Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (CMC) அதிகாரபூர்வ இணைய தளத்தில் ‘cmch-vellore.edu’ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Engineer, Jr. Electrician, Medical Officer, Lecturer, Senior Resident, Jr. Health Aide (Project Mode) & Assistant Professor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிகளுக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி SSLC/ MS/ Ph.D/ DEE/ ITI/ MBBS/ B.E/DM போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பதவிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதியானது மாறுபடும் என கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி(CMC) பணியின் பெயர் Assistant Engineer, Jr. Electrician, Medical Officer, Lecturer, Senior Resident, Jr. Health Aide (Project Mode) and Assistant Professor பணியிடங்கள் Various விண்ணப்பிக்கும்…

Read More

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500 என்ற நிலையிலேயே தொடர்கிறது. இந்த நிலையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நம் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த 10 நாட்கள் மிகவும் கூர்ந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரா- தமிழகம், கேரளா- தமிழகம் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நாள்தோறும் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று வருபவர்களுக்கு 100% தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய…

Read More

நமது சுவாசத்தில் நுரையீரல்(lungs) முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நுரையிரலை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். நுரையீரலின் வேலை, ஆக்ஸிஜனை வடிகட்டி பிறகு அந்த ஆக்சிஜனை முழு உடலையும் சென்றடைய செய்கிறது. உடலுக்குத் தேவையான உயிர்காற்றை வழங்கும் பணியை மேற்கொள்ளும் இந்த நுரையிரலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம் என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். நுரையீரலை நீண்டகாலத்திற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமென்றால், நம் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலை தான் குறிவைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வைரஸ் தாக்கத்தால் நுரையீரல் குறுகி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் நாம் ஆரோக்கியமாக உணவுகளை உட்கொண்டு நுரையீரலை பாதுகாப்போம். நுரையீரலை பலவீனமாக்கும் சில உணவுவகைகளை நாம் தவிர்ப்பது மிகவும் நல்லது. புகைபிடித்தல் மற்றும் புகையிலை தவிர, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் அதிகப்படியான ஆல்கஹால்…

Read More

தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஆக-26) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 27, 28, 29 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,…

Read More

இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் மூட்டுவலியால் அதிகம் அவதிப்படுகின்றனர். வயதான காலத்துக்கு பிறகு வரவேண்டிய மூட்டு வலி இப்போது இளவயதிலேயே வந்து நம்மை பயமுறுத்துகிறது. நம் உடலில் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமையும் உறுதியாக இருந்தால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படாது. முன்பெல்லாம் 90 வயதுவரை மூட்டுவலி உபாதையை அனுபவிக்காத தலைமுறையினர் எலும்பை பலப்படுத்தும் வகையில் உணவுகளை எடுத்துகொண்டார்கள். அந்த உணவு வகையில் முடக்கத்தான் கீரையும் ஒன்று. முடக்கத்தான் கீரையின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம். முடக்கு + அறுத்தான் என்று பெயரிலையே முடக்கை விரட்டும் தன்மையை கொண்டுள்ளது முடக்கறுத்தான் கீரை. இது உடலில் ஏற்படும் வாதக்கோளாறுகளை சரி செய்கிறது. அதனால் தான் இதை முடக்கத்தான் என்கிறோம். இதில் வைட்டமின்களும், தாதுப்புகளும் அதிகளவு உள்ளது. மூட்டுவலிக்கு முடக்கத்தான் பொதுவாக உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இதில் வாதத்தை கட்டுப்படுத்தி வைக்க முடக்கத்தான் கீரை மிகவும் உதவுகிறது. நம்…

Read More

இன்று (ஆகஸ்ட் 25) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 எனவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 93.52 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 99.20 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 93.52 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

தமிழக அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்திப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்ப்பாக அரசாணையில் கூறியிருப்பதாவது, அரசு பணியில் வேலை பார்க்கும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு, இரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். கடந்த 2016-ம் ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது. மேலும் இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அடிப்படை விதிகளில் திருத்தமும் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்ட இந்த மகப்பேறு விடுப்பானது…

Read More

சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் law clarks (சட்ட எழுத்தர்கள்) காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு கல்வித்தகுதி சட்டத் துறையில் இளங்கலை/முதுகலை பட்டம் பெற்றியிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை, மதுரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Exam ) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) பணியின் பெயர் : law clarks (சட்ட எழுத்தர்கள்) கல்வித்தகுதி : சட்டத் துறையில் இளங்கலை/முதுகலை பட்டம் பணியிடங்கள் : சென்னை, மதுரை தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மொத்த காலிப் பணியிடங்கள் : 37 மாதச் சம்பளம் : ரூ.30,000/- விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.09.2021 மேலும் முழு விவரங்களை…

Read More

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 245 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.935 கோடி நிதி முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக தணிக்கை விவரங்களை ஆராய்ந்த தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்று இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் லட்சம், அதிக விலைக்கு பொருட்கள் வாங்கியது, வேலைக்கே வராதவர்களுக்கு கூலி கொடுத்ததாக கணக்கு காட்டியது போன்ற முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் 12,525 கிராம ஊராட்சிகளில் 245 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் 2.07 கோடி ரூபாய் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.…

Read More

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டன. இதையடுத்து கடந்த மாதம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு சான்றிதழை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் www.dge.tn.gov.in என்ற…

Read More

திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் ரேஷன் கார்டு, ஆதார் எண் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர். திமுக கட்சி தேர்தல் அறிக்கையில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்து இருந்தது. அதற்காக இப்போது கூட்டுறவு சங்கங்களில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை 5 சவரன் நகை மற்றும் அதற்கு மேல் வைத்துள்ள நகை கடன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் வழங்கியதற்கான நிதி ஆதாரங்கள் விவரங்களையும், பயனாளிகள் விவரங்களையும் மாவட்ட வாரியாக வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மண்டல இணைப்பதிவாளர்கள் கையொப்பமிட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மின்னஞ்சலிலும், தபாலிலும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் 5 சவரன் மற்றும் அதற்கு…

Read More

முன்பெல்லாம் தும்மினால் உங்களுக்கு நூறு ஆயுசு என்று சொல்லி மகிழ்ந்த உலகம், இப்போது யாரவது தும்மினால் கொலைக் குற்றவாளியைப் போல் பார்க்கிறது. தும்மல் என்றாலே கொரோனா நோய் தொற்று தான் ஞாபகம் வருகிறது. கற்பூரவல்லியை ஒரு விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்று கூறலாம். ஏன்னெனில் சளிக்கு இருமலுக்கு இது ஒரு அற்புத மருந்தாக விளங்குகிறது. இதில் டீ வைத்து குடித்தால் சங்கடங்களை உருவாக்கும் தும்மலும் நின்றுவிடும். கற்பூரவல்லி தேநீர் எப்படி செய்வது என்று பார்ப்போம். கற்பூரவல்லியின் இலைகளை நீக்கிவிட்டு தண்டுகளை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய தண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி தேன் சேர்த்தால் கற்பூரவல்லி தேநீர் தயார். தினமும் உணவுக்கு முன்பு இந்த தேநீரை குடித்து வந்தால் தலைநீரேற்றம், தலைவலி சரியாகும். தலை நீரேற்றத்தின் போது தான் கடுமையான வலி,…

Read More

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இலவச WiFi வசதி தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையில் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. இந்நிலையில் சென்னை மாநகரை நவீனப்படுத்தும் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது தொழில்நுட்ப வசதி பெருகிவிட்ட நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக இலவச வைஃபை சேவையை தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது. இலவச வைஃபை சேவைக்காக சென்னை மெரினா (Chennai Marina) கடற்கரை, அசோக்பில்லர், நடேசன் பூங்கா, தி.நகர் உள்ளிட்ட 49 இடங்களில் WI-FI ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் மக்கள் தங்களது செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் 30 நிமிடம் வரை இலவச WI-FI (Free WIFI) சேவையை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, ‘சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ்…

Read More

வேப்ப மரத்தின் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்துகிறது. வேப்பமரம் உள்ள வீட்டில் எந்த நோயும் வராது என்றே சொல்லாம். அதனால் வீட்டில் ஒரு வேப்பமரம் வளர்ப்பது நல்லது. வேம்பின் குச்சி, இலை, துளிர், பூ, கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வேப்பம்பூ சித்திரை மாதத்தில் தான் பூக்கும். இந்த பூக்கள் காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கிருமி நாசினியாக செயல்படுகிறது. வேப்பம்பூ வெயில் காலத்தில் மட்டுமே பூக்கும் என்பதால் அதை சுத்தப்படுத்தி காய வைத்துக் கொண்டால், நாம் அதனை வருடம் முழுக்க பயன் படுத்திக் கொள்ளலாம். மாதக்கணக்கில் வைத்திருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் மாறாது. வேப்பம்பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம். கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும் மற்றும் கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளையும் வேப்பம்பூ கட்டுப்படுத்துகிறது. வெயிலினால்…

Read More