Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடைநிறுத்தம் செய்துவதாக மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதைப்பற்றி விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை வீசல் காரணமாகச் சர்வதேச பயணிகள் விமானங்களை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறை சர்வதேச சரக்கு விமானங்களுக்கும், விமான போக்குவரத்துக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சரக்கு விமானங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது. அவசரக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவலைப் பொருத்து குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்க அனுமதிக்க கூடும். கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்திவைத்திருந்தது. அதன்பின்னர் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரக் கடந்த ஆண்டு…

Read More

கடந்த 24 நாட்களாக மாற்றமில்லாமல் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து கொள்ள மத்திய அரசு சார்ப்பில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து கொண்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 24 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11-க்கு விற்கப்பட்டது. அதேப்போல் ஒரு லிட்டர் டீசல் ரூ.86.45-க்கு விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்த ஆண்டு ஆரம்பத்தில் கடுமையாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த 24 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று விலை குறைந்திருப்பது வாகன ஓட்டிகளை…

Read More

கொரோனா கால கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 23–ந் தேதி அன்று கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வங்கி சேவைகள் முடங்கியதோடு, வங்கி கடன்களுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் வட்டிக்கு வட்டியாக கூட்டு வட்டித் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா காலத்தில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள், கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31 வரை ரிசர்வ் வங்கி நீட்டித்திருந்தது. அந்த கால கட்டத்தில் வட்டியை செலுத்தாமல், ஒத்திவைப்பு சலுகையை பெற்றவர்களுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு தாக்கலை அசோக்பூஷண் மற்றும் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும்…

Read More

Anthony Rotolo, a professor from Syracuse University is offering the Dr. Who Class, an adventure for students who want to go through space and time exploring the cultural impact of the BBC series Dr. Who Rotolo calls the course an “un-class” as it is not officially a course offered by the university, although students can register. The property, complete with a 30-seat screening room, a 100-seat amphitheater and a swimming pond with sandy beach and outdoor shower, was asking about $40 million, but J. Lo managed to make it hers for $28 million. As the Bronx native acquires a new…

Read More

வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்தின் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைக்க பிரபல பாலிவுட் போஸ்டர் டிசைனர் ராகுல் நந்தாவை அழைத்து வந்துள்ளாராம். அஜித்தின் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறதாம். அஜித் நடித்து வரும் வலிமை படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் 90 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்டார்கள். அடுத்த மாதம் இந்த படக்குழு ஒரு முக்கிய பைக் ஸ்டண்ட் காட்சியை படமாக்க ஸ்பெயினுக்கு கிளம்புகிறதாம். ஸ்பெயினில் 10 நாட்கள் தான் ஷூட்டிங் நடத்த உள்ளர்கள். இதை முடிந்துவிட்டால் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவடைந்து விடும் என்கிறார்கள். வலிமை படம் பற்றி ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த அப்டேட்டும் இல்லை என்பதால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் கேட்டும் பலனில்லமல் இருந்தது. அஜித் ரசிகர்கள் போனி…

Read More

நேற்று மாலை சினிமா துறைக்கான 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மொத்தமாக ஏழு விருதுகள் கிடைத்துள்ளது. வெற்றிமாறனின் ‘அசுரன்’ படம் சிறந்த தமிழ் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தனுஷ் தேர்வு செயப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக இரண்டு விருதுகள் பார்த்திபனுக்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கே.டி. என்கிற ‘கருப்புதுரை’ படத்திற்காக நாக விஷாலுக்கு கிடைத்துள்ளது. தேசிய விருதுகளுக்கான நடுவர் குழுவில் இருந்த கங்கை அமரன், நான் விருதுகள் கிடைக்க போராடவில்லை, அவர்களாகவே தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதும், அசுரனுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் கொடுத்துள்ளார்கள் என்று கூறினார். இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளதால் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும்…

Read More

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தமிழக அரசு அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை விசத் தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலருக்கும் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இப்போது அனைத்து வகையான கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகளை தமிழக அரசு தடை செய்துள்ளது மேலும் வாரத்தில் 6 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

Read More

தமிழக சட்டமன்றத்தேர்தல் திட்டமிட்டப்படி வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறும். மேலும் கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க அனுமதிக்க படுவார்கள் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியுள்ளார். இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியதாவது: ” தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 4, 512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுயுள்ளது. மீதமுள்ள 2,743 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 6,29,43,512 வாக்களர்கள் உள்ளார்கள். இதில் 3.09 கோடி ஆண் வாக்களர்களும், 3.19 கோடி பெண் வாக்காளர்களும் மற்றும் 7,192 திருநங்கைகளும் உள்ளார்கள். இதுவரை 83.99 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1.70 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 0.57 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 231.63…

Read More

உலக தண்ணீர் தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தை காணொலிக் காட்சி முலமாக தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியின் போது நதிகள் இணைப்பிற்கான தேசிய கண்ணோட்ட திட்டத்தின் முதல் திட்டமான கென் பெத்வா இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சரும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களின் முதல்வர்களும் பிரதமர் முன்னிலையில் கையெழுத்திடுவார்கள். ‘‘மழை நீர் சேகரிப்பு , மழை எங்கு பொழிந்தாலும், எப்போது பொழிந்தாலும்” என்ற கருப்பொருளோடு நாடு முழுவதும் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் இந்தப் பிரச்சாரம் செயல் படும். பருவமழை காலத்திலும், பருவமழைக்கு முந்தைய காலத்திலும் அதாவது இந்த வருடம் மார்ச் 22-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். மக்களின் பங்களிப்போடு தண்ணீரின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்தப் பிரச்சாரம் நடைபடுத்தப்படும். இந்த பிரச்சாரத்தின் நோக்கம், மழைநீர் முறையாக சேமிக்கப் படுவதை…

Read More

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு 2020 -ல் ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்து வந்தது. அதே சமயம் கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த ஆண்டு மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் பான் கார்டையும்,ஆதார் கார்டையும் இணைக்காவிட்டால், அவரின் பான் எண்ணை வருமான வரித்துறை செயலிழக்கச் செய்துவிடும். எப்போது அவர்கள் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கிறார்களோ அப்போதுதான் அவரிகளின் பான் எண் செயல்படக்கூடும். இதனால் உங்கள் ஆதார் எண்ணுடன் பான் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடுவானது வரும் மார்ச் 31ம் தேதியோடு முடிவடையயுள்ளது. இதற்கு முன்பே வருமானது வரித்துறையானது பலமுறை அவகாசம் கெடுத்துள்ளது உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல்…

Read More

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளார்கள். தற்போது தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, அந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று கொண்டு வருகிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்கள். சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறயுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி,குளித்தலை,கிருஷ்ணராயபுரம் (தனி)ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், இந்து மக்கள் கட்சி ஆகிய பல்வேறு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்கள். முன்னதாக ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் நேற்று வரை அரவக்குறிச்சி தொகுதியில் 47 வேட்பு மனுக்களும், 46 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். மேலும் குளித்தலை…

Read More

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் மார்ச் 22-ந் தேதி முதல் 9,10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கபடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது  மக்களுக்கிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தஞ்சாவூர் மற்றும்  திருச்சியில் பள்ளி  மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் தமிழக அரசு உடனடியாக பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது. இதனை தொடர்ந்து  வரும் 22-ந் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயத்தில் மாணவர்களின் விடுதிகளும் மூடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இணைய தளம்  மூலம் கற்பிக்கும்  முறை தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து  உள்ளது.

Read More

அனைத்து அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கும் 4000 ரூபாய் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றாகும். தற்போது அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பதை பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும் மக்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களுக்கிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளது. நீட் தேர்வு ரத்து, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி என பல திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு தமிழக அரசிடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழக அரசு கொரோனா…

Read More

இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது ஆபரணத் தங்கம் ஒரு பவுன் 34 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வருகிறது இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது. ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது . ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.1 உயர்ந்து ரூ.4240-க்கு விற்கப்படுகிறது. மேலும் இன்று 8…

Read More