தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் இரு வாரங்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7 -ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவக் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா நோய் தொற்று அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளதாகவும், கொரோனா நோய் தொற்று பரவல் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளை வழங்கவும் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவக் குழு பரிந்துரையின் அடிப்படையில், முழுஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

See also  ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் தொடக்கம்