Author: Pradeepa

டில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி கல்லுாரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் நடைபெற இருந்த 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக சி.ஐ.சி.எஸ்.இ நிர்வாகம் அறிவித்துள்ளது. பல மாநிலங்களில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன. இந்நிலையில், சி.ஐ.சி.எஸ்.இ(CICSE) எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி கெர்ரி அரதுான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக மே 4ஆம் தேதி, சி.ஐ.சி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது தேர்வு நடத்துவது என்பதர்கான ஆய்வு ஜூன் முதல் வாரம் நடைபெறும். இந்த தேர்வுகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள்…

Read More

இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 2,34,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,338 பேர் இறந்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் சில குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து வரும் ரயில் சேவைகளை நிறுத்தும்படி ரயில்வே நிர்வாகத்திடம் மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் சுனீத் சர்மா, நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகின்றன. ரயில் பயணங்கள் மேற்கொள்ளும் போது பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமா என்ற தகவல்கள் IRCTC அதிகாரப்பூர்வ https://www.irctc.co.in/nget/train-search இணையதளத்தில் விரிவாக…

Read More

நடிகர் விவேக் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 59 வயதான நடிகர் விவேக் நேற்று(வியாழக்கிழமை) சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் COVIT-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ளவேண்டும். கொரோனா தடுப்பூசி குறித்து எவ்வித பயமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் உங்களுக்கு இருக்காது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள பொது நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்று அவர் கூறினார். தற்போது தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். நடிகர் விவேக் மருத்துவமனை சேர்க்கைக்கான காரணம் COVIT-19 தடுப்பூசியா…

Read More

தயிர் இயற்கையான உணவு என்றாலும், இதனுடன் சில குறிப்பிட்ட உணவு வகைகளை கலந்து சாப்பிட்டால், நமக்கு ஏற்படும் நன்மைகளை விட பக்கவிளைவுகளே அதிகம். ஒரு பாத்திரத்தில் சுத்தமான பால் கிரீம் நிரம்பிய தயிரில், அரிந்த பழங்களை அதில் தூவி சாப்பிடுவது என்பதே அளப்பரிய ஆனந்தத்தை தரும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்கப் போவதில்லை. வைட்டமின் பி2, கால்சியம், வைட்டமின் பி12, மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை தயிரில் மிக அதிகளவில் உள்ளன. தயிர் எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுப்பொருள் ஆகும். தயிர் உடன் சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் அது நம் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாற்றக் கூடிய சில உணவு பொருட்கள் என்ன என்பதை பார்ப்போம். ​வெங்காயம் உங்களுக்கு தயிர் உடன் வெங்காயம் கலந்த கலவையை அதிகம் விரும்பி சாப்பிட பிடிக்கும் என்றால், நீங்கள் உங்கள்…

Read More

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரேவற்பு பெற்றது. இதை அடுத்து மாரி 2 திரைப்படத்தை எடுத்து வெளியிட்டனர். இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார். அது மாரி 3 படமா அல்லது புது கதையா என்பது இதுவரை தெரியவில்லை. பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ட்ரிண்டிங்கி தெலுங்கு நடிகை க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது தொடர்பாக க்ரித்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது என்றும் கூறப்படுகிறது. க்ரித்தி ஷெட்டி எனும் நடிகை புதுமுகம் புச்சி பாபு சனா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான உப்பேனா தெலுங்கு படத்தின் ஹீரோயின் என்றும் தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதி உப்பேனா படத்தில் க்ரித்தியின் அப்பாவாக நடித்திருந்தார். க்ரித்தி ஷெட்டிக்கு 17 வயது…

Read More

ஐபிஎல் இரண்டாவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. முதல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்ட சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. ஐபிஎல் நிர்வாகம் முதல் போட்டியில் தோனிக்கு அபராதம் விதித்தது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் , “மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காலதாமதமாக ஓவர்கள் வீசியதால் அணிக் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு ஐபிஎல் விதிகளின்படி 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. இது இந்த சீசனில் ஏற்பட்ட முதல் தவறு என்பதால் வெறும் அபராதம் மட்டும் விதிக்கப்படும், இதே தவறு மீண்டும் தொடர்ந்தால் கேப்டன் தோனிக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் விதியின்…

Read More

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டுக்கான இறுதி தேர்வுகளை ரத்து செய்ய உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளும் ரத்து செயப்பட்டது. தேர்வுக்கான கட்டணம் செலுத்தி இருந்தால் திரும்ப பெற்றுக்கொள்ளாம் என்று அறிவித்து இருந்தது. அரியர் தேர்வுகளை நடத்தவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், மனு தாக்கல் செய்துனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த வாரம் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது, முதல் விசாரணையில் பிறப்பித்த உத்தரவில் தமிழகம் முழுதும் உள்ள கல்லுாரிகளில், எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்; எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர் என்ற விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கிடையில், யு.ஜி.சி., மற்றும் தமிழக அரசு அதிகாரிகள், எந்த வழியில் அரியர்…

Read More

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அனைத்து மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், ‘ஐஎன்சி டிவி’ என்ற பெயரில் புதிய ‘யூடியூப்’ சேனலை நேற்று துவக்கியது. ஊடகங்கள் காங்கிரஸ் கட்சியின் செய்திகளை முழுமையாக வெளியிடாமல் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். நாளுக்கு நாள், காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவது தொடர்பாக செய்தியாளர்கள் ராகுலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஊடகங்கள் உட்பட நாட்டின் ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து தங்கள் கட்சிக்கென தனி காட்சி ஊடகத்தை துவங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இந்நிலையில், ‘ஐஎன்சி டிவி’ என்ற யூடியூப் சேனலை, காங்கிரஸ் கட்சி நேற்று துவக்கியது. இதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்களின் கருத்துக்கள் ஒளிபரப்பாகும். இந்த யூடியூப் சேனலில் தொடர்ந்து 24 மணி…

Read More

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் நேற்றைய தினம் புதிதாக 7,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,315ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 3,464 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 பேர் பலியானதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,970ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 97,668 பேருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநில அரசு டாஸ்மாக் கடைகளில் நேரத்தை மாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மதுக்கடைகளில் குடிமகன்கள் முகக்கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மது வாங்கி செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகள் வேலை செய்யும் நேரத்தை குறைத்தால் கூட்டம் வழக்கத்தை…

Read More

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தில்லி எல்லையில் 140-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. கூடாரங்களை அமைத்து அமைதியான முறையில் தில்லியில் சிங்கு, டிக்ரி, காஸிப்பூர் எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாகவுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய சங்கங்கதினர் மத்திய அரசுடனான பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தெரிவித்துள்ளன. இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏப்ரல் 21-ம் தேதி தில்லியை நோக்கி பேரணி நடத்த பஞ்சாப் விவசாய சங்கம் திட்டமிட்டுள்ளது. ஜாலியன் வலாபாகில் உயிரிழந்தவர்களுக்கு பஞ்சாப் மாநிலம் பதின்டா பகுதியில் மரியாதை செலுத்தும் விதமாக கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய பாரதிய கிஷான் யூனியன் அமைப்பைச்…

Read More

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 4ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வருவதால், சிபிஎஸ்இ தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்று டெல்லி, மஹாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்களும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும்மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இன்று (ஏப்ரல் 14) பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 12ம்…

Read More

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்பாஸ் இடையே ஆன சந்திப்பு காணொலி வழியாக ஏப்ரல்13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்பது குறித்து அரசு தெளிவாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசுக்கு விருப்பம் இல்லை. மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு பதிலாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது அவர்களுடைய குடும்பத்தினரை தனிமைப்படுத்துவதன் மூலம் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை எதிா்கொள்ளப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த காணொலி சந்திப்பின்போது கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கைகள், இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Read More

இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் மாணவர்களின் பொதுத் தேர்வுகள் எதுவும் இன்றி ஆல் பாஸ் என்ற அறிவிப்பு வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அடுத்தமாதம் 3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதேசமயம் மத்திய கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா…

Read More

தென் கேரளா முதல் தெற்கு கொங்கன் 0.9 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளி மண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். மீதமுள்ள மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும். நாளை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்யும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும். ஏப்ரல்15-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம்,…

Read More