இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 2,34,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,338 பேர் இறந்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் சில குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து வரும் ரயில் சேவைகளை நிறுத்தும்படி ரயில்வே நிர்வாகத்திடம் மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் சுனீத் சர்மா, நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகின்றன. ரயில் பயணங்கள் மேற்கொள்ளும் போது பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமா என்ற தகவல்கள் IRCTC அதிகாரப்பூர்வ https://www.irctc.co.in/nget/train-search இணையதளத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றாத பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பல ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்திய முழுவதும் 4,000 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.

எந்தெந்த மாநிலங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்படுகிறதோ, அதற்குஏற்றபடி ரயில்களை இயக்க மண்டல பொது மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரயில் சேவைகளில் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை. 70 சதவீத ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன

பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால கூடுதலாக 140 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து வரும் ரயில் சேவைகளை ரத்து செய்யுமாறு, எந்த மாநில அரசும் இதுவரை கோரிக்கை ஏதும் வைக்கவில்லை என்று சுனீத் சர்மா தெரிவித்தார்.

See also  NBA Recruitment 2022 – Various Secretary Post