நம் நாட்டு சமையலில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் வாழைக்காய் ஒன்றாகும்.

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளையும், அதாவது பூ, தண்டு, காய், பழம் ,இலை, நார் போன்ற அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம்.

விட்டமின் ஏ, சி, பி6 ஆகிய விட்டமின்கள் வாழைக்காயில் அதிக அளவு உள்ளது. மேலும் வாழைக்காயில் விட்டமின் இ, கே, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), ஃபோலேட்டுகள் ஆகியவைகளும் இருக்கிறது.

வாழைக்காயை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும்.

வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைககளை பார்ப்போம்.

வாழைக்காயில் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் கொண்டுள்ளது. வாழைக்காயை உணவில் சேர்த்து கொள்வதனால் குடல் சுத்தமாகும். மேலும் இதன் இயக்கத்தையும் அதிகப்படுத்தும். இதனால் மலத்தை இலகுவாக்கி,எளிதில் வெளியேற செய்கிறது. இதனால் மலச்சிக்கலும் குறையும்.

உடல் எடை குறைய வேண்டும் என்றால் வாழைக்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வாழைக்காய் குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. இதனால் உடல் எடைக் குறைக்கிறது.

அளவின்றி சாப்பிடுவது தான் வயிறு பருமனாக முக்கிய காரணமாகும். சிலருக்கு தாங்களே நினைத்தாலும் சாப்பிடும் அளவினைக் கட்டுப்படுத்த முடியவது இல்லை.

இவர்கள் பழுக்காத வாழைப்பழத்தினை உண்பதின் மூலம் சாப்பிட்ட நிறைவை பெறலாம். அதனால் அதிக அளவு உணவினை உண்ணத் தோன்றாது. இதனால் உடல் பருமனும் குறையும்.

வாழைக்காய் மற்றும் பச்சை வாழப்பழம்,பழுக்காத பழம் ஆகிய மூன்றுமே ரத்த செல்களில் உள்ள குளுகோஸ் அளவு குறைவதைத் தடுக்கிறது.

இதனால் இன்சுலின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் மன அழுத்தம் உருவாகுவதை தடுத்து மன அமைதியைப் பெறலாம்.

வாழைக்காய் ஜீரண உறுப்புகளுக்கும், உணவுக்குழாய்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. இது குடலில் இருக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் அசிடிடி வராமல் வயிற்றையும், குடல்களையும் பாதுகாக்கிறது.

பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும்,நச்சுக்களையும்
வாழைக்காய் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடல் புற்று நோய் வராமல் தடுக்க முழுகவசமாய் செயல்படுகிறது.

எலும்பிற்கு போதிய பலம் தரும் வாழைக்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் ஆஸ்டியோ போரோஸிஸ்,மூட்டு வலி ஆகிய நோய்கள் வராமல் பார்த்து கொள்ளலாம்.

See also  விஜய் டிவி சீரியலில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலங்கள் ஷிவாங்கி மற்றும் பாலா