இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட்டில் அறிவித்து இருக்கிறார். இந்த புதிய மாற்றங்களில் 75 வயதானவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது மற்றும் TDS உயர்த்துவது , EPF மீதான வரி குறித்து பெரிய அறிவிப்புகளை வெளியிடுவது போன்ற விதிகள் இதில் அடங்கும். ஐந்து முக்கிய விதிகளை பார்ப்போம்: 1. வருங்கால வைப்பு (Provident Fund) மீதான வரி விதிகள் இந்த ஆண்டு 2021 ஏப்ரல் 1 முதல், வருங்கால வைப்பு (PF ) நிதியில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்வதற்கான வட்டி வரி விதிக்கப்படும். மேலும் அதிக பங்களிப்பு செய்வதன் மூலம் அதிக வட்டி சம்பாதிக்க EPF பயன்படுத்தும் மக்கள் அதன் எல்லைக்குள் வருவார்கள் என்றும் அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. இந்த மாற்றம் ஊழியர்களின் நலனுக்காக இருக்கும்…
Author: gpkumar
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தங்கத்தின் விலை சில நாட்களாக ஏற்றயிறக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது தங்கம் வாங்குவோர் நிம்மதி அடைந்துள்ளார்கள். நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து இருந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 விலை குறைந்துள்ளது. இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.33,536-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.41 குறைந்து, ரூ.4,192-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை 69,500 ரூபாயாக இருந்தது. இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 1,000 குறைந்து 68,500-ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை ஆகிறது.
தலைநகர் டெல்லியில் அக்னி வெயில் ஆரம்பிக்கும் முன்னே வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் அதிகபட்சமாக 104.18 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட 8 டிகிரி அளவு வெப்பம் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 76 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும். ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி, ஹரியானா, சண்டிகர், சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் டெல்லியில் 76 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் 104.7 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு தற்போது மார்ச் மாதத்தில் டெல்லியில் 104.18 டிகிரி வெயில் பதிவானது இதுவே முதல்முறை என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மண்டல வானிலை மையத்தின்…
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை விச தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டியது. மேலும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 13ஆயிரத்தைக் கடந்தது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று தமிழகத்தில் 2,181 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தமிழகத்தில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 833 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உருவாகியிருக்கிறது. மேலும் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 188 பேரும், கோவையில் 180 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,79,473 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதுவரை இந்நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை…
வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘23ஆம் புலிகேசி’. இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ‘24ஆம் புலிகேசி’ என்ற தலைப்பில் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியானது. லைகா நிறுவனம் இணைந்து பழைய படத்தின் அதே கூட்டணியில் இந்த படத்தை உருவாக்க இருந்தது.இதைத்தொடர்ந்து இந்த படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத் தி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக இப்படத்தின் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுபறித்து கொண்டு இருந்தது. இதனால் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடை விதித்தது . இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் வடிவேலுவை புதிய படங்களில் ஓப்பந்தம் செய்ய தயக்கம் காட்டினார்கள். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமலிருந்த வடிவேலு, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,தலைநகரம்,…
உதவி பொது மேலாளர், துணை பொறியியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்பனி பெயர் : HMT Machine Tools Limited பணியின் விவரம் : Assistant General Manager/Manager (Finance) – 01 சம்பளம்: மாதம் ரூ.14,500-18,700 பணி விவரம்: Dy. Engineer (Corporate Planning) – 01 சம்பளம்: மாதம் ரூ.8,600-14,600 வயது வரம்பு: 01.03.2021 தேதியின் படி, 40 வயது முதல் 44 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி: Graduate, Post Graduate, MBA, CA அல்லது ICWA, CMA முடித்தவர்கள். தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் தகுதி பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.750, மற்ற பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.500, மேலும் எஸ்டி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.250…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உள்ளது. நேற்று புனேவில் நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணியை அழைத்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, தவான் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரோகித் ஷர்மா 37 ரன்கள் எடுத்து ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த தவான் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய அணி, 157 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு பிறகு ஜோடி சேர்ந்த, ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அவர்களின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மேலும் சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த்…
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை விச தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்குப் புதிதாக கொரோனா நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.19 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 290 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார்கள். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் 4.52 லட்சத்திற்கும் மேல் நாடு முழுவதிலும் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா பாதிப்பு மாநிலங்ள் அளவில் மகாராஷ்டிராவில்தான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளை முதல் மகாராஷ்டிராவில் இரவில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின்…
நம் நாட்டு சமையலில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் வாழைக்காய் ஒன்றாகும். வாழை மரத்தின் அனைத்து பகுதிகளையும், அதாவது பூ, தண்டு, காய், பழம் ,இலை, நார் போன்ற அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம். விட்டமின் ஏ, சி, பி6 ஆகிய விட்டமின்கள் வாழைக்காயில் அதிக அளவு உள்ளது. மேலும் வாழைக்காயில் விட்டமின் இ, கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுகள் ஆகியவைகளும் இருக்கிறது. வாழைக்காயை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும். வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைககளை பார்ப்போம். வாழைக்காயில் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் கொண்டுள்ளது. வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதனால் குடல் சுத்தமாகும். மேலும் இதன் இயக்கத்தையும் அதிகப்படுத்தும். இதனால் மலத்தை இலகுவாக்கி,எளிதில் வெளியேற செய்கிறது. இதனால் மலச்சிக்கலும் குறையும். உடல் எடை குறைய வேண்டும் என்றால் வாழைக்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வாழைக்காய் குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை…
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கு மேலும் 3 மாத கால அவகாசத்தை வழங்கி இருக்கிறது. அதாவது வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதி வரை மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு ஆகியவற்றின் ஆவணங்களை புதுப்பித்தல் கொள்ளலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்கூறியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, மோட்டார் வாகன சட்ட கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் வாகன பதிவு புதுப்பித்தல் போன்றவற்றுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பலமுறை கால நீட்டிப்பு கொடுத்துள்ளது. மேலும் கடைசியாக இந்த மாதம் 31-ந்தேதி வரை கால…
தேர்தல் கருத்துக்கணிப்புக்கு ஏப்ரல் 29-ம் தேதி வரை தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள்து. சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு,கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு பிறகு கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சட்டப்பேரவை இடைத் தேர்தல் மற்றும் மக்களவை இடை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தலுக்கு பிறகு வெளியிடப்படும் கருத்துக் கணிப்புக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம்அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அறிவிப்பின்படி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது: இந்த ஆண்டு பிப்ரவரி 26 மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தபடி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மற்றும் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், இன்று காலை 7 மணி முதல் 2021 ஏப்ரல் 29ம் தேதி…
இன்றைய சூழலில் வங்கிகளில் கார் லோன் வாங்குவது மிக எளிதாக மாறிவிட்டது.தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் பல சலுகைகளை அறிவித்து வருகிறார்கள். மேலும் தற்போது எந்த வங்கியில் எவ்வளவு வட்டி,எந்த வங்கியில் வட்டி குறைவு, செயல்பாட்டு கட்டணம் எவ்வளவு என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. அந்த வகையில் நாம் சில முன்னணி வங்கிகளில் எவ்வளவு வட்டி, செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பது பார்ப்போம். கார் வாங்க லோன் கொரோனா காலகட்டத்தில் அனைத்து வகையான கடன்களையும் ஆன்லைனிலேயே அப்ளை செய்யும் வசதியை உருவாக்கி உள்ளார்கள். இதனால் நாம் கடன்களை செலுத்த வங்கிகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும் வங்கி கட்டணங்கள் எவ்வளவு, ஏதேனும் சலுகைகள் உண்டா, என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொண்டு, இணையதளத்தில் பதிவு செய்தால்…
சென்னை சௌகார்பேட்டை நகைக்கடையில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியிருக்கிறது. கணக்கில் வராத மொத்தப்பணம் ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அரசியல் பிரபலங்களின் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்கள், ஜவுளி, நகை கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் மார்ச் 24 ஆம் தேதி அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரூ.3 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். இது குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையின் மூலம் சென்னை சௌகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள…
பிளிப்கார்ட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு தள்ளுபடியை வழங்க எஸ்பிஐ வங்கியுடன் இணைந்துள்ளது. இதனால் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி பெறலாம். இந்த விற்பனையின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் மேலும் நீங்கள் எதையும் மிஸ் பண்ண கூடாது என்பதற்காக பிளிப்கார்ட் அட்டகாசமான பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் வலைத்தளம் மூலம் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையை அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்பெஷல் சேல் தற்போது அனைவரும் அணுக கிடைக்கிறது. இந்த பிளிப்கார்ட் விற்பனையில் மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவிகள்,லேப்டாப்கள்மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது பல வகையான தள்ளுபடிகள் உள்ளது. இப்போது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையில் மொபைல் போன் ஆபர்களை பார்ப்போம். ஐபோன் எக்ஸ்ஆர் இந்த வாரம் பிளிப்கார்ட்டில் நிகழும் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையின் போது இந்த ஐபோன் எக்ஸ்ஆர் ரூ.38,999 க்கு கிடைக்கும். இதன்…
