• கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது.
  • அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான இன்று செய்முறை தேர்வு தொடங்கி உள்ளது.
  • இன்று தொடங்கி 23 ஆம் தேதி வரை நடக்கும் இந்த செய்முறை தேர்வை 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்.
  • பொதுவாக இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், உயிரி தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது.
  • மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், வரும் மே 5 -ஆம் தேதி பொதுத் தேர்வு துவங்க உள்ளது. மே 31-ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
  • மே 3-ஆம் தேதி நடக்க இருந்த மொழிப் பாடத் தேர்வு, மே 31ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
  • பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் கட்டமாக இன்று செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான செய்முறை பயிற்சி வகுப்புகளும் அனைத்து பள்ளிகளிலும் நேற்று நடத்தப்பட்டன.
  • தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பள்ளி ஆய்வகங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி, மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க உள்ளார்கள்.
  • மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் பிற பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி, மாணவர்களின் செய்முறை தேர்வை, எந்த வித புகார்களுக்கும் இடமின்றி நடத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
See also  கொரோனா பாதிப்பு முழு விவரம் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக