ஹைலைட்ஸ்:

  • பஞ்சாப் அணியின் ராக்கெட் வேக பந்து வீச்சு.
  • பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து வீழ்ச்சி.
  • பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தரமான வெற்றி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26 வது லீக் ஆட்டமானது ஆகமதாபாத்தில் நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.அதில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை தொடராது, பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர் அதில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

பிறகு களம் இறங்கிய கிறிஸ் கெய்லும் ராகுலும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதில் 24 பந்துகளில் 46 ரன் குவித்து வெளியேறினார் அடுத்ததாக வந்த ராகுல் 51 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார்.

ஹர்பிரீத் அடுத்ததாக களமிறக்க 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று ஆடினார். ஆட்ட இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி

இதனை தொடர்ந்து பெங்களூரு அணி களமிறங்கியது. வெற்றி இலக்காக 180 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்தொடங்கினர்.

அணியின் தொடக்கவீரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இறங்கினர். பஞ்சாப் அணியின் ராக்கெட் பந்து வீச்சால், பெங்களூரு அணி குறுகிய இடைவெளியுடன் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

விராட் கோலி 35 ரன்களும், ரஜத் பட்டிதார் 31 ரன்களும், ஹர்ஷல் படேல் 31 ரன்னும் எடுத்தனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது இலக்கை தொடாமல் போயினர். இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தரமான வெற்றியை அடைத்து.

See also  சென்னை அணி முதலிடம் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் !

Categorized in: