கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் உறுதியாகியுள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. தேர்தலுக்குப் பின் ஊரடங்கு போடப்படும் என்ற யூகங்களும் சொல்லப்படுகிறது. முழு ஊரடங்கு என்பது வதந்தியே இதை நம்பவேண்டாம், ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், வாக்களிக்கச் செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். மேலும் வாக்குச்சாவடிகளில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே வீடு…
Author: gpkumar
தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில்,மின்னனு வாக்கு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பதை குறித்து தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுயுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை காலை 7மணி முதல் மாலை 7மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே வழங்கியுள்ள வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தகவல் சீட்டையும் அல்லது 11அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு வாக்குச்சாவடிக்குள் முகக்கவசத்துடன் செல்லவேண்டும். தமிழகத்தில் ஓவ்வொரு வாக்குச்சாவடியிலும் சமூகஇடைவெளிக்கான வட்டம் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த வட்டத்திற்குள் வரிசையாக நிற்கவேண்டும். பிறகு தங்களுக்கான வாய்ப்பு வரும்போது உள்ளே செல்ல வேண்டும். அங்கு வாக்குப்பதிவு அலுவலர்கள் 4 பேர் இருப்பார்கள். மேலும் அங்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கான தேர்தல் முகவர்கள் இருப்பார்கள். அலுவலகரிடம் வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல் மற்றும் தொகுதி இருக்கும். முதல் அலுவலரிடம் உங்கள் வாக்காளர் தகவல் சீட்டில் தரப்பட்டுள்ள பெயர், வார்டு எண் போன்ற தகவல்களைக் கூற…
இந்த ஆண்டு 10th, 12th, ITI,Diploma, Bachelors Degree,B.Com படித்தவர்களுக்கு பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. Supervisor Trainee, Apprentice, Technician Apprentice ஆகியவற்றிக்கு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் BHEL நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bhel.com விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. BHEL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. BHEL Jobs 2021 வேலைவாய்ப்பு – 01 பதவி பெயர் : Apprentice காலி இடங்கள் : 319 கல்வித்தகுதி : 10th, 12th, ITI, Bachelors Degree சம்பளம் : As Per BHEL Official Notification வயது வரம்பு : 18 – 27 ஆண்டுகள் பணியிடம் : திருச்சி, தமிழ்நாடு தேர்வு செய்யப்படும் முறை :On the basis of Merit அல்லது Interview விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் :இல்லை அறிவிப்பு வெளியிடப்பட்ட…
ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் வாக்குப்பதிவு நாளில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை செவ்வாய் கிழமை காலை 7 மணி இருந்து இரவு 7 மணிவரை நடைப்பெற இருக்கும் வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அனைத்து அரசியல் கட்சியினர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் விவரம் கீழ் வருமாறு: வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தர வேண்டும். தேர்தலை சுமூகமாகவும்,அமைதியாகவும் நடைபெற வழிவகுக்கும். இதனால், வாக்காளர்கள் எந்தவித பிரச்சினைகள் இன்றி முழு சுதந்திரத்துடன் வாக்களிக்க முடியும். அரசியல் கட்சியால் நியமித்த தேர்தல் பணியாளர்கள் கண்டிப்பாக தேர்தல் முடியும்வரை தன்னுடைய அடையாள அட்டையினை அணிந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அலுவலகம் சாரா அடையாள சீட்டில் (பூத்…
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறையினரும் பறக்கும் படையினரும் அதிரடியான சோதனயை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அரசியலில் முக்கிய அரசியல் புள்ளிகளை குறிவைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. அண்மையில், மக்கள் நீதி கட்சியின் பொருளாளர் சந்திரசேகர், திமுக வேட்பாளர் எ.வ.வேலு, அண்ணாநகர் திமுக வேட்பாளரின் மகன் உள்ளிட்டோர் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டிலும் மருமகன் சபரீசன் வீட்டிலும் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வீட்டிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்டம் போடியில் உள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகம் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அ.தி.முகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் ஐடி…
உலகிலேயே அதிக விலை உயர்ந்த காய்கறி வகையில் ஒன்றை பிஹார் விவசாயி ஒருவர் உற்பத்தி செய்து அசத்தியுள்ளார். பிஹார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம், கராம்நித் கிராமத்தில் அம்ரேஷ் சிங் வயது (38) என்பவர் வசித்து வருகிறார். விவசாயி ஆன இவர், வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ‘ஹாப் ஷூட்ஸ்’ என்ற காய்கறி வகையின் விதைகளை வாங்கி பயிரிட்டுள்ளார். யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அவருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போது அவர் உற்பத்தி செய்யும் ‘ஹாப் ஷூட்ஸ்’ என்ற காய்கறியின் விலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. இந்த வகை பயிரின் அனைத்து பாகங்களும் பயன் உள்ளதாக இருக்கிறது என கூறப்படுகிறது. இது கனாபசீ குடும்ப வகையைச் சார்ந்தது. மேலும் இதில் இருக்கும் தண்டு, மலர், காய் மற்றும் கனி ஆகிய அனைத்து பொருட்களும் பயனுள்ளதாக இருப்பதால் இத்தகைய முக்கியத்தும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இது…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் விண்ணப்பத்தை அறிவித்து உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். பணி: Junior Draughting Officer (Highways Department) காலியிடங்கள்: 177 + 6 பணி: Junior Draughting Officer (Public Works Department) காலியிடங்கள்: 348 பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ. 35,400-1,12,400 பணி: J unior Engineer (Fisheries Department) காலியிடங்கள்: 05 சம்பளம்: மாதம் ரூ. 35,900-1,13,500 கல்வி தகுதி: பொறியியல் துறையில் Civil, Architectural Assistantship,Textile Manufacture, Handloom Technology ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். Age limit: 01.07.2021 தேதி அன்று குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு…
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள். சச்சின் டெண்டுல்கருக்கு மார்ச் 27 ஆம் தேதி கொரோனாவின் லேசான அறிகுறி இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் தனது வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டார். கடந்த மார்ச் 27 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், மேலும் தனது குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சச்சின் ஆறு நாட்களுக்கு பிறகு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ ஆலோசனையின் படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்றும் அவர்…
ஜியோ போன் வாங்குறதுக்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கும். தகவல் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஆன்லைனில் வீடியோக்களைப் பார்க்கவும் மற்றும் மக்களுக்கு மிகவும் பிடித்த ஆப் YouTube ஆகும். ஏராளமான வீடியோக்களை அனைத்து துறைகளில் இருந்து யூடியூப் வழங்குவதன் மூலம் பயனர்களின் அனைத்து வீடியோ தேவைகளையும் YouTube பூர்த்தி செய்கிறது. YouTube ஆப்பை ஜியோபோனில் பதிவிறக்கும் செய்வது எப்படி? YouTube வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு முன், ஜியோ போன் பயனர்கள் தங்கள் ஜியோ போனில் YouTube ஆப்பை வைத்திருக்க வேண்டும். ஜியோ போன்களில் யூடியூப்பைப் பதிவிறக்க செய்ய, ஜியோஸ்டோர் ஆப்பைத் திறந்து, அதன் வழியாக யூடியூப் ஆப்பைத் தேடவும். பிறகு அதை கண்டுபிடித்து இன்ஸ்டால் விருப்பத்தை கிளிக் பண்ணவும், பின்னர் உங்கள் ஜியோபோனில் குறிப்பிட்ட ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். YouTube ஆப்பைத் திறந்து, நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவைத் தேடவும். இதற்கான வீடியோவை திறந்தது, Search-இல் கிளிக் ஆகும் இடது…
பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு மார்ச் மாதம் 31ம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இச்சூழலில் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான வலைத்தளத்தை அதிகமானோர் பயன்படுத்தியதால், இந்த வளையத்தளம் சரிவர இயங்கவில்லை என்கிற புகார்கள் பொதுமக்களிடையே இருந்தது வந்தது. இதனால் மேலும் மூன்று மாத காலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 30ம் தேதி வரை ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைத்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது ஆல விச தொடங்கியுள்ளது. இதனால் வருமான வரித்துறை தங்களது பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மற்றும் மொபைல் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எவ்வாறு இணைக்கலாம் என்பதையும் பார்ப்போம். ஆன்லைனில்…
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வெளியாக உள்ளது. இன்று சென்னை பிரசாத் லேப்பில் கர்ணன் படத்திற்கான இசைவெளியிட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மாரி செல்வராஜ், ரஜிஷா விஜயன்,சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, யுகபாரதி, யோகி பாபு, நடராஜன் நட்டி, கௌரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நடிகை ரஜிஷா விஜயன், கர்ணன் படத்தில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் மாரி செல்வராஜிற்கு நன்றியை தெரிவித்துள்ளார். இந்த இசைவெளியிட்டு விழாவில் நடிகை ரஜிஷா விஜயன் பேசுகையில் கர்ணன் படம் ஒரு பெரிய ஏமோஷனல் படம். நான் மிக பெரிய தயாரிப்பு குழுவுடன் தாணு சார் நடிப்பின் லெஜெண்ட் தனுஷ் சார், சந்தோஷ் நாராயணன், நடராஜன் நட்டி,யுகபாரதி, யோகி பாபு, கௌரி கிஷன், இவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த மாரி…
தமிழக தேர்தல் ஆணையம் ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் சில வேட்பாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் மாநில அரசு சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பொதுவாக தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பாக மாலை 5 மணி வரை மட்டுமே தேர்தல் பிரசாரத்திற்கு அவகாசம் வழங்கப்படும். இந்த முறை அந்த அவகாசம் மாலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைக்குறித்து செய்தியாளர்களிடம் தமிழக…
ரேஷன் அட்டைகளில் திருத்தங்களை செய்வதற்கும், ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்களும் குறைவான கட்டணத்தில் எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எளிய வழிமுறைகளில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏற்கெனவே பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொங்கல் பரிசுகளையும் வழங்கி வருகிறது. மேலும் ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்கள், ரேஷன் அட்டையில் இணைத்துள்ள கைப்பேசி எண்ணை வைத்து பொங்கல் பரிசுகளை வாங்கிக்கொள்ளலாம் என தமிழக அரசு கூறியிருந்தது. அதேபோல் ரேஷன் அட்டைகளை தொலைத்தவர்கள் புதிய ரேஷன் அட்டைகள் பெறுவதற்கு பல குழப்பங்களில் இருந்து வருகிறார்கள். மேலும் புதிய ரேஷன் அட்டை வாங்குவதற்கு அதிக அளவில் பணத்தை செலவு செய்து ஏமாறியதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. இவை அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் 20 ரூபாய் செலவில் புதிய…
மத்திய அரசின் சிறிய சேமிப்பு திட்டங்களில் தபால் அலுவலக மாத வருமான திட்டமும் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒரு நிலையான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் இணைய ஒரு தனிநபர் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கைத் திறந்து, அதில் மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த முதலீடுகளின் அடிப்படையில் நாம் பணம் சம்பாதிக்கலாம். இந்த திட்டதின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், நம்முடைய முதலீட்டிற்கு அரசு 100 சதவீதம் உத்தரவாதம் தருகிறது. இந்திய குடிமகன் அனைவரும் தபால் அலுவலக மாத வருமான திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நமக்கு மாத வருமானம் கிடைக்கும். அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்க முடியும். இதற்காக, நாம் ஐடி…
