நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதித்தவர்கள் அல்லது ஏற்கெனவே இரத்த உறைதலால் பாதிக்கப்படவர்கள் சமீப காலமாக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இரத்த உறைதலால் பல இறப்புகளையும் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். எனவே இந்த இரத்த உறைதல் என்றால் என்ன..? இது எவ்வாறு உண்டாகிறது என்பதை பார்ப்போம்.

இரத்தம் உறைதல்:

அதிகப்படியான இரத்தப்போக்கு அல்லது காயம் ஏற்பட்ட பகுதியில் இரத்த இழப்பை கட்டுப்படுத்துவதை தான் இரத்தம் உறைதல் என்கிறோம். அதாவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அந்த பகுதியில் இரத்தக் கட்டிகள் உருவாகி இரத்தப்போக்கை நிறுத்திவிடும் இதை தான் இரத்தம் உறைதல் என்கிறோம். இரத்தம் உறைதல் நம் உடலில் ஏற்படும் அதிகளவு இரத்தப்போக்கை தடுக்கும்.

காயம் உள்ள இடத்திற்கு முறையான சிகிச்சை அளித்தபின் இரத்தக் கட்டிகள் உடைந்து இரத்த ஓட்டம் சீராகிவிடும். இது உடல் தனக்குத்தானே செய்ய கூடிய செயலாகும். ஆனால் உடல் சில நேரங்களில் எந்த காரணமும் இல்லாமல் இரத்த நாளங்களில் இந்த இரத்தக்கட்டிகளை உருவாக்கும். இதனால் இதயத்திற்கும், உடலின் பிற பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் பாதை சீர்குலைத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தும்.

பொதுவாக மனித இரத்தம் திரவமாக இருக்கும். இரத்தமானது உறையும் போது ஜெல் போன்ற கட்டிகளாக மாறும். நம் உடலில் எந்த காரணமும் இல்லாமல் இரத்த உறைதல் ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாகி விடும். அசைவில்லாத இரத்த உறைவால் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. ஆனால் இரத்த கட்டி உடைந்து இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளுக்குள் செல்லும் போது இரத்த குழாயில் ஆங்காங்கே சிக்கி அடைப்பு ஏற்படும். இதனால் இரத்த ஓட்டம் சீர்குலையும். இரத்த குழாயில் இரத்தக் கட்டிகள் உருவாகியிருந்தால் சில அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.

கை மற்றும் கால்களில் இரத்தம் உறைதல்:

நம் உடலின் கை அல்லது காலில் உள்ள நரம்புகளில் இரத்தம் உறைதல்(இரத்தக் கட்டிகள்) ஏற்படும். இந்த இரத்த உறைவுக்கு ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் (deep vein thrombosis (DVT)) என்று பெயர். இந்த வகையான இரத்த கட்டிகள் மிகவும் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும். இந்த கட்டிகள் இதயம் அல்லது நுரையீரலுக்கு எளிதில் பயணிக்கும்.

See also  Vlogging என்றால் என்ன ??

blood clot in legs

கை அல்லது காலில் இரத்தம் உறைந்து இருந்தால் வீக்கம், வலி, மென்மை, உணர்வு மற்றும் சிவப்பு நிறமாற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகளானது இரத்த உறைவின் அளவைப் பொறுத்து மாறும்.

இதயத்தில் இரத்த உறைவு:

பொதுவாக இரத்த உறைவு என்பது இதயத்தில் ஏற்படுவதில்லை. ஆனால் இரத்த உறைவு ஏற்படுவற்கான சாத்தியங்கள் இருக்கிறது. அப்படி இதயத்தில் இரத்தம் உறைந்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உருவாகும்.

மூச்சுத் திணறல், மார்பில் கூடுதல் இறுக்கம், லேசான தலைவலி ஆகியவை இதயத்தில் இரத்த உறைதலின் பொதுவான அறிகுறிகளாகும்.

நுரையீரலில் இரத்த உறைவு:

நம் உடலின் கை மற்றும் கால்களின் நரம்புகளில் ஆழமான இரத்த உறைவால் உருவாகும் இரத்தக் கட்டிகள் நுரையீரல் வரை செல்லும் போது, அங்கு அடைப்பு ஏற்படுத்துகிறது. நுரையீரலில் ஏற்படுத்தும் இந்த அடைப்பை pulmonary embolism (PE) என அழைக்கப்படுகிறது.

blood clot in lungs

நுரையீரலில் இத்தகைய அடைப்பு ஏற்பட்ட நபர் மார்பு வலி, படபடப்பு, சுவாச பிரச்சினைகள் அல்லது இருமும்போது இரத்தம் வருதல் போன்ற பிரச்னைகளை சந்திப்பார்கள்.

அடிவயிற்றில் இரத்தம் உறைதல்:

நம் அடிவயிற்றில் உள்ள குடலின் நரம்புகளில் கூட இரத்த உறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இது கல்லீரல் பிரச்சினைகள் மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் அதிகமாக பயன்படுத்தால் இந்த இரத்த உறைவு பிரச்சினை ஏற்படுகிறது.

குடலின் நரம்புகளில் இரத்த உறைவு ஏற்பட்டால் வயிற்றுப்போக்கு, இரத்தக்களரி மலம், வயிற்றில் கடுமையான வலி மற்றும் வீங்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

உங்களுக்கு இரத்த உறைவு இருப்பதாக உணர்ந்தால் அல்லது மேலுள்ள அறிகுறிகள் ஏதாவது இருந்தால், ஆரம்ப நிலையிலே மருத்துவ சிகிச்சை பெறவேண்டும். சில சந்தர்ப்பங்களில், இரத்த உறைவுக்கான அறிகுறிகளே தெரிவதில்லை. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகுதான், நீங்கள் உண்மையிலேயே இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?, இல்லையா? என்பதை கண்டறிய முடியும். இதனால் லேசான அறிகுறிகள் இருக்கும் போதே மருத்துவரை அனுகி, தேவையற்ற அபாய கட்டங்களை தவிர்க்கலாம்.