தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்கள் திருவுருவப் படத் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு தமிழக சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராக வருகை தந்து விழா பேருரையாறுகிறார் மாண்புமிகு குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த். விழாவிற்கு தலைமை வகித்து தலைமை உரையாற்றுகிறார் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

முன்னிலை வகித்து சிறப்பு உறையற்றுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு வரவேற்புரையாற்றுகிறார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பில் வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா இன்று நடைபெறுகிறது.