புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்காவின் ஸ்பெஸ் X நிறுவனம் தனது பால்கன் 9 ராக்கெட் மூலம் 60 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய நேரப்படி நேற்று இரவு இந்த செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஸ்பெஸ் X நிறுவனம் அனுப்பிய செயற்கைகோள்களின் பகுதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சுற்றுப்பாதையில் செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டு ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இந்த பால்கன் 9 ராக்கெட் பூஸ்டரை கொண்டு ஸ்பெஸ் X நிறுவனம் மறுசுழற்சி முறையில் 8 முறை ராக்கெட்டை அனுப்பி உள்ளது.

உலகம் முழுவதும் செயற்கை கோள்களை அனுப்பி வரும் ஸ்பெஸ் X நிறுவனம் இதுவரை ஆயிரத்து 500 க்கு மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

See also  இந்திய சீனா இடையே 10 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது