Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

பொதுவாக ஏலக்காயில் நிறைய மருத்துவகுணங்கள் நிறைந்து இருக்கும். ஆனால் நாம் இதை ஒரு வாசனை பொருளாக மட்டும் தான் பயன்படுத்தி இருக்கிறோம். இனிப்பு பலகாரங்களில், பிரியாணி போன்ற உணவுகளில் வாசனைக்காகயும், ருசிக்காகயும் ஏலக்காயை பயன்படுத்துவது மட்டும் தான் நமக்கு தெரியும். ஏலக்காய் நமக்கு மருந்தாக எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம். தினமும் சூடான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடியை தேன் சேர்த்து குடித்து வந்தால் இருபாலருக்கும் கருவளர்ச்சி குறைபாடுகள் நீங்கும். இதுமட்டுமில்லாமல் நெஞ்சில் சளி உள்ளவர்களுக்கும், இருமல் மற்றும் வயிற்று வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏலக்காய் அற்புதமான மருந்தாக பயன்படுகிறது. மேலும் ஏலக்காய் தூள் இவர்களுக்கு நல்ல பலனையும் தருகிறது. இந்த ஏலக்காய் ஹைடோஸ் மாத்திரையை போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது. அதனால் இதை நம்முடைய உணவில் சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். ஏலக்காயை நம் உணவில் அதிக அளவு சேர்த்து கொண்டால்…

Read More

சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரித்து கொண்டே இருப்பதால் சாமன்ய மக்களின் பாக்கெட்டுகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது என்று கூறலாம். தற்போது 14.0 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 809 என்ற அளவில் உள்ளது. இந்தநிலையில், அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் பேடிஎம் (Paytm) ஒரு அசத்தலான ஆஃபரை கொண்டுவந்து இருக்கிறது. நீங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான Paytm மூலம் முதல்முறையாக LPG சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது உங்களுக்கு 800 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் LPG சிலிண்டர் முன்பதிவின் கட்டணத்தை Paytm மூலம் செலுத்தும் போது, 809 ரூபாயாக இருக்கும் ஒரு சிலிண்டரை டெல்லியில் ரூ.9 என்ற விலைக்கு பெறலாம். இந்த சலுகை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த சிலிண்டர் முன்பதிவுக்கு Paytm வழங்கியுள்ள சலுகையில் சில நிபந்தனைகள் அடங்கி உள்ளது. முதன்முறையாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு…

Read More

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. 10-ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்களை உயர்த்த விரும்பபினால் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. அதாவது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக 35 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்வு மதிப்பெண்கள் 35 விட கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்தந்த பள்ளி அளவில் நடைபெறும் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி அளவிலான தேர்வு ஜூன் , ஜூலை மாதங்களில் நடத்தப்படலாம் என…

Read More

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவாமனை தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை சில கொரோனா நோயாளிகள் மிகவும் அலட்சிய படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த கண்ணன் என்ற 32 வயது வாலிபர் நேற்று கொரோனா பரிசோதனை செய்து இருக்கிறார்.அவருக்கு காய்ச்சல் மற்றும் நோய் தொற்று அறிகுறி இருந்தததால் உடனடியாக அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எனக்கு பரிசோதனை முடிவு வரும் முன்னரே ஏன் என்னை கொரோனா வார்டில் சேர்த்தீர்கள், என்று கூறி அந்த வாலிபர் மருத்துவமனை பணியாளர்களுடன் தகராறில் ஈடுப்பட்டு உள்ளார். இரவில் உணவு வழங்கிய போது உணவு வழங்கியவர்களுடன் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அங்கு இருந்த கதவின் கண்ணாடியை…

Read More

கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் காரணமாக, தடுப்பூசி மையங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும், சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையம் இணை நிறுவனர் தொடர்ந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசிபோட வயது வரம்பை நிர்ணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் தரப்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து,சென்னை உயர்நீதிமன்றம் 18 வயது முதல் 45 வயதுக்கும் குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா என மருந்து தயாரிக்கும் நிறுவனத்துடன் கலந்து ஆலோசித்து மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பை நிர்ணயித்து மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read More

மத்திய அரசானது, கொரோனா வைரஸ் முதல் அலையின் போது வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாக்கும் பணியில் இருக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ, சுகதாரப் பணியாளர்கள் திடீரென உயிரிழப்பு நேர்ந்தால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மத்திய அரசு மார்ச் மாதம் 24-ம் தேதி கொரோனா வைரஸ் காலத்தில் பணியாற்றும் மருத்துவ சுகாதரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 50 லட்சத்துக்கான காப்பீடு திட்டத்தை ரத்து செய்துள்ளது. அடுத்தகட்டமாக மத்திய அரசு, புதிய காப்பீடு நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்களை வெளிட்டுள்ளனர். மத்திய அரசானது பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் வழங்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தில் ரூ.1.70 லட்சம் கோடியை 22 லட்சம் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடாக அறிவித்தது. இந்தத் திட்டத்தில் வார்ட் உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள், பாராமெடிக்கல் பிரிவினர், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் போன்றோருக்கு காப்பீடு வழங்கப்பட்டது. இந்நிலையில்…

Read More

நடிகர் விவேக் உடல் நலம் பாதிக்கப்பட்டதை  குறித்து  நடிகர் மன்சூர் அலிகான் பொய்யான தகவலை பரப்பி வருவதாக அவர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17 அன்று உயிர் இழந்தார். நடிகர் விவேக்கிற்கு  தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தமிழக மக்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் விவேக் மரணம் குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி போட்டு கொண்டதால் தான் நடிகர் விவேக்  உடல் நிலை பாதிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார். மேலும் அவர் யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் கூறினார். இந்நிலையில் தற்போது  நடிகர் மன்சூல் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் மன்சூல்…

Read More

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தால், இன்று தனியார் மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

திருச்சியில் உள்ள தேசிய தொழிநுட்பக் கழகத்தில் (NIT) வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பணியின் விவரம் : Project linked Research Fellows, Project Associate, Project Assistant, Laboratory Mechanic, Project Staff மொத்த காலி பணியிடங்கள்: 30 கல்வித் தகுதி: Diploma, B.E/ B.Tech, M.E/ M.Tech மாத சம்பளம்: ரூ.18,000 – ரூ.31,000 தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 19 மேலும் முழு விவரங்களை இந்த லிங்க் https://www.nitt.edu/ மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

Read More

நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல், 17) காலை 4.35 மணிஅளவில் உயிர் இழந்தார். இவருடைய மரணம் சினிமா திரையுலகத்திற்கும், இவருடைய ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். இவருடைய மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சினிமாவில் அனைவராலும் பாசத்தோடும், அன்போடும் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். இவருடைய இயற்பெயர் விவேகானந்தன். 1961ம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அங்கய்யா – மணியம்மாள் தம்பதியாருக்கு மகனாக பிறந்தார். இவருடைய பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்தார். பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் பட்டம் பெற்றார். சினிமா உலகிற்கு வருவதற்கு முன் மதுரையில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்தவர். பிறகு சென்னைக்கு வந்து டிஎன்பிஎஸ்ஸி குரூப்-4 தேர்வு எழுதினார். இந்த தேர்வில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு தலைமைச்…

Read More

தேர்வு பற்றி அச்சம் நம்மில் தொற்றிக் கொண்ட உடனே, நம் நடவடிக்கைகளில் பல்வேறுமாறுதல் நிகழ்வதை நாம் பார்க்கலாம். அதில் முக்கியமான ஒன்று, உணவுப் பழக்க வழக்கம். தேர்வு நேரங்களில் உணவுப் பழக்கத்தில் பல்வேறு மாற்றங்களையும் சில கட்டுப்பாடுகளையும் கையாள்வது கட்டாயமாகிறது. சில மாணவர்கள் தேர்வுநேரங்களில் சாப்பிடாமல் படித்துக்கொண்டே இருப்பார்கள். பெற்றோர்களும் அதை பெரிதாக பொருட்படுத்துதாமல் விட்டுவிடுகின்றனர். தேர்வு நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்த குறிப்பிட்ட உணவுகள் பெரிதும் துணை புரிகின்றன. நினைவாற்றலை மேம்படுத்த குறிப்பிட்ட உணவுககளை உண்பதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதோடு, நல்ல நினைவாற்றலை தந்து, நினைத்த மதிப்பெண்களை பெற வழிவகை செய்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதற்காக காலை உணவை எடுத்துக்கொள்ளாமல், நேரடியாக தேர்வுகளை சமாளிக்க சென்று விடுவார்கள்.ஆனால் தேர்வு எழுதும்போது மூளையானது சோர்வடைந்து எழுத்தமுடியாமல் போய்விடும். எனவே மாணவர்கள் தேர்வுக்கு முன்னும் பின்னும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் நீர் ஆதாரங்களை எடுத்துக்கொள்ளுவது மிகவும் நல்லது. தேர்வின் பொது தண்ணீரை எடுத்துக்கொண்டு…

Read More

அண்ணா பல்கலைக் கழக இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறார்கள். செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் இதுவரை முறையான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் மீது பொறியியல் கல்லூரிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறது. பொறியியல் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்தது. இந்த செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணையவழி மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி பிஇ, பிடெக், மற்றும் எம்இ, எம்டெக் படிப்புகளில் 2-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டது. இந்த…

Read More

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான இன்று செய்முறை தேர்வு தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி 23 ஆம் தேதி வரை நடக்கும் இந்த செய்முறை தேர்வை 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். பொதுவாக இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், உயிரி தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், வரும் மே 5 -ஆம் தேதி பொதுத் தேர்வு துவங்க உள்ளது. மே 31-ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மே 3-ஆம் தேதி நடக்க இருந்த மொழிப் பாடத் தேர்வு, மே 31ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் கட்டமாக இன்று செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான செய்முறை பயிற்சி வகுப்புகளும்…

Read More

இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வங்கியான ‘சிட்டி பேங்க்’ தெரிவித்துள்ளது. மேலும் சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா , போலந்து, பிலிப்பைன்ஸ் , வியட்நாம், கொரியா, தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும் வங்கி சேவைகளை நிறுத்தப்போவதாக சிட்டி பேங்க் தெரிவித்து இருக்கிறது. அமெரிக்காவின் மூன்றாவது பெரியவங்கி ‘சிட்டி பேங்க்’ குழுமம் ஆகும். இந்த வங்கி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 12 லட்சம் வங்கி சேவை பெறுவோர்கள் இருக்கிறார்கள். மேலும் இந்த வங்கியில் 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள், சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 4000 ஊழியர்களுடன் சிட்டி பேங்க் இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக ‘சிட்டி பேங்க்’ தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் சிட்டி பேங்க் குழுமம் அமெரிக்காவை தவிர்த்து லண்டன்,சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம்…

Read More