கல்வி, அரசியல், இலக்கியம், விளையாட்டு, அறிவியல், பொதுப்பணி, சமூக சேவை, கலை, வர்த்தகம், மருத்துவம் போன்ற பல துறைகளில் சிறந்த சாதனைகளையும் அதன் எல்லைகளையும் அடைந்தவர்களுக்காக வழங்கப்படும் விருது என்பதால் பல்வேறு துறையிலிருந்து யாரை வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம் எனவும் தனி நபர் பரிந்துரைகளும் அனுமதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விருதானது 2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் பெயர்களை பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது குறித்த மேலும் தகவல்களை அறிய www.mha.gov.in என்ற மத்திய உள்துறை…

Read More

எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டாலோ நமக்கு வயிறு உப்புசம் பிரச்சனை ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்து கொண்டே இருந்தாலும் வயிறு உப்புசம் ஏற்படும். இவற்றிலிருந்து எளிதாக நிவாரணம் பெற சில இயற்கை வைத்தியத்தை பார்ப்போம். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குடித்தால் வயிறு உப்புசப் பிரச்சனை தீரும். எலுமிச்சை பழத்தில் உள்ள அசிட்டிக், மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உருவாக்கி செரிமானத்தை தூண்டி தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற செய்யும். இதனால் வயிறு வலியும் குறையும். வயிறு உப்புசமான நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு வாழைப் பழங்களை சாப்பிடவும். பிறகு பசி எடுக்கும் வரை உணவு சாப்பிடாமல் இருந்தால் நல்ல நிவாரணம் பெறலாம். பொதுவாகவே வாழைப்பழம் மலச்சிக்கலை தீர்க்கும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எளிதாக தீர்க்கிறது. வயிறு உப்புசத்தை சரி செய்யும் சத்து வாழைப்பழத்தில்…

Read More

சென்னையில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோனேடிக்ஸ் அண்ட் ஏவியேஷன்’ நிறுவனம், வானியல் தொடர்பான படிப்பை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், நாடு முழுதும் பத்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரஷ்யா விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அனுப்பி வைக்கப் படுகின்றனர். இதற்கு நான்கு கட்டமாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி இருந்தது. அந்த வகையில் ரஷ்யா விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற மாணவர்களுக்கு நடைபெற்ற முதற்கட்ட நுழைவுத்தேர்வில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளார்கள். இந்த விண்வெளி பயிற்சிக்காக நடைபெற்ற முதற்கட்டமாக தேர்வில் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னை அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி டி.அருணாவும், மாணவர் எஸ்.சண்முகமும் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளார்கள். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read More

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண் திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக www.tn.results.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளை பள்ளி கல்வி துறை வெளியிட்டுள்ளது. இந்த இணையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சமர்ப்பிக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வரும் 22ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகும். இதனை www.dge.tn.gov.in மற்றும் www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களின் மூலம் மாணவர்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Read More

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Assistant Professor பணியிடங்ளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Professor வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி Graduate என கொடுக்கப்பட்டுள்ளது.இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனத்தின் பெயர்: TANUVAS பணியின் பெயர்: Assistant Professor கல்வித்தகுதி: Graduate மொத்த காலிப் பணியிடங்கள்: 49 பணியிடம்: தமிழ்நாடு மாதச் சம்பளம்: ரூ.57,700/- அதிகாரப்பூர்வ இணையதளம்:  www.tanuvas.ac.in தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2021 விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் மேலும் www.tanuvas.ac.in என்ற தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் அறிவிப்பினை அணுகி முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Read More