பிரதமர் மோடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கவும், தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியும், காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கினார்.

ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் “பரிக்சா பே சர்ச்சா” எனும் தலைப்பில், பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, தொடர்ந்து 4-வது ஆண்டாக நடைபெற்றது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 81 நாடுகளிருந்து மாணவர்கள் பங்கேற்று பிரதமருடன் உரையாடினார்கள்.

மாணவர்கள் தேர்வுகளை எண்ணி பயப்படகூடாது எனவும், மாணவர்கள் அன்றாடம் படித்து வந்தால், தேர்வு எனும் மனஅழுத்ததை தவிர்க்க முடியும் என்றும் பிரமதர் மோடி கூறினார்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது எனவும், உங்கள் பிள்ளைகளிடம் உள்ள தனித்திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும், பிரதமர் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு வீட்டில் ஒரு ஆசிரியராகவும் விளங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

See also  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு இன்று வருகை