Author: Pradeepa

அரிசியுடன் ஒப்பிடும் பொது தானியங்கள் அதிக நன்மைகளை கொண்டுள்ளது. சாமையை ஆங்கிலத்தில் லிட்டில் மில்லட் என்று அழைக்கப்படுகிறது. தினசரி ஒரு வேளை சாமையை உணவாக எடுத்து கொள்ளலாம். இது எல்லா வயதினருக்கும் ஏற்றவை. எளிதில் ஜீரணிக்க கூடியவை. சிறிதளவு எடுத்துகொண்டாலும் வயிறு நிரம்பிவிடும். சாமையை சோறாக மட்டும் எடுத்து கொள்ளாமல் சாமை புட்டு, சாமை ரொட்டி, சாமை பிஸ்கட், சாமை பொங்கல், சாமை உப்புமா என்று விதவிதமாக சமைக்கலாம். சிறுதானியமான சாமையில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது. இது நார்ச்சத்து நிறைந்த உணவு, எளிய அளவு சர்க்கரை கொண்ட கார்போஹைட்ரேட் உணவு. சாமையில் வைட்டமின் பி சத்தில் நியாசின் என்னும் வைட்டமின் பி 6, ஃபோலிக் அமிலம் டிரிப்டோபென் உள்ளது. சாமையை தினமும் ஒரு வேலை எடுத்து கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து உள்ள சாமையை எடுத்து…

Read More

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஏப்ரல் மாதம் முதல், ரயில்கள் இயக்கம் சீராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலால், கடந்தாண்டு மார்ச், 22 ஆம் தேதி முதல், ரயில்களின் இயக்கம் முழுமையாக முடக்கப்பட்டது. கொரோனா பரவல் படிப்படியாக குறைத்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டது. ஆனால் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. வரும், 2021 ஏப்ரல்மாதம் முதல், முன்பதிவில்லா மற்றும் அனைத்து ரயில் இயக்கத்துக்கு அனுமதி அளிக்க, ரயில்வே அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், டில்லி மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும், இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஓராண்டு இடைவெளிக்கு பின், அனைத்து ரயில்களின் இயக்கம் சீராகும் என, பயணியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கொரோனா பரவலின் வேகம், ரயில் இயக்கம் தொடர்பான அறிவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

Read More

மகளிர் நலனுக்காக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி நாயக்கனூர் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் நடந்த பிரசாரத்தின்போது அவர் மகளிர் நலனுக்காக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 கிராமில் இருந்து 8 கிராம் ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. பேறு கால உதவித்தொகை 6 ஆயிரமாக இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. அதேபோல் மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயப்படுத்தியுள்ளார். ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதை நிறைவேற்றவில்லை. அவர்கள் கூறிய 2 ஏக்கர் நிலத்தை கொடுத்தார்களா?; அவர்களின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்றார். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அத்தனையும் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.

Read More

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது போல, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால், கடந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஓராண்டாக நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை; மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் ஓரளவு குறைந்து வந்ததால், இந்தாண்டு ஜனவரி19 முதல், மீண்டும் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடியாக வகுப்புகள் நடந்து வந்தது.ஆனால், பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மாணவ – மாணவியர் கடைப்பிடிக்க தவறியதால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மாநிலம் முழுதும் பல இடங்களில், பள்ளிகளில் கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களை தவிர, மக்கள் கூடும் மற்ற…

Read More

தமிழக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் நலனைக் கருதி கொண்டு வார சந்தைககளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்ற நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தது. கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் என்எல்சி நிறுவனம் உட்பட நெய்வேலி டவுன்ஷிப்பில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களின் நலன் கருதி அனைத்து வர…

Read More

சென்னையில் இருந்து குருவாயூர் – எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நெல்லை,எழும்பூர் செங்கொட்டை பகுதியில் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை அருகே திருமங்கலம் துலுக்கப்பட்டி இடையே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்கண்ட ரயில்கள் பகுதியாகவும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. (வண்டி எண்:06128) குருவாயூர் -எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் 29 ஆம் தேதி வரை நெல்லை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமர்க்கமாக எழும்பூர்-குருவாயூர் (வண்டி எண் :06127) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 21ஆம் முதல் 30 ஆம் தேதி வரை எழும்பூர் -நெல்லை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-செங்கோட்டை (வண்டி எண் :06181) இடையே இயக்கப்படும் ரயில் வருகிற 25 ஆம் முதல் 29 ஆம் தேதி வரை மானாமதுரை-செங்கோட்டை (வண்டி எண் :06182)இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் 26…

Read More

கோடையில் வெய்யிலில் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதை தடுக்கவும் வந்த சின்னம்மை விரைவில் குணப்படுத்தவும் நுங்கு உதவும். நுங்கு சாப்பிடுவதன் மூலம் சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புகளை தடுக்கும் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும். முடி உதிர்ந்த பகுதியில் பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூச புதிய முடி வளரும். அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவதால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது. வாரம் இருமுறை வேப்பம் பூவை ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும். வயிற்றுப்போக்கு நிற்க ஒரு ஆப்பிள் ,கால் டீ ஸ்பூன் சுக்கு சேர்த்து அரைத்து 2 வேளை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும். மேலும், மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். பீட்ருட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், ரத்த சோகையை சரிப்படுத்தும். தக்காளி: தக்காளி பழத்தின் அற்புத நன்மைகள்; வைட்டமின் கே…

Read More

விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ளதால் நம் நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உள்நாட்டு விமான சேவைக்கான குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, அடுத்த மாதம் இறுதி வரை செய்யப்பட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று டுவிட்டரில் ஏ.டி.எப்., எனப்படும் விமானத்திற்கு உபயோகிக்கப்படும் எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கருத்தில்கொண்டு விமான சேவையின் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து சதவீதம் உயர்த்தப்படுகிறது. எனினும், அதிகபட்ச விமான கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஒரு மாதத்தில், 3.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்தினால் 100 சதவீத விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Read More

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி 16 ஆம் வரை நடைபெற்றது. தமிழக தேர்தலில் போட்டியிடுவதற்காக 6,319 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்களில் ஆண்கள் 5,363 பேரும், 953 பேர் பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் திருநங்கைகள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் 450 பேர் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் மீதான பரீசிலனை இன்று நடைபெறுகிறது. இதில் தகுதி உள்ள மனுக்கள் தேர்தடுக்கப்பட்டு மாலையில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்ற விவரம் வெளியிடப்படும். வரும் 22ஆம் தேதி மாலைக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கடைசியாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம்…

Read More

தபால் வாக்கு செலுத்த தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்து 45ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் இதற்க்கான விண்ணப்பங்களை கடந்த 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை பெறப்பட்டது. தபால் வாக்கு செலுத்த அனுமதி கேட்டு 2 லட்சத்து 44 ஆயிரத்து 922 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2770 பேர் காவலர்களும், 33189 பேர் தேர்தல் பணியாளர்களும் உள்ளனர். 49114 பேர் மாற்றுத்திறனாளிகளும், 80 வயதுக்கு மேற்பட்ட முத்த குடிமக்கள் 1 லட்சத்து 59 ஆயிரத்து 849 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிந்துள்ளது. தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழ் மாநில காங்கிரஸ்(TMC) கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டள்ளது. இந்த 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் தமாகா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கைகள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். திடக்கழிவு மேலாண்மை பாடத்திட்டம் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும். மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம்(licence) பெற்றுத்தரப்படும். கல்லூரி மாணவர்களுக்கு நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும்.

Read More

இன்சூரன்ஸ் துறையில், எப்.டி.ஐ.(FDI) எனப்படும், அன்னிய நேரடி முதலீட்டை, 74 சதவீதமாக உயர்த்தும் மசோதாவுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அமளியில் ஈடுபட்டன. அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது; பின்பு, குரல் ஓட்டெடுப்பு நடத்தியதன் வாயிலாக மசோதா நிறைவேற்றப்பட்டது. பாஜக கட்சியை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். அது குறித்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ”இந்த மசோதாவில் பல பிரச்னைகள் இருக்கிறது. அதனால், இந்த மசோதாவை தேர்வு குழுவின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும்,” என்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் ராஜ்யசபா நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் கடந்த,…

Read More

தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, எட்டு மத்திய அமைச்சர்கள், இரு மாநில முதல்வர்கள், பிரசாரம் செய்ய உள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பாஜக கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலிலும்; 20 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னியாகுமரிக்கு வந்து இருந்த போது லோக்சபா தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மாவட்ட, மாநில நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரசாரம் செய்து வருகின்றனர். பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியினரை ஊக்கப்படுத்தவும், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா விரைவில், தமிழகம் வர உள்ளனர். பாஜக கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா…

Read More

இந்தியாவில் ரேஷன் கார்டுகளின் பயன்பாடு மிகவும் ஆவசியமான தேவைகளில் ஒன்றாகும். பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல கோடி கணக்கான பேர் தங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். எளிய மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 3 கோடி பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டுகளில் கருவிழி அடையாளம், கைரேகை பதிவு, ஆதார் எண் இணைக்காதது, கிராமப்புற மற்றும் ரிமோட் பகுதிகளில் இணையச் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடி பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுகுறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதை மத்திய அரசு மிகவும்…

Read More