கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீடு வீடாக சென்று மின்சார ரீடிங்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் நுகர்வோர் செலுத்திய மின் கட்டண தொகையையே இந்த மே மாதமும் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் மின் கட்டணம் கூடுதலாகவோ அல்லது குறைவாக இருந்தால் மின்சாரத்திற்கும் கட்டணம் செலுத்துவதில் பிரச்சனை ஏற்படும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் மக்கள் தங்களுடைய மின்சார ரீடிங்கை பார்த்து சுய மதிப்பீடு செய்து புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் மின்சார வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். புகைப்படம் அனுப்ப வேண்டிய தொலைபேசி எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விபரங்களை ‘www.tangedco.gov.in’ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

வாட்ஸ்ஆப் மூலம் புகைப்படம் அனுப்புவோர் தங்களுடைய மின் கட்டணத்தை இணையதளத்தின் வழியாக செலுத்த வேண்டும்.