Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளும், கல்லூரிகளும் நாளை முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களின் வருகைக்காக பள்ளிகளில் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம், நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என்று திடீரென அறிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரியில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது. பள்ளி-கல்லூரி திறப்பதை குறித்து பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் நோய் தொற்று இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே பள்ளி திறப்பு குறித்து மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து வந்தது. இந்த…

Read More

உருளைக்கிழங்கின் தோலை நீக்கி அதை தேவையான வடிவத்திற்கு அழகாக வெட்டி எண்ணெய்யில் பொரித்து சிறிதளவு பெப்பர் கலந்து விற்கக்கூடிய உருளைக்கிழங்கு பொரியலை தான் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் என்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ முதலிடம் பிடித்திருக்கிறது. கடைகளில், மால்களில் அதிக விலை கொடுத்து வாங்க கூடிய ஃப்ரெஞ்ச் ப்ரைஸை வீட்டிலேயே நாம் சுவையாக, சுலபமாக எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் பெரிய சைஸ் உருளைக்கிழங்கு: 1/2 கிலோ பொரிப்பதற்கு தேவையான அளவு: எண்ணெய் தேவையான அளவு: உப்பு சிறிதளவு மிளகு தூள் செய்முறை முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கி அதை நீளவாக்கில் ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு ஏற்ப அழகாக வெட்டி கொள்ளவும். இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை தண்ணீரில் போட்டு பதினைந்து அல்லது இருபது நிமிடம் ஊற வைக்கவும். இவ்வாறு தண்ணீரில் போட்டு ஊற வைப்பதால் உருளைக்கிழங்கின்…

Read More

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் (Hindustan Aeronautics Limited) அதிகாரபூர்வ இணையதளத்தில் Trade Apprentice, Fitter, Welder, Machinist, Electrician, Turner பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் www.hal-india.co.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான HAL விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 28.07.2021 ஆகும். பதவியின் பெயர் Fitter, Welder, Machinist, Electrician, Turner காலியிடங்கள் Various கல்வித்தகுதி 10th, ஐ.டி.ஐ பணியிடம் பெங்களூரு (Bengaluru) தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் விண்ணப்ப கட்டணம் இல்லை விண்ணப்பிக்க முகவரி Technical Training Institute, Hindustan Aeronautics Limited, Suranjan Das Road, Vimanapura Post, Bengaluru – 560 017 விண்ணப்பிக்க கடைசி தேதி 28 ஜூலை 2021 அதிகாரப்பூர்வ இணையதளம் www.hal-india.co.in கர்நாடகாவில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை…

Read More

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாயை வழங்கினார். மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த இராணுவ படைவீரர் N.பாலமுருகனின் தாய் குருவம்மாள் அவர்களும், கிருஷ்ணகிரி மாவட்டம், இராகிமானப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த இராணுவ படைவீரர் N.சந்தோஷ்-யின் தாய் சித்ரா அவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த இராணுவ படை அலுவலர் S.ஆனந்த்-யின் மனைவி பிரியங்காநாயர் அவர்களும், திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்த மறைந்த இராணுவ படைவீரர் எஸ்.சபரிநாதனின் தாய் S.மனோன்மணி அவர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்வின் போது, அரசு பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Read More

வெரிக்கோஸ் வெயின் என்ற நரம்பு சுருட்டல் பாதிப்பு ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக தாக்குகிறது. ஒரே இடத்தில் அதிக நேரம் நின்று கொண்டு இருந்தாலோ அல்லது உட்கார்ந்திருந்தாலோ கால்களில் நரம்பு முடிச்சு உருவாகும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், ஒரே இடத்தில் இருப்பவர்கள், வாகன ஓட்டுனர்கள், காவல் வேலை செய்பவர்கள் போன்றோர்க்கு இந்த நோய் தொற்றிக்கொள்ளுமாம். இந்த நோய் அதிகமான வலியை ஏற்படுத்தும். நரம்பு சுருட்டல் பாதிப்பு ஏற்பட்டால் பாதங்களில் அரிப்பு, வீக்கம் மற்றும் வலி அதிகமாக ஏற்படும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை கூட மேற்கொள்ளப்படும் நிலை உருவாகும். ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள், உடற்பயிற்சி போதிய அளவில் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், வயது, ஜீன் ஆகியவற்றால் இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். நரம்பு சுருட்டலினால் பெரும் பாதிப்பு இல்லையென்றாலும் அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும். நரம்பு சுருட்டல் பாதிப்பு குணமாக சில மருத்துவ குறிப்புகள்: குப்பைமேனி,…

Read More

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதரங்களைத் திரட்டி வருகிறது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா? என ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆய்வுக்காகவே பிரத்யேகமாக இந்த ரோவர் ரோபோட் வடிவமைக்கப்பட்டது. இந்த கிரகத்தில் உள்ள மிக பெரிய பிரமாண்டமான பள்ளத்தாக்குகளில் இந்த ரோபோட் தனது ஆய்வு பயணத்தை தொடங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தற்போது ரோவர் ஆராயப் போகும் பள்ளமானது பில்லியன் ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய ஏரியாக இருந்தது என சொல்லப்படுகிறது. தற்போது நீரின்றி காணப்படும் இந்த சிவப்பு கிரகம் ஒரு காலத்தில் ஈரமாக நீரோட்டத்துடன் இருந்திருக்கிறது. ஆறு சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோட்டிக் ரோவர் ஐந்து மைல்கள் தூரம் வரை பயணித்து மாதிரிகளை சேகரிக்கும். மேலும் செவ்வாய்…

Read More

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘விர்ஜின் கேலக்டிக்’ சோதனை முயற்சியாக ஐந்து பேர் கொண்ட விண்வெளி குழுவை இன்று விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த விண்வெளி குழுவில் இந்திய வம்சாவளி சேர்ந்த விண்வெளி வீராங்கணையான ஸ்ரீஷா பண்ட்லா இடம் பெற்றுள்ளார். விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ள ஸ்ரீஷா பாண்ட்லா இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்றாவது பெண் என்ற பெருமையை கொண்டுள்ளார். இவர் ஆந்திர மாநிலம் குண்ட்டூரை பூர்வீகமாகக் கொண்டவர். விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தில் ஸ்ரீஷா அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக இருக்கிறார். கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ்க்கு பிறகு விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாவது விண்வெளி வீராங்கனையாக ஸ்ரீஷா பாண்ட்லா உள்ளார். நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து யூனிட்டி-22 விண்கலம் மூலமாக விண்வெளி வீரர்கள் இன்று புறப்பட உள்ளனர். ‘யூனிட்டி 22’ விண்கலம் விர்ஜின் கேலக்டியின் இரட்டை விமானங்களுக்கு நடுவில் பொருத்தப்பட்டுள்ளது.…

Read More

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உடுமலைபேட்டை அலுவலகத்தில் (TANGEDCO) இருந்து Electrician, Wireman காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள் 80 என கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி 8th, 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம்: TANGEDCO பணியின் பெயர் : Electrician, Wireman மொத்த காலிப் பணியிடம்: Electrician – 50 , Wireman – 30 கல்வித்தகுதி: 8th, 10th தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மாத ஊதியம்: ரூ.7,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: as soon விண்ணப்பிக்கும் முறை: online இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள link-ஐ க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60e800d644f7d762212e506f https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60e80079f6f9d75dd631b1a6 இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Read More

தென் அமெரிக்க நாடான பெருவில் ஜூன் 14 ஆம் தேதி லாம்ப்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வகை வைரஸுகளில் ஒன்றான லாம்ப்டா மிக மோசமான வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல கோடி மக்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வெவ்வேறு வகையில் மாற்றம் அடைந்து வருகிறது. மாற்றமடைந்து வரும் கொரோனா வகை வைரஸை ஆல்பா, பீட்டா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டா மாற்றமடைந்து டெல்டா ப்ளஸாக மாறியது. உலக முழுவதும் டெல்டா ப்ளஸ் ஆபத்திற்குரியதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தென் அமெரிக்க நாடான பெருவில் கண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வேரியண்டானது டெல்டா ப்ளஸை விட வீரியமிக்கது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். லாம்ப்டா வகை வைரஸ் மிகக் குறுகிய நாட்களிலேயே கிட்டத்தட்ட 25 நாடுகளில் பரவி…

Read More

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Drivers பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு https://www.indiapost.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மொத்த காலிப் பணியிடம் 16 என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான கல்வித் தகுதியும், திறமையும் உடையவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை பணியின் பெயர் : Staff Car Drivers மொத்த காலிப்பணியிடங்கள் : 16 தேர்வு செய்யும் முறை : Driving Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். வயது வரம்பு: 18-27 கல்வி தகுதி : 10th Pass, Light and Heavy Motor vehicles உரிமம் பெற வேண்டும். மாதச் சம்பளம் : அதிகபட்சம் ரூ.19,900/- விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.08.2021 மேலும் முழு விவரங்களை : https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMS_Mumbai_07072021_E.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Read More

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து இன இளைஞர்களும் ஆண்டுதோறும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி 9-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களும் இந்த உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 45 வயது, மற்ற இனத்தவா்களுக்கு 40 வயது பூா்த்தி அடைந்திருக்கக் கூடாது மற்றும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்க கூடாது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ள மனுதாரா்கள் தங்களது அசல் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு எடுத்து சென்று நேரில் விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை…

Read More

தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா்கள் சேர்க்கைக்கு www.skiltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஜூலை 28 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிபெறும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அரசு, தனியார் ஐ.டி.ஐ.யில் சேர 8 ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ.யில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை ஜூலை 28 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு பற்றிய விவரங்கள் ஜூலை 28 ஆம் தேதிக்கு பின் இதே இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவா்களுக்கு…

Read More

2021 சட்டமன்ற தேர்தலுக்காக அஇஅதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது என அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலின்போது புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டது என்றும் மக்கள் தொண்டில் ஆர்வம் கொண்ட பல்வேறு இயக்கங்களும் அமைப்புகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் எதிர்காலம் சிறக்கவும் எண்ணற்ற பணிகளை ஆற்றியது என குறிப்பிட்டுள்ள அவர்கள் வாக்காளர்கள் அளித்த ஆதரவால் அதிமுக கூட்டணியில் 75 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள் என கூறியுள்ளனர். வெறும் 3 சதவிகித வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் எனக் கூறியுள்ள அதிமுக தலைமை மிக குறைந்த…

Read More

ரேஷன் கார்டு மூலமாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் புதிய ரேஷன் கார்டு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தால், நீக்குதல் உள்ளிட்ட சேவைகளை தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளத்தில் செய்து கொள்ளலாம். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்கள் tnpds.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், E -சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பித்த நபர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நிவாரண நிதியாக ரூபாய் 4000 இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. நிவாரண நிதி வழங்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்பித்தவர்களுக்கு வழங்கும் பணிகளை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பொது விநியோகத்திற்கான வெப்சைட் பராமரிப்பு பணிகளுக்காக…

Read More