உருளைக்கிழங்கின் தோலை நீக்கி அதை தேவையான வடிவத்திற்கு அழகாக வெட்டி எண்ணெய்யில் பொரித்து சிறிதளவு பெப்பர் கலந்து விற்கக்கூடிய உருளைக்கிழங்கு பொரியலை தான் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் என்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகைகளில் ‘ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்’ முதலிடம் பிடித்திருக்கிறது. கடைகளில், மால்களில் அதிக விலை கொடுத்து வாங்க கூடிய ஃப்ரெஞ்ச் ப்ரைஸை வீட்டிலேயே நாம் சுவையாக, சுலபமாக எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பெரிய சைஸ் உருளைக்கிழங்கு: 1/2 கிலோ
பொரிப்பதற்கு தேவையான அளவு: எண்ணெய்
தேவையான அளவு: உப்பு
சிறிதளவு மிளகு தூள்

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கி அதை நீளவாக்கில் ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு ஏற்ப அழகாக வெட்டி கொள்ளவும். இந்த உருளைக்கிழங்கு துண்டுகளை தண்ணீரில் போட்டு பதினைந்து அல்லது இருபது நிமிடம் ஊற வைக்கவும். இவ்வாறு தண்ணீரில் போட்டு ஊற வைப்பதால் உருளைக்கிழங்கின் வெளியில் உள்ள ஸ்டார்ச் நீங்கி விடும். ஸ்டார்ச் நீக்கிய உருளைக்கிழங்கை எண்ணெய்யில் பொரிக்கும் போது மொரு மொறுப்பாக வரும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை 20 நிமிடம் சுட வைத்து கொள்ளவும். அதில் சிறிதளவு உப்பும், தண்ணீரில் ஊறிக் கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு துண்டுகளையும் எடுத்து போடவும். இதை ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு சுடு தண்ணீரில் இருந்து உருளைக்கிழங்கை எடுத்து ஒரு துணியை விரித்து உருளைக்கிழங்கை பரப்பி அதில் இருக்கும் ஈரத்தை துடைத்து கொள்ள வேண்டும்(தண்ணீருடன் உருளைக்கிழங்கை எண்ணெயில் போட கூடாது).

பிறகு மிதமான தீயில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக சுட வைத்து உருளைகிழங்கு துண்டுகளை அதில் போட்டு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் வரை பொரிக்க வேண்டும். உருளைக்கிழங்கு பொன்னிறமாக மாறும் அளவிற்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பொரித்த உருளைக்கிழங்கை ஒரு bowl-ல் எடுத்து அதில் சிறிதளவு உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து கிளறினால் சூடான மொறு மொறுப்பான பிரெஞ்சு ப்ரைஸ் தயார்.

இந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்யை அவரவர் விருப்பத்திற்கேற்ப ketchup ஓ, mayonnaise ஓ, tomato sauce ஓ, அல்லது vinegar-ரோ சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

See also  10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!