அல்சர் என்பது ஒருவகைப் புண். இது வயிறு மற்றும் சிறுகுடலின் உட்சுவர்களில் ஏற்படும். சரியான நேரங்களில் நாம் சாப்பிடாமல் இருந்தால், நம் வயிற்றில் உணவைச் செரிக்க கூடிய அமிலமானது வயிற்றை அரித்து புண்களை ஏற்படுத்துகிறது.

அல்சரின் அறிகுறிகள்

வயிற்றின் மேல் பகுதியில் வலி, குமட்டல், உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், ரத்த வாந்தி, நெஞ்சு வலி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில், வயது வித்தியாசமின்றி பெரும்பாலோனர் அல்சர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்காக கண்ட கண்ட மருந்துகளை சாப்பிடுவதை விட எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாதா ஒரு சில இயற்கை வைத்திய முறைகளை கையாளுவோம்.

ஒரு சில இயற்கை மருத்துவம்

கரும்புச்சாற்றில்1/2 ஸ்பூன் சுக்குத்தூளைக் கலந்து காலை வேளையில் குடிக்கலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளைஉண்ணலாம் .

அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சீரகம், சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம். மஞ்சள், கறிவேப்பிலை, சீரகம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவைகளை சம அளவு எடுத்துப் பொடித்து அதில் 1/2 ஸ்பூன் எடுத்து, மோரில் கலந்து குடிக்கலாம்.

அரை ஸ்பூன் பொடித்த வால்மிளகைபயை பாலில் கலந்து உண்ணலாம். பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடி செய்து அதில் சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் சேர்த்து 1/2 ஸ்பூன் எடுத்து வெண்ணெய்யில் கலந்து சாப்பிடலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலை எடுத்து அதில் கல் உப்பு சேர்த்து வறுத்து, அது சூடாக இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி வடிகட்டி குடிக்கலாம் .

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து சாப்பிடலாம். பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகளை சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் அளவு உணவுக்கு பின் சாப்பிட்டால் அல்சர் குணமாகும்.

பொன்னாங்கண்ணி மற்றும் சில்லிக்கீரையை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்தும் சாப்பிடலாம்.

அல்சர் பதிப்பு உள்ளவர்கள் அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

See also  கந்த சஷ்டி கவசம்-kantha sasti kavasam lyrics in tamil