தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆகஸ்ட் 9 ஆம்தேதியில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின்‌ ஒரு சில பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

See also  சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு: