நம் நாட்டு சமையலில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் வாழைக்காய் ஒன்றாகும். வாழை மரத்தின் அனைத்து பகுதிகளையும், அதாவது பூ, தண்டு, காய், பழம் ,இலை, நார் போன்ற அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம். விட்டமின் ஏ, சி, பி6 ஆகிய விட்டமின்கள் வாழைக்காயில் அதிக அளவு உள்ளது. மேலும் வாழைக்காயில் விட்டமின் இ, கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுகள் ஆகியவைகளும் இருக்கிறது. வாழைக்காயை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும். வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைககளை பார்ப்போம். வாழைக்காயில் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் கொண்டுள்ளது. வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதனால் குடல் சுத்தமாகும். மேலும் இதன் இயக்கத்தையும் அதிகப்படுத்தும். இதனால் மலத்தை இலகுவாக்கி,எளிதில் வெளியேற செய்கிறது. இதனால் மலச்சிக்கலும் குறையும். உடல் எடை குறைய வேண்டும் என்றால் வாழைக்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வாழைக்காய் குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை…
Author: gpkumar
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கு மேலும் 3 மாத கால அவகாசத்தை வழங்கி இருக்கிறது. அதாவது வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதி வரை மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு ஆகியவற்றின் ஆவணங்களை புதுப்பித்தல் கொள்ளலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்கூறியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பலமுறை கால நீட்டிப்பு கொடுத்துள்ளது. மேலும் கடைசியாக இந்த மாதம் 31-ந்தேதி வரை கால…
தேர்தல் கருத்துக்கணிப்புக்கு ஏப்ரல் 29-ம் தேதி வரை தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள்து. சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு,கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு பிறகு கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் மக்களவை இடை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தலுக்கு பிறகு வெளியிடப்படும் கருத்துக் கணிப்புக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம்அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அறிவிப்பின்படி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: இந்த ஆண்டு பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தபடி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மற்றும் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், இன்று காலை 7 மணி முதல் 2021 ஏப்ரல் 29ம் தேதி…
இன்றைய சூழலில் வங்கிகளில் கார் லோன் வாங்குவது மிக எளிதாக மாறிவிட்டது.தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் பல சலுகைகளை அறிவித்து வருகிறார்கள். மேலும் தற்போது எந்த வங்கியில் எவ்வளவு வட்டி,எந்த வங்கியில் வட்டி குறைவு, செயல்பாட்டு கட்டணம் எவ்வளவு என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. அந்த வகையில் நாம் சில முன்னணி வங்கிகளில் எவ்வளவு வட்டி, செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பது பார்ப்போம். கார் வாங்க லோன் கொரோனா காலகட்டத்தில் அனைத்து வகையான கடன்களையும் ஆன்லைனிலேயே அப்ளை செய்யும் வசதியை உருவாக்கி உள்ளார்கள். இதனால் நாம் கடன்களை செலுத்த வங்கிகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும் வங்கி கட்டணங்கள் எவ்வளவு, ஏதேனும் சலுகைகள் உண்டா, என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொண்டு, இணையதளத்தில் பதிவு செய்தால்…
சென்னை சௌகார்பேட்டை நகைக்கடையில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியிருக்கிறது. கணக்கில் வராத மொத்தப்பணம் ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் பிரபலங்களின் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்கள், ஜவுளி, நகை கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் மார்ச் 24 ஆம் தேதி அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரூ.3 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். இது குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையின் மூலம் சென்னை சௌகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள…
பிளிப்கார்ட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு தள்ளுபடியை வழங்க எஸ்பிஐ வங்கியுடன் இணைந்துள்ளது. இதனால் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி பெறலாம். இந்த விற்பனையின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் மேலும் நீங்கள் எதையும் மிஸ் பண்ண கூடாது என்பதற்காக பிளிப்கார்ட் அட்டகாசமான பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் வலைத்தளம் மூலம் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையை அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்பெஷல் சேல் தற்போது அனைவரும் அணுக கிடைக்கிறது. இந்த பிளிப்கார்ட் விற்பனையில் மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவிகள்,லேப்டாப்கள்மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது பல வகையான தள்ளுபடிகள் உள்ளது. இப்போது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையில் மொபைல் போன் ஆபர்களை பார்ப்போம். ஐபோன் எக்ஸ்ஆர் இந்த வாரம் பிளிப்கார்ட்டில் நிகழும் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையின் போது இந்த ஐபோன் எக்ஸ்ஆர் ரூ.38,999 க்கு கிடைக்கும். இதன்…
இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.33,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,235 க்கு விற்கப்படுகிறது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை,ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வரும் நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது. ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது . ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.3 உயர்ந்து ரூ.4,235-க்கு விற்கப்படுகிறது.…
தேர்தல் பிரசாரத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றிருந்தார். திருவண்ணாமலையில் இன்று நடந்த பிரசாரத்திற்காக கல்லூரியில் தங்கியிருந்தார். தற்போது அவர் தங்கிருந்த கல்லூரியில் சோதனை நடக்கிறது. சோதனை நடக்கும் இடங்களில், வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் உள்ளே இருப்பவர்கள் யாரையும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என்றும், பேட்டி தேர்தலை எதிர்கொள்ள தைரியம் இல்லாமால் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகிறார். இந்த செயல் கண்டிக்கத்தக்க செயல் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டித்து வருகிறார். திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர் திமுகவின் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலையில் போட்டியிடும் எ.வ.வேலு அவரின் வீடு, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அவருக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம் என…
தமிழகத்தில் கடந்த ஒரு வரமாக பள்ளி மற்றும் கல்லூரி, நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. ஆனால் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முழு ஊரடங்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை, மினி ஊரடங்குதான் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட தெரு மற்றும் வீடு போன்ற பகுதிகளில் மட்டும் ஊரடங்கு செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு…
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கே சென்று வாக்குகள் சேகரிக்கும் பணி இன்று காலை சென்னையில் தொடங்கியது. சென்னையில், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால் வாக்குகளை இன்று முதல் 31-ம் தேதி வரை 7 நாள்களுக்கு வீடுகளுக்கு சென்று வாக்குகள் பெறப்பட உள்ளதாக தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதற்காக மாநகராட்சி சார்பில் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மாநகராட்சி சார்பில் ஒரு குழு நாள் ஒன்றுக்கு 15 பேரிடம் தபால் வாக்குகள் பெற உள்ளதாக தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் கூறியுள்ளார். மேலும் இவர் வாக்கு ரகசியம் காக்கப்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார். சென்னையில் மொத்தம் 7300 பேர் அஞ்சல் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். இதில் 80 வயதானவர்கள் 6,992 பேர், மாற்றுத் திறனாளிகள் 308 பேர் என்று சென்னை மாநகராட்சி…
முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார். தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. மேலும் அனைத்து கட்சி தலைவர்களும், தற்போது ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் முக்கிய அரசியல் பிரபலங்கள் தங்களது காட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, முதல் முறையாக நாளை மறுநாள் தமிழகத்திற்கு வருகிறார். கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திங்கள் நகரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
சிவகாசி அருகே அப்பையநாயக்கன்பட்டியில் இருக்கும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டுயுள்ளது. இந்த வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் வேறு யாரவது சிக்கி உள்ளார்களா என தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள். வெடி விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில் இந்த பட்டாசு ஆலை ஆனந்த் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. வெயில் காலம் என்பதால் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள். இந்த பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தார்கள். நிறைய பேர் படுகாயங்களுடன் இன்னும் சிகிச்சை…
ஐந்து நிறங்களில் இரண்டு வகையான புதிய பைக்குகளை மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் இருசக்கரம் வாகனம் தயாரிக்கும் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இன்டர்செப்டார் 650 (Interceptor 650) என்ற பெயரிலும் , கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650)என்ற பெயரிலும் ஐந்து நிறங்களில் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குககளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புது வகையான ராய் என்ஃபீல்டு வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு பல புதிய சிறப்பு அம்சங்களை இந்த புதிய பைக்குள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஆனால் இந்த புதிய பைக்கிள் இஞ்சின் போன்ற அடிப்படை அமைப்புகளை மாற்றி அமைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இன்டர்செப்டார் 650 என்ற புதிய பைக்கின் விலை ரூ.2,75,000 என நிர்ணித்துள்ளது. இரண்டாவது கான்டினென்டல் ஜிடி 650 என்ற பைக்கின் விலை ரூ.2,91,000 என்றும் நிர்ணித்துள்ளது.இந்த இரண்டு வகையான வாகனங்கள்…
சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளஓட்டு போடுதல், வாக்கு இயந்திரத்தில் மோசடி, வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் போன்றவற்றை தடுக்க வேண்டும்.மேலும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கிற்கு வரும் திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்திற்கு நேர்மையாக, நியாயமாக தேர்தல் நடக்கிறது என வாக்காளர்கள் திருப்தியடையும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
