நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலின் முதல் அலையை விட இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது தொடர்பாக கடந்த 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில கவர்னர்கள், யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர்கள் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
Author: Pradeepa
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இரண்டு மணிநேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை கொண்ட உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின் மே மாதம் உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் சில கொரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. சர்வதேச விமானங்களை இயக்க விதிக்கப்பட்ட தடை இதுவரை ‘வாபஸ்’ பெறப்படவில்லை. எனினும் ‘வந்தே பாரத்’ திட்டம் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு இடையே குறைந்த அளவில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மத்திய விமான போக்குவரத்துத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் உணவு வினியோகம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரத்தை உடைய விமானங்களில் உணவு வினியோகிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.…
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்றும் நாளையும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மெட்ரோ ரயில் சேவையில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கடந்த வருடம் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் தமிழ் புத்தாண்டு களை இழந்து காணப்பட்டது. உகாதி மற்றும் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் 50% கட்டண சலுகை அளிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தெலுங்கு, கன்னட மக்களின் புத்தாண்டான உகாதி பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Real-Time Gross Settlement (RTGS)என்பது பண பரிமாற்ற முறையை குறிக்கிறது. ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு தனிநபர் அடிப்படையில் பணம் செலுத்துவதற்கான தொடர்ச்சியான செயல்முறையாகும். ரிசர்வ் வங்கி ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று கூறியுள்ளது. தொழில்நுட்ப முறையை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுவதால் வரும் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் என்.இ.எப்.டி(NEFT) முறையிலான பண பரிவர்த்தனை எந்த விதமான தடையுமின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி தோட்டக்கலை அலுவலர் , உதவி வேளாண்மை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் செய்தி அறிவித்துள்ள செய்தி குறிப்பில், “அரசு பணியாளர் தேர்வாணையமான, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி படி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு திட்டமிட்ட படி நடைபெறும் என்று கூறினார். ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதி, காலை மற்றும் மதியம்; 19ஆம் தேதி காலை மட்டும், ஏழு மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவுச்சீட்டை, www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வு மையத்தை அறிந்து…
இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம்(PMJD). இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் நிதியுதவிகள் ஜன் தன் யோஜனா கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. மாநில அரசுத் திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகிறது. இந்த ஜன் தன் கணக்குகள் கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களிடமிருந்து வங்கிகள் அளவுக்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்துள்ளது. அதாவது, ஜன் தன் யோஜனா வங்கி கணக்கில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக நான்கு முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும். நான்கு…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பிளஸ்-2 தேர்வு மே 3-ந் தேதி தொடங்கி மே 21 தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொது தேர்வவை எழுத உள்ளனர். 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 16-ந் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த இரு தேர்வுகளையும் நடத்துவதா அல்லது ஒத்தி வைப்பதா என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பிளஸ்-2 பொது தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இல்லை. தற்போது மே 3-ஆம் தேதி தேர்வை தொடங்கினால் அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் தேர்வு நடத்தினால் அது நோய்தொற்று பரவுவதற்கு வழிவகுத்துவிடும். எனவே தேர்வை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்கலாமா? என்பது குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டும். தேர்வு…
கடந்த வாரம் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தை பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். முதல் நாள், முதல் காட்சி பார்த்த தனுஷ் ரசிகர்களோ, ‘இன்னொரு தேசிய விருதை தனுஷுக்கு எடுத்து வைங்கப்பா’ என சொல்லி மிரட்டி உள்ளனர். இந்நிலையில் தற்போது ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வரும் சிம்புவை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆஹா, ஓஹோ என புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ‘ஈஸ்வரன்’ திரைப்படத்திற்கு பின் சிம்புவின் கம்பேக் திரைப்படமாக ‘மாநாடு’ ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரில் இடம்பெற்ற சிம்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சிம்பு பழையபடி மன்மதனாக மாறியுள்ளார் என்று இணையத்தில் டிரெண்ட் செய்து வந்தனர். நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தில் முதன்முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக தோன்றுகிறார். இந்த திரைப்படத்தில் பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி சிம்புவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி, நீளமும் 18 கி.மீ, அகலம் 8 கி.மீ கொண்டது. இந்த ஏரிக்கு வடவாறு வழியாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் பருவமழை காலத்தில் பெய்யும் மழையால் நீர்வரத்து அதிகம் இருக்கும். வீராணம் ஏரி மூலம் 44,450 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக வீராணம் ஏரி 4 முறை நிரம்பி வழிந்தது. அப்போது ஏரியில் தடுப்புகட்டை கட்டவும், ஏரியை தூர்வார்வதற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் குறைந்து உள்ளதால் தற்போது வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது. 3 வருடங்களுக்கு பிறகு வீராணம் ஏரி வறண்டுபோனதால் அந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.…
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மார்ச் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக வீட்டுக் கடன்கள் 6.70% வட்டிக்கு வழங்கப்பட்டது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பழைய ஒரிஜினல் வட்டி விகிதம் அமல்படுத்தப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எனவே, ஒரிஜினல் வட்டி உயர்த்தப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண்டிகைக்கால சலுகையாக மார்ச் 31ஆம் தேதி வரை 6.70% வட்டி சலுகை வழங்கப்பட்டது. மீண்டும் பழையபடி ஒரிஜினல் 6.95% வட்டி விகிதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை” என்று எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். அதாவது, வீட்டுக் கடன்கள் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 0.05% வட்டிச் சலுகை வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் கொண்டு செல்லப்பட்டன. இதனைக் கண்ட பொதுக்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சூழலில் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் எடுத்து சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றது இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்டவை அல்ல. இவை பழுதான மாற்று இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் என தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரகாஷ் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதிமீறல். அந்த மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டு 15 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய…
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் டிரைவிங் லைசென்ஸ், வாகன தகுதிச்சான்று, பர்மிட் போன்ற போக்குவரத்து ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதாவது 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஆறு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ‘2020 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை காலாவதியாகும் அனைத்து போக்குவரத்து ஆவணங்களும் 2021 ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்திய முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’…
தனிமனித அடையாள அட்டையான ஆதார் கார்டு மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த ஆதார் கார்டு வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது முதல் அனைத்து தேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக மாறி வருகிறது. ஆதார் கார்டு வழங்கப்பட்டு பத்து வருடங்கள் ஆகி விட்டதால் ஆதார் அட்டையில் உள்ள பழைய புகைப்படங்கள் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆதார் அட்டையில் உள்ள பழைய புகைப்படத்தை எளிதான முறையில் மாற்றிக்கொள்ள முடியும். ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற https://uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் GET Aadhaar பிரிவுக்கு செல்ல வேண்டும். பிறகு ஆதார் பதிவு அல்லது புதுப்பித்தல் படிவத்தை நிரப்ப வேண்டும். பூர்த்தி செய்த படிவத்தை ஆதார் மையத்துக்கு எடுத்து செல்லவும். ஆதார் மையத்தில் விழித்திரை, கைரேகைகள் ஆகியவை மீண்டுமாக ஸ்கேன் செய்யப்படும். இந்த சேவைக்கு 50 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். புகைப்படத்தை புதுப்பிக்கும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் URN எண் வழங்கப்படும். இந்த எண்ணை வைத்து ஆதார் விண்ணப்பத்தை…
விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65 திரைப்படத்தை இளம் இயக்குனரான நெல்சன் தீலிப்குமார் இயக்கவுள்ளதாகவும் அதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது 65 படம் கையெழுத்திட்டத்தை அறிந்த ரசிகர்கள் ட்ரைலர்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். சன் பிக்ச்சர்ஸ் அலுவலகத்தில் சமீபத்தில் தளபதி 65 கான பட பூஜை சிறப்பாக நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து சென்னையில் இரண்டு நாள் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிவைடைத்த தொடர்ந்து தளபதி 65 படகுழிவினார்கள் சென்னைக்கு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களியில் செய்திகள் வெளியாகியுள்ளன. கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தளபதின் 65 படத்தை எடுக்க கையெழுத்திட்டுள்ளார். விஜய் நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் மிஷ்கினின் முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும், இன்னொரு கதாநாயகி இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் ராஷ்மிகா மந்தனா என்ற தகவல் சமூக வளையதலைகளில்…
