ஹைலைட்ஸ்:

  • தமிழக அரசு தொடர்ந்து பல கட்டுப்பாடு வழிமுறைகளை விதித்து வருகிறது.
  • 3000 சதுர அடிகளுக்கு மேல் உள்ள அனைத்து கடைகளும் மூடபட வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கூறினார்.
  • மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கொரோனா பரவலின் இரண்டாம் அலையானது தமிழகத்தை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. தமிழகத்தில் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இதுவரை 11.13 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டு அதில் 13,728 பேர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 9.9 லட்சம் பேர் குணம் அடைந்தும் தற்போது சுமார் 1.09 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு பல கட்டுப்பாடு வழிமுறைகளை விதித்துள்ளது. இதன் அடிப்படையில் வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், முடி திருத்தகம், அழகு நிலையம், உடற்பயிற்சி சாலை, வணிக வளாகங்கள், பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளன. பல அலுவலகங்களில் மிக குறைந்த ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றன.

மாவட்ட ஆட்சியர்கள் எந்தெந்த கடைகளை மூடவேண்டும் என்பதில் திணறிவந்ததால். இதையொட்டி தமிழக அரசிடம் விளக்கம் கேக்க, 3000 சதுர அடிகளுக்கு மேல் உள்ள அனைத்து கடைகளும் மூடபட வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மாவட்ட ஆட்சியர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

 

See also  AEES Recruitment 2022 Apply 205 PGT, TGT & PRT Vacancies Official Notification Released