மேஷம் ராசிபலன் (Sunday, March 28, 2021) உங்கள் அணுகுமுறையில் கவனமாக இருக்கவேண்டும்.நீங்கள் பேசும் போது கவனமாகப் பேசவும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். இன்று பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று அதிக செலவுகள் காணப்படும்.சளி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றும் சிறிது மிளகை சாப்பிட்டு இன்றைய நாளை தொடங்கவேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். உடல் நலத்தில் ஆரோக்கியம் காட்டுவது நல்லது.குடும்பத்தில் நிம்பதி உண்டாகும். ரிஷபம் ராசிபலன் (Sunday, March 28, 2021) வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க செயல்பட வேண்டும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை தேவை. சிறிய விஷயங்களுக்கு பெரிதாக யோசிக்க வேண்டாம்.இல்லையென்றால் உங்கள் துணைவியுடன் கருத்து வேறுபாடு காணப்படும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது உரிய சிகிச்சை மேற்கொள்ளுங்கள். இன்று நீங்கள் கவனமாக இருக்கும் நாளாக உங்களுக்கு அமையும். மிதுனம் ராசிபலன் (Sunday, March 28, 2021) இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்.…
Author: Pradeepa
பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை படிப்படியாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைத்துள்ளது. கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைத்துள்ளது. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைத்துள்ளது. சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைத்துள்ளது. ஆனாலும், இணைப்பில் உள்ள பழைய வங்கிகளின் காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இணைப்பு செய்யப்பட்ட வங்கியின் பெயரில் உள்ள காசோலைகள் நாளடைவில் படிப்படியாக விலகல் செய்யப்பட்டு, புதிய வங்கியின் காசோலைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப் பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க்…
தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிகிறது. தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் தலைவர்களை தரம் தாழ்த்தி விமர்சிக்கும் போக்கு அதிகமாக உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதி சில சமூக விரோத சக்திகள் பைக் பேரணி நடத்தி வாக்காளர்களை மிரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பிலிருந்து பைக் பேரணி நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.…
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தனது பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு (ஓய்வூதியர்கள்) மிகப்பெரிய நிவாரணச் செய்தியை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் வாங்குபவர்கள் இனி பென்சன் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு PF அலுவலகத்துக்கு செல்ல தேவை இல்லை. இனி பென்சன் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே EPFO இணையதளத்தின் மூலமாக ஈசியாக தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியரின் வங்கி சேமிப்பு புத்தகத்தில் PPO(Pension Payment Order) எண் பதிவிடப்பட வேண்டும். ஓய்வூதியர்கள் தனது வங்கி கணக்கை ஒரு வங்கி கிளையில் இருந்து வேறு ஒரு வங்கி கிளைக்கு மாற்ற வேண்டும் என்றாலும் PPO எண் தேவைப்படுகிறது. இனி PPO தொடர்பான அனைத்து தகவல்களையும் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற வலைதளத்தின் மூலம் ஓய்வூதியர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஈசியாக வங்கிக் கணக்கு எண்ணை வைத்து PPO எண் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். ஓய்வூதியர்கள் தங்களுக்கு தேவையான மிகச் சிறிய தகவல் முதல் மிகப்பெரிய தகவல் வரை…
கர்நாடக மாநிலத்தில் KSRTC, NEKRTC, NWKRTC, BMTC என நான்கு போக்குவரத்து கழகங்கள் செயல்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி போக்குவரத்து கழகங்கள் நான்கு நாட்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் செய்தன. இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அனைத்து போக்குவரத்து கழகங்களும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து பேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், எங்களது முதன்மையான கோரிக்கையாக 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறினார். சம்பள உயர்வு குறித்து மாநில அரசிடம் பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டோம். ஆனால் அவர்கள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அரசு உடனடியாக எங்களின் கோரிக்கையை ஏற்று கொள்ள வேண்டும் என்று கேட்டுக்…
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைத்து வந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்க திட்டமிட்டுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. சரியான கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சம்மந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள்…
குக் வித் கோமாளி நிகழச்சியின் மூலம் பிரபலம் ஆன நடிகை ஷகீலா தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் கட்சியில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகை ஷகீலா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என இந்திய மொழிகள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெறுள்ளார். தமிழில் கடைசியாக கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தில் நடித்து இருந்தார். தற்போது விஜய் டிவியின் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு உள்ளார். இதில் கடந்த வாரம் நடைபெற்ற ஷோவில் தோல்வியடைந்த ஷகீலா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஷகீலா, இந்த நிகழ்ச்சி தனது நிலையை மாற்றியுள்ளதாக கூறினார். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை கட்சியில் நடிகை ஷகீலா இணைந்த உடனே அக்கட்சியின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் ஷகிலாவிற்கு மாநில பொதுச்செயலாளர்…
இந்தியாவில் பணக்கார கோவில் என்று அழைக்கப்படும் திருப்பதி கோவிலை போன்று தெலுங்கானாவில் பிரமாண்டமாக கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் கட்டுமான பணி இறுதி கட்டத்தில் உள்ளது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் கடும் போராட்டங்களை நடத்தினர். தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்தால் திருப்பதி கோவிலுக்கு இணையாக யாதகிரிகுண்டாவில் உள்ள பகவான் லட்சுமி நரசிம்ம குகைக்கோவிலை மாற்றுவேன் என்று உறுதியளித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரித்து தெலுங்கானா தனியாக மாறியது. கடந்த 2016 ஆம் ஆண்டு சந்திரசேகர் ராவ் அளித்த வாக்குறுதியின் படி யாதத்ரி கோவில் மேம்பாட்டு ஆணையத்தை உருவக்கினார். இந்த கோவில் கட்டுவதற்கு 1800 கோடி ஒதுக்கப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து 70 கி.மி தொலைவில் யாதகிரிகுண்டாவின் பசுமை நிறைந்த மலையின் மேல் பகவான் லட்சுமி நரசிம்ம குகைக்கோயில் அமைந்துள்ளது. இந்த…
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு பிரபலமான சீரியல்களின் மகா சங்கமம் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாகவே இந்த சீரியல்களின் மெகா சங்கமம் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தந்த சீரியல்களின் கதைக்கு ஏற்றவாரு எல்லா காட்சிகளையும் இயக்குனர் வைத்து வருகிறார். மகா சங்கமத்தில் இடம் பெற்றுள்ள இந்த இரண்டு சீரியல்களின் இயக்குனர் பிரவீன் பென்னட். சீரியலில் ஒரு பெரிய போட்டி ஒன்று நடந்து வருகிறது. சிரியலில் நடைபெறும் போட்டியின் நடுவர்களாக பிக்பாஸ் பிரபலங்களான ரியோ, சம்யுக்தா, சோம சேகர் வந்திருந்தனர். இந்த போட்டியில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா கலந்து கொண்டுள்ளனர். ராஜா ராணி 2 சீரியலில் செந்தில் மற்றும் சந்தியா கலந்து கொண்டுள்ளனர். அந்த சீன்கள் கூட அண்மையில் ஒளிபரப்பானது. அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் இந்த இரண்டு சீரியல் குழுவினருடன் குக்…
2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அறிவித்தார். அந்த பட்ஜெட்டில் ஊழியர்களுக்கான PF அறிவிப்பில் சில மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமான PF தொகை பங்களிப்புக்கு வழங்கப்படும், வட்டித் தொகைக்கு வரி வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதனால் அதிகமாக வருமானம் வாங்குபவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசு இதில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தது. அதன்படி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.2.5 லட்சம் வரம்பை ரூ.5 லட்சமாக மாற்ற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சலுகை நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாத PF வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். மத்திய அரசு இந்த புதிய விதிமுறையை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல்செயல்படுத்த உள்ளது. மத்திய அரசு வெளியிட்ட இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய PF விதிமுறைகள் மூலமாக…
தமிழகத்தில் வங்கிகளுக்கு மார்ச் மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி வரை உள்ள 9 நாட்களில் 7 நாட்கள் விடுமுறை என்ற தவறான செய்தி மக்களிடையே பரவி வருகிறது. இந்த செய்துக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார். மார்ச் 27,28 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 29 ஆம் தேதி ஹோலி பண்டிகை, 31 ஆம் தேதி கணக்கு முடிக்கும் இறுதி நாள், ஏப்ரல் 1 ஆம் தேதி நிதியாண்டில் தொடக்க நாள், ஏப்ரல் 2 ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 3 ஆம் தேதி சனிக்கிழமை, ஏப்ரல் 4 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை எனவே 7 நாட்கள் விடுமுறை…
இந்திய மக்களுக்கு ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணம் ஆகும். ரேஷன் கார்டு மூலம் அரசு தரப்பில் கொடுக்கப்படும் மலிவு விலையில் கொடுக்கப்படும் உணவு பொருட்களை வாங்க முடியும். தற்போது ரேஷன் கார்டு என்பதை ஸ்மார்ட் கார்டு என்று கூறுகிறோம். ஸ்மார்ட் கார்டு மூலம் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள், முகவரியை தெரிந்து கொள்ளலாம். கொரோனா லாக்டவுன் சமயத்தியில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க ரேஷன் கார்டுகள் மூலமாகப் அரசு தரப்பிலிருந்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது. புதிதாக ஸ்மார்ட் கார்டு வாங்குவது என்பது சற்று கடினமான இருக்கிறது. வாங்குவதற்கு நீண்ட காலமும் ஆகிறது. ரேஷன் கார்டு வாங்குபவர் அந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க https://tnpds.gov.in/ என்ற வலைப்பக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளில் இரண்டு வகைகள் உள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்காக தனி ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு…
நடிப்பு: யோகி பாபு, சங்கிலி முருகன், ஜி.எம். சுந்தர், ஷீலா ராஜ்குமார், கண்ண ரவி மற்றும் பலர். மடோன்னே அஸ்வின் எழுதி இயக்கியுள்ளார் எஸ்.சஷிகாந்த் தயாரிக்கிறார் சக்ரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து தயாரித்தார் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – பாலாஜி மோகன் டிஓபி – விது அய்யன்னா இசை – பாரத் சங்கர் ஆசிரியர் – பிலோமின் ராஜ் கலை இயக்குனர் – ராமு தங்கராஜ் ஆடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன் பாடல் – யுகபாரதி & அரிவு ஸ்டண்ட்ஸ் – ‘ஸ்டன்னர்’ சாம் விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் எஸ் ஸ்டில்ஸ் – ராஜேந்திரன் நிர்வாக தயாரிப்பாளர் – கைலாஷ் சோமசுந்தரம் தயாரிப்பு நிர்வாகி – மார்ட்டின் ரெக்ஸ் எல் புரோ – நிக்கில் வண்ணமயமானவர் – பிரசாத் சோமசேகர் டிஐ லைன் தயாரிப்பாளர் – கிருஷ்ணா ராவ் விஎஃப்எக்ஸ் தயாரிப்பாளர் – சந்திர மோகன். கே சோனி இசையில் இசை
தமிழகம் முழுவதும் சட்ட மன்ற தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. எம்.பி. கனிமொழி கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீரப்பாளையம் அண்ணா சிலை அருகே திமுக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருந்தார். சுமார் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கனிமொழியின் பிரசாரத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் அதிக கூட்டம் காரணமாக மருத்துவமனை செல்ல முடியாமல் நின்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் வாகனம் நிற்பதை கவனித்த கனிமொழி உடனடியாக தனது பிரசாரத்தை நிறுத்தி விட்டு தொடந்து ”ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுங்கள்” என்று கூட்டத்தினரிடம் கேட்டுக் கொண்டார். கனிமொழி ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வசதியாக மக்களை ஒழுங்குபடுத்தினார். இதனையடுத்து எந்த தடையும் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு இருந்து சென்றது. ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்த கனிமொழியின் இந்த…
