சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் கடந்த ஆண்டு அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியானது. நடிகர் சூர்யாவின் 38 வது திரைப்படம். இந்த திரைப்படத்தில் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஊர்வசி, கருணாஸ், விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் அவரின் சுயசரிதையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சினிமா தகவல்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற இணையதளம் ஐஎம்டிபி. 1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரை போற்று திரைப்படம் அதிக புள்ளிகள் பெற்று 3 வது இடத்தை பிடித்துள்ளது. 9.1 புள்ளிகளை பெற்று ஷஷாங்க் ரிடம்ப்ஷன் முதல் இடத்திலும், காட்பாதர் திரைப்படம் இரண்டாம் இடத்திலும், சூரரை போற்று திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 1000 திரைப்படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் முதல் 60 திரைப்படங்களின் பட்டியலின் 4 தமிழ்…
Author: Pradeepa
ஹைலைட்ஸ் : அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 10.00 வரை செயல்பட அனுமதி வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் செய்யப்பட அனுமதி மே 17 ஆம் தேதி முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே செயல்படும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 10.00 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 335 பேர் கொரோனவால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 17,670 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அதிகரித்து கொண்டு…
டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் சேர்ந்து கொரோனா சிகிச்சைக்கு உதவும் டிஆர்டிஓ வின் புதிய கொரோனா தடுப்பு மருந்தான 2-DG ஐ பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். டிஆர்டிஓ வின் இன்மாஸ் ஆய்வக விஞ்ஞானி கண்டுபிடித்த 2-DG தடுப்பு மருந்து பவுடர் வடிவில் உள்ளது. இந்த பவுடரை நீரில் கலந்து பருகினால் 2 அல்லது 3 தினங்களுக்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் தொற்று சரி ஆகிவிடும் என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டதாக டிஆர்டிஓ கூறியுள்ளது. இந்த மருந்தின் மூலம் ஆக்ஸிஜன் தேவையும் குறைவதாக தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் டிஆர்டிஓ உடன் சேர்ந்து 2-DG மருந்தை தயாரிக்கிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று(17 ஆம் தேதி) முதல் மாவட்டங்களுள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பயணம் செய்ய e-pass கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. E-pass விண்ணப்பிக்கும் முறை இணைய பதிவு செய்ய https://eregister.tnega.org/#/user/pass என்ற இணையதள முகவரியை open செய்ய வேண்டும். தொலைபேசி எண்ணை பதிவு செய்த பின் OTP தொலைபேசி எண்ணிற்கு வரும் அதை பதிவு செய்த பிறகே உள்நுழைய முடிவும். இதில் மூன்று வகையான அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த வகையில் பயணம் செய்ய போகிறோம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். தனி நபர்/குழு சாலை வழி பயணம். தனி நபர்/குழு ரயில்/விமானம் வழி தமிழ் நாட்டின் உள் நுழைதல். தொழில் நிறுவனங்கள் பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கு நான்கு வகையான காரணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.…
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ரெம்டெசிவர் தடுப்பு மருந்து சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து உள்ளது. சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்த தமிழக முதல்வர் தலைமையில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ரெம்டெசிவர் தடுப்பு மருந்து நாளை முதல் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவர் தடுப்பு மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதால் மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு இந்த நடவடிக்கையை…
திருமணம் நடந்து முடித்த பின் அனைத்து உறவு முறைகளும் எதிர்பார்ப்பது குழந்தை யோகம் தான். கர்ப்பம் ஆவது என்பது எளிமையான ஒன்று அல்ல. சில தம்பதியினருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இந்த காலகட்டத்தில் நம் வாழ்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் உடல் நலத்தை கெடுத்து கர்ப்பமாவதில் குழப்பத்தை உண்டாக்குகின்றன. எனவே நாம் சரியான உணவு முறையை கையாளவேண்டும். அந்த வரிசையில் பெண்களும் ஆண்களும் எந்த உணவு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகள், பழவகைகள், சிறுதானிய வகைகள் மற்றும் பருப்புவகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சமையலை சமைத்து உண்ணலாம். அதில் கோதுமை மாவில் பாதாம் பொடியை சேர்த்து அதனை சப்பாத்தி செய்து சாப்பிட்டு வரலாம். நல்ல பலன்கள் கிடைக்கும். மாதுளை பழத்தில் ஆண்களுக்கான விந்தணுவை அதிகமடைய செய்வதால் இதை தினமும் ஆண்கள் உண்டு வரலாம். இதை…
தமிழ்நாடு தபால் துறை (அஞ்சல் துறை) ஓவியர் மற்றும் ஓட்டுநர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மே மாதம் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணி – Driver, painter காலியிடங்கள் – 35 மாத சம்பளம் – Rs.19,900 – 63,200 பணி இடம் – தமிழ்நாடு விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன் கல்வி தகுதி Painter – 8 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். Driver – 10 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் எஸ்சி / எஸ்டி மற்றும் பெண்களுக்கு கட்டணம் இல்லை. மற்ற வேட்பாளர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். பட்டியலிடப்பட்டவர்கள் ரூ.400 செலுத்த வேண்டும். தேர்வு செய்யும் முறை – எழுத்து தேர்வு/தேர்முக தேர்வு தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப வடிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை ஆவணங்களுடன் மூத்த மேலாளர், மெயில்…
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் GST கவுன்சில் கூட்டத்தை மே 28 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்துவதாக இன்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2021 மே 28 ஆம் தேதி புதுதில்லியில் காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் GST கவுன்சிலின் 43 வது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில நிதியமைச்சர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கும் பிறகு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 2020 ஆண்டு GST கவுன்சிலின் 42-வது கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெற்றது. 2021-இல் நடைபெறும் முதல் GST கவுன்சில் கூட்டம் என்பதால் நிலுவையில் உள்ள பல்வேறு விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்…
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்குவதாக அறிவித்து இருந்தார். இந்த நிவாரண நிதி ரேஷன் கடைகள் மூலம் அளிக்கப்படும் என்று கூறினார். இதற்க்கான பணி அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று தொடங்கியது. சென்னையில் உள்ள சிந்தாதிரி பேட்டையில் கொரோனா நிவாரண நிதியாக 2000 வழங்கும் திட்டத்தை திமுக கட்சியின் எம்.எல்.எ மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சிந்தாதிரி பேட்டையில் ஒரே இடத்தில் நான்கு ரேஷன் கடைகள் அமைத்துள்ளது. 4 கடைகளிலும் நிவாரண நிதி வழங்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்தனர். ஒரு நாளைக்கு 200 பேருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் கொரோனா நிவாரண நிதியாக 2000 வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்…
நம் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது மிக அவசியம். அதில் ஊட்டச்சத்து நிறைத்த சிறு தனியா வகைகளை நம் உணவில் பயன்படுத்துவது முக்கியம். அந்த வகையில் பச்சைப்பயிறு என்னும் பருப்பு வகையை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது. ஊட்டச்சத்து நிறைத்த பொருட்களை உணவில் எடுத்துகொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. ஊட்டசத்து என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது புரதம் தான். அதாவது பச்சைப்பயிரில் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. இந்த கொரோனா நோய் பரவல் காலத்தில் அதிக அளவு சக்தி நிறைத்த உணவுகளை பயன்படுத்துவது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவல்லது. உணவில் மட்டுமல்லாமல் நம் முகத்திற்கும் இந்த தானியத்தை பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். பச்சைப்பயிரில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளதால் இதை உண்பவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தரும். பச்சைப்பயிரில் குறைத்த அளவு கொழுப்பு உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் இந்த பயிரை தினமும் பயன்படுத்தலாம். பச்சைப்பயிரை முளைகட்டி…
மறைந்த ஸ்பானிஷ் ஓவியரான பப்லோ பிக்காசோவின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் பெண் என்ற ஓவியம் நியூயார்க் மாகாணத்திலுள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் எலமிடப்பட்டது. பப்லோ பிக்காசோ வரைந்த இந்த ஓவியம் 1932 ஆம் ஆண்டு நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த பெண் ஓவியம் 403 கோடிக்கு ஏலம்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. எலாம் தொடங்கப்பட்ட 19 நிமிடத்திற்குள் 758 கோடி ரூபாய்க்கு ஏலம்போனதாக கிறிஸ்டி ஏல மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் மாநிலம் முழுவதும் பெரும் பேரழிவை சந்தித்து வருகின்றது. இதனால் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையை தொடரமுடியாமல் பலரும் பல இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில் மக்கள் பயன்பெறும் வகையில் ஜியோ நிறுவனம் ஒரு அறிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா பேரிடர் காலத்தில் ஜியோ சிம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி. கொரோனா பேரிடர் காலம் முழுவதும் ஜியோ பயனாளர்கள் ஒரு நாளுக்கு 10 நிமிடம் இலவச அழைப்புகள் என்று மாதத்துக்கு 300 நிமிடம் வழங்கப்படவுள்ளது. ஜியோ நிறுவனம் ரிலையன்ஸ் பவுண்டேஷன் உடன் சேர்ந்து இந்த சலுகையை அறிவித்துள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பித்துள்ளதால் பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காற்றை போல பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரவல் அதிகரித்து வருவதால் நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார்கள் குறித்து சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சாதாரண ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ.,க்கு ரூ.1,500 ஆகவும், பிறகு கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் 10 கி.மீ ,க்கு ரூ.2000 ஆகவும், கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கி.மீ.,க்கும் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் வசதி உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களில் முதல் முதல் 10 கி.மீ ,க்கு ரூ.4000 ஆகவும், கூடுதலாக செல்லும் ஒவ்வொரு…
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தடுப்பு மருத்து ரெம்டிசிவிர். ரெம்டிசிவிர் தடுப்பு மருந்து சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் டோக்கன் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக உள்ளததால் ரெம்டிசிவிர் தடுப்பு மருந்து விற்பனை சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9.00 மணி முதல் நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டிசிவிர் தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படும். ஒரு நாளைக்கு 300 பேருக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நேரு விளையாட்டு அரங்கில் கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
