ஐ.பி.எல். லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தியாவில் பதினான்காவது ஐ.பி.எல் தொடர் நடக்கிறது.நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடத்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை,பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணி ‘டாஸ் ‘ வென்றது. பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி ‘பீல்டிங்’ யை தேர்வு செய்தார். மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 19 ரன் எடுத்து சுமாரான துவக்கத்தை தந்தார். பின்னர் இணைந்த கிறிஸ் லின் 49 ரன்னும் , சூர்யகுமார் யாதவ் 31ரன்னும் எடுத்தைகள். இந்த ஜோடி மும்பை அணிக்கு நம்பிக்கை தந்தது. இவர்களுக்கு அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னும், இஷான் கிஷான் 28 ரன்னும், குர்னால் பாண்ட்யா 7 ரன்னும், போலார்டு 7 ரன்னும் எடுத்தார்கள். மார்கோ ஜான்சென் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்ஷல் படேல்…
Author: gpkumar
தற்போது ‘சூர்யா 40 ‘ படத்தின் போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதை சூர்யா 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கிராமத்து படம் என்று கூறப்படுகிறது.இதைத் தவிர, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். இந்த திரைப்படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை கொண்டு எடுக்கப்படுகிறது. இந்தபடம் முழுக்க வாடிவாசல் நாவல் அல்ல, இந்த நாவலுக்கு மேலாக வெற்றிமாறன் கற்பனையாக சில பகுதிகளையும் சேர்த்து இருக்கிறாராம். பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40 ‘ படப்பிடிப்பு தற்போது முழு வீச்சாக நடந்து கொண்டுயிருக்கிறது. டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ரத்னவேலு. கிராமத்து கதையான இந்த படத்தில் சூர்யா வித்தியாசமான ஹேர் ஸ்டைலில்…
மத்திய அரசிற்கு உள்பட்ட ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் Draughtsman மற்றும் Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலிபணி இடங்கள்: 572 நிர்வாகம் பெயர் : Military Engineer Services வேலையின் விவரம்: Draughtsman – 114 மாத சம்பளம்: ரூ.35,400 முதல் – ரூ.1,12,400 வரை கல்வி தகுதி: Architectural Assistantship துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலையின் விவரம்: Supervisor – 458 மாதச் சம்பளம்: ரூ.35,400 முதல் – ரூ .1,12,400 வரை கல்வித் தகுதி: பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல், பொது நிர்வாகவியல் ஆகிய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: விண்ணப்பதாரர் வயது 18 முதல் 30 குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு…
தமிழகத்தில் இரண்டாம் கட்ட அலையாக கொரோனா வைரஸ் பரவரும் நிலையில் அதை தடுக்க, முதல் கட்டமாக 50 சதவீத கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களுக்கு இ – பாஸ் கட்டாயமாகியுள்ளது. அவசியமற்ற கூட்டங்களுக்கு, முழு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் மற்றும் திருவிழாக்கள் சார்ந்த கூட்டங்களுக்கும்,சில்லரை வியாபார கடைகளுக்கும்,வணிக வளாகங்களுக்கும் நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் இருப்பதாலும், வழிகாட்டு நெறிமுறைகளை பணியிடங்களில் பின்பற்ற தவறுவதாலும், கொரோனா நோய் தொற்று சமீபத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மார்ச் 28ல் கொரோனா காரணமாக 13,070 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இது 27 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தற்போது மறு உத்தரவு வரும் வரை, சில செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நோய் தொற்றை கட்டுப்படுத்தவும், பொது மக்கள்…
தமிழகத்தில் விரைவில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில்,கொரோனா நோய் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வின்போது பின்பற்ற வேண்டிய கொரோனா வழிமுறைகள் பற்றி தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழ் நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர் மத்தியில் எழுந்து உள்ளது. மேலும் பிளஸ் 2 மாணவர்களும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்கள். இச்சூழலில், விரைவில் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, செய்முறைத் தேர்வில் போது ஆய்வகத்தில் எரியும் தன்மை…
விவசாயி ஒருவர் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவருடைய நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்பனை செய்து இருக்கிறார். அந்த நிலத்தில் தற்போது 5 கிலோ எடையுள்ள தங்கப் புதையல் கிடைத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள பெம்பார்த்தி என்ற பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தில் எந்த வருமானமும் வராததால் அந்த நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர் நரசிங்காவிற்கு விற்பனை செய்து இருக்கிறார். நிலத்தை வாங்கிய நரசிங்கா ஒரு வாரத்திற்கு பிறகு நிலத்தை ஜேசிபி எந்திரம் வைத்து சமப்படுத்தி இருக்கிறார். அப்போது 5 கிலோ எடையுள்ள தங்கப் புதையல் அந்த நிலத்தில் கிடைத்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த புதையலை பார்ப்பதற்காக திரண்டு வந்தார்கள். மேலும் அதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கப் புதையலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஏர்டெலிடமிருந்து ரூ .1.497கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட ரூ .1.497கோடி மதிப்பிலான அலைக்கறைகளை எங்களிடமிருந்து ரிலையன்ஸ் ஜியோ வாங்குவதாக ஒப்பந்தத்தில் இரு நிறுவனமும் கையெழுத்திட்டுளோம். அத்துடன் எதிர்கால பொறுப்பு ஒப்பந்தமான ரூ .1.459கோடிக்கு அலைக்கற்றை தொடர்பான பொறுப்புகளை ரிலையன்ஸ் ஜியோ ஒப்புக்கொண்டுள்ளது. தங்களின் அறிக்கைகளை ரிலையன்ஸ் ஜியோவானது தனியாக வெளியிட்டுள்ளது. ஏர்டெலுக்கு சொந்தமான 800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட அலைக்கற்றையை ஆந்திரப்பிரதேசம், தில்லி, மும்பை பகுதிகளில் பயன்படுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
சிறுநீரகமானது நம் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது பல வகைகளில் உடலின் ஆரோக்கியத்தைக் காக்க துணைபுரிகின்றன. சுகாதார துறை அமைச்சகம் இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாள்பட்ட சிறுநீரக நோய் பிரச்னை உள்ளது என தெரிவித்துள்ளது. இதில் பலருக்கு தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது , என்பதே தெரியாமல் இருப்பது அதிர்ச்சியை தரும் செய்தியாக உள்ளது. நோயானது முதிர்ச்சியடைந்த நிலையில்தான் தெரிந்துகொள்கிறார்கள். இந்த நோயை வளரவிடுவது என்பது பிரச்னைக்குரிய விசயமாக உள்ளது . அப்படி அத்தகைய நோயை வளரவிட்டால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, டயாலிசிஸ் என பல பெரிய சிகிச்சைகளை சந்திக்க நேரிடும். சில அறிகுறிகளை வைத்து சிறுநீரகத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளலாம். சிறுநீர் பிரச்னை நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது, சிறுநீர் தொற்று ஏற்படுவது ,சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர்…
கடத்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் டெக்னீஷியன்களில் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதையடுத்து தற்காலிகமாக மூன்று மாதங்கள் நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு, சென்னையில் கடந்த மாதம் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக படப்பிடிப்பு தளங்களில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தும் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து அவர் ஐதராபாத் சென்றுள்ளார். மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என பல நடிகர்கள் அண்ணாத்த படத்தில் நடிக்கின்றனர். இந்தப்படத்தை டி இமான் அவர்கள் இசையமைக்கிறார். இப்படம் 2021 ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு ஓட்டி வந்த சைக்கிளின் விலை ரூ. 22,500 மட்டும் தான். நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டு தற்போது ஜார்ஜியாவுக்கு பறந்துவிட்டார். விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்ததை பார்த்தவர்கள் அதன் விலையையும் , சைக்கிளின் விபரங்களையும் கூகுளில் தேடி கொண்டு இருக்கிறார்கள். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டதை விட விஜய் தன் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தது தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. கருப்பு, சிவப்பு வண்ணத்தில் இருந்த அந்த சைக்கிளை பார்த்தவர்கள் அதன் விபரங்களை தெரிந்து கொள்ள கூகுள் செய்கிறார்கள். விஜய் ஓட்டி வந்த சைக்கிள் மான்ட்ரா நிறுவன தயாரித்தது. இந்த சைக்கிள் 16 கிலோ எடை கொண்டது. அதன் விலை ரூ. 22 ஆயிரத்து 500 ஆகும். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தான் நடிகர் விஜய்…
பூம்புகார் தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தம் உள்ள வாக்குகளைவிட 50 வாக்குகள் அதிகமாக பதிவாகிள்ள நிலையில், அந்த பூத்துக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த முகவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். பூம்புகார் தொகுதியில் உள்ள திருவாவடுதுறை அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 175 ஆம் எண் வாக்குச்சாவடியில் மொத்தம் 578 வாக்குகள் உள்ளநிலையில் 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி 628 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுபற்றி சந்தேகம் எழுப்பி நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் இவர்கள் நேற்று விடிய விடிய போராட்டம் நடத்தினர். இவர்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பூம்புகார் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தினை பாதுகாப்பு அறையில் கொண்டு செல்ல முயற்சித்தபோது மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து 175 ஆம் எண் பூத்தில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட வேட்பாளர்களின் முகவர்கள் வலியுறுத்தினார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி நடப்பதாக அதிகாரிகள்…
காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி கொரோனா அதிகமாக பரவிவரும் 12 மாநில முதலமைச்சர்கைகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ள இருக்கிறார். கொரோனாவானது இந்தியாவில் இரண்டாவது கட்டமாக பரவிருக்கின்ற காரணத்தினால் தற்போது கொரோனா பாதிப்பு தினசரி ஒரு லட்சத்தைக் கடந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்றுமட்டும் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலின் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இதனால் இரவு நேர ஊரடங்காக டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு தினசரி 5 ஆயிரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையால், இதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து முழு ஊரடங்கு போடும் நிலையமை குறித்து…
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (இலவச தரிசனம்) வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருப்பதி எழுமலையான தரிசிக்க திருப்பதி தேவஸ்தானம் தரப்பில், கொரோனா தொற்று குறைந்த இருந்தபோது தினசரி சா்வதரிசன டோக்கன்கள் (இலவச தரிசனம்) வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேர் வரை தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும், கடந்த மாதம் இறுதியில், 22 ஆயிரம் டோக்கனாக குறைக்கப்பட்டது. மேலும் கடந்த வாரம் இது 15 ஆயிரமாக குறைத்தது. தற்போது, நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், திருப்பதி தேவஸ்தானம் பக்தா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 12ஆம் தேதி…
பிரதமர் மோடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கவும், தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியும், காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் “பரிக்சா பே சர்ச்சா” எனும் தலைப்பில், பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, தொடர்ந்து 4-வது ஆண்டாக நடைபெற்றது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 81 நாடுகளிருந்து மாணவர்கள் பங்கேற்று பிரதமருடன் உரையாடினார்கள். மாணவர்கள் தேர்வுகளை எண்ணி பயப்படகூடாது எனவும், மாணவர்கள் அன்றாடம் படித்து வந்தால், தேர்வு எனும் மனஅழுத்ததை தவிர்க்க முடியும் என்றும் பிரமதர் மோடி கூறினார். பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது எனவும், உங்கள் பிள்ளைகளிடம் உள்ள தனித்திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும், பிரதமர் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு…
